லிபியாவில் அரசுக்கெதிரான ஊர்வலத்தில் ராணுவம் துப்பாக்கி சூடு : 200 பேர் பலி?
Page 1 of 1

பெய்ரூட் : துனிஷியாவில் அரசுக்கெதிராக கிளம்பிய மக்கள் புரட்சியின் விளைவாக துனிஷிய அதிபர் நாட்டை விட்டு ஓடி போனதோடு எகிப்திலும் 30 ஆண்டு காலமாய் ஆட்சி செய்து கொண்டிருந்த முபாரக் பதவி துறக்க நேரிட்டது. இத்தோடு நில்லாமல் ஒட்டு மொத்த மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இப்புரட்சியின் பொறி பரவி வருகிறது. வளைகுடாவின் எண்ணைய் வளம் மிக்க பஹ்ரைன், ஏழை நாடான ஏமன், வட ஆப்பிரிக்காவில் துனிஷியாவின் அண்டை நாடுகளான லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ, கிழக்கு ஆப்பிரிக்க தேசமான டிஜிபோட்டி, ஏன் சீனாவின் சில பகுதிகளை கூட விட்டு வைக்கவில்லை.
லிபியாவில் கடந்த ஒரு வாரமாக அரசுக்கெதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இச்சூழலில் இன்று லிபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பென்காஸி எனும் நகரில் ஒரு பிண ஊர்வலத்தில் சென்ற மக்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். ராணுவம் சிறப்பு கமோண்டாக்களும் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில் 200 நபர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
லிபியாவை 40 வருடங்களுக்கு மேலாக ஆண்டு கொண்டிருக்கும் அதிபர் கடாபியின் அரசுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து வெளிநாடுகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வசதி துண்டிக்கப்பட்டு உள்ளது. அது போல் சனிக்கிழமையன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களை சிறப்பு கமாண்டோக்கள், விசேஷ வெளிநாட்டு படையினர் மற்றும் கடாபியின் ஆதரவாளர்கள் ஒன்று கூடி துப்பாக்கியால் சுட்டும் கத்தி மற்றும் பிற ஆயுதங்களை கொண்டு தாக்கினார்கள்.
மேலும் கடாபி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சுவிஸ்டர்லாந்து மற்றும் அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றதோடு கடாபியின் உருவ படங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. லிபியாவுக்கு மருத்துவ பொருட்களும் எகிப்திலிருந்து அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நேரம்

Similar topics
» மின்சாரம் கேட்டுப் போராடிய பொதுமக்கள்மீது துப்பாக்கி சூடு!
» சிரியா:எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் தாக்குதல் – 41 பேர் மரணம்
» ஆந்திர மாநிலம் அதொனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் – இருவர் பலி
» முருகையன் துப்பாக்கி சூட்டில் இறக்கவில்லை - இந்திய தூதரகம்!
» லிபியாவில் நேட்டோவின் கோரத்தாண்டவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum