தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அஞ்சுவதும் ! அடிபணிவதும் !!

Go down

அஞ்சுவதும் ! அடிபணிவதும் !! Empty அஞ்சுவதும் ! அடிபணிவதும் !!

Post by srivai.khader Sat Apr 11, 2015 10:49 am

அஞ்சுவதும் ! அடிபணிவதும் !!

நாம் அஞ்சுவதும், அடிபணிவதும்
அந்த அல்லாஹு ஒருவனுக்கே !

நாம் கெஞ்சுவதும், அழுது கேட்பதும்
வல்லோன் அவனிடத்தே !

நாம் தொழுவதும், மண்டி இடுவதும்
அந்த அர்ஷின் அதிபத்திகே !

நாம் தேவைகளை கேட்டு பெறுவது
அந்த கருணை மிக்கவனிடமே !

நாம் கேட்காமல் அள்ளி தருவதும்
அந்த தூயோன் ரஹுமானே !

நம் வணக்கமும் , நீயத்தும் அவனுக்கே
கூலிகளை தருவதில் ஆற்றல் மிக்கவனே !

நாம் பசித்திருந்து , விழித்திருந்து -ரமழான்
நோன்பு நோற்றோம் அவனுக்காக

பண்மடங்கு கூலிகளை வாரி வழங்குவான்  
அடியான் நமக்கு உறுதியாக !

கொடிய பாவங்களுக்கு துவா கேட்போம்
மன்னிப்பதில் அவனே இறுதியானவன் !

நம் மரணத்தையும் , நம்மையும் அறிந்த
வலிமைமிக்கவன் அவன் ஒருவனே !

நாளை தீர்ப்பு நாளில் நமது கணக்குகளை
நேர் செய்வதும் அந்த கருணையாளனே !

நம்மை உலகில் படைத்து, பரிபாளித்தவன்  
அந்த ஆற்றல் மிக்கவனே !

நாம் ஈமானில் உறுதியோடு ,இறுதிவரை
அவனிடமே அஞ்சுவோம் ! அடிபணிவோம் !!

கவிஞர்.கவிநேசன்.
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4865
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum