1250 மடங்கு அணுக்கதிர்வீச்சு அதிகரித்துள்ளது : ஜப்பான்!
Page 1 of 1

பூகம்பத்தால் செயலிழந்த அணு உலைகளில் இருந்து பரவும் கதிர்வீச்சு, உலைகளை ஒட்டியுள்ள கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 1,250 மடங்கு அதிகரித்துள்ளது என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த அளவு, அணு உலையில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் கடற்பரப்பில் பதிவாகியுள்ளது. இதனால் கடற்வாழ் உயரினங்கள் மட்டுமின்றி, நிலத்தடி நீரும் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டாய்ச்சா அணு உலைகளைச் சுற்றியுள்ள நீர் நிலைகளிலும் அணுக் கதிர் வீச்சு அதிகரித்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட இரண்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
அணு உலைகளின் வெப்பத்தைத் தணிக்க கடல் நீருக்குப் பதிலாக நிலத்தடி நீரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது கடல் நீரை விட அணு உலைகளை வேகமாக குளிர்விக்கும் என்று கூறப்படுகிறது.
அணு உலைகளை ஒட்டிய கடற்பகுதியில் கடந்த வாரம் இருந்த அணுக் கதிர் வீச்சு அளவைக் காட்டிலும் இந்த வாரம் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள ஜப்பான் அரசு அதிகாரிகள், இதனால் கடல் வாழ் உயரினங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ளனர்.
ஜப்பான் அணு உலை பாதுகாப்பு முகமையின் பேச்சாளர் ஹிடேஹிக்கோ நிஷியாமா, கடல் நீரில் கலக்கும் கதிர் வீச்சு அலைகளி்ன் மூலம் பரவும் என்றும், அவைகளைக் கடலில் உள்ள பாசிகளும், உயிரினங்களும் செரிமானித்துக்கொள்ளும் என்றும், அது ஐயோடின் கதிர்வீச்சு ஆகையால், 8 நாட்களுக்கு மேல் தாக்கம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அணு உலைகளால் ஏற்பட்டுள்ள ஆபத்தை மிக வெளிப்படையாகவே பேசிவரும் ஜப்பான் பிரதமர் நவோட்டோ கேன், "இப்போதுள்ள சூழ்நிலை அனுமானிக்க முடியாத நிலை இருக்கிறது. அது மோசமாகிவிடாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு, பகலாக பணியாற்றிவரும் ஊழியர்களைப் பிரதமர் கேன் பாராட்டியுள்ளார்.
இந்நேரம்

Similar topics
» ஜப்பான் தரும் படிப்பினைகள்
» மீண்டும் ஒரு அணுவெடிப்பா? பீதியில் ஜப்பான் மக்கள்
» பூமி அச்சில் இருந்து ஜப்பான் சில அடிகள் நகர்ந்தது
» ஈரானின் மனிதாபிமானத்திற்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறது ஜப்பான்
» புகுஷிமா:இஸ்ரேல் மீது ஜப்பான் பத்திரிகையாளர் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum