தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இனப்படுகொலை-மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும்-அமெரிக்கா

Go down

இனப்படுகொலை-மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும்-அமெரிக்கா  Empty இனப்படுகொலை-மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும்-அமெரிக்கா

Post by முஸ்லிம் Thu May 26, 2011 6:03 pm

புதுடெல்லி:2002-ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில் மோடியின் பங்கினை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

ஆதாரங்களை மூடி மறைத்தது உள்பட குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பரிசோதிக்க வேண்டும் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அரசு ஏஜன்சி வலியுறுத்தியுள்ளது.

நரேந்திர மோடியை ஊழல் இல்லாத பொறுப்பு மிக்க ஆட்சியாளராக மும்பையில் அமெரிக்க தூதர் கருத்து தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. இதன் பின்னணியில் அமெரிக்க அரசு கமிஷன் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது.

அமெரிக்க பெடரல் சட்டத்தின் படி 1998-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன். அமெரிக்க கமிஷன் வெளியிட்டுள்ள புதிய வருடாந்தர அறிக்கையில் தான் இவ்விபரம் அடங்கியுள்ளது. குஜராத் இனப்படுகொலையில் நரேந்திர மோடி மீது விசாரணை நடத்த வேண்டுமென அமெரிக்கா இரண்டு தடவை கோரிக்கை விடுத்திருந்தது. 2005-ஆம் ஆண்டு நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா அளிக்க மறுத்ததற்கு இக்கமிஷனின் சிபாரிசு தான் காரணமாகும்.

கடந்த காலங்களில் நடந்த வகுப்பு கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி செய்வதில் இந்தியாவின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை மேலும் அவற்றில் வேகம் இல்லை என மதிப்பீடு செய்த அமெரிக்கா ‘பரிசோதனை’ நாடுகளின் பட்டியலில் இந்தியாவை உட்படுத்தியது.

எல்லா பிரிவினருக்கும் பூரணமாக மத சுதந்திரம் அனுபவிக்க முடியாத நாடுகளை அமெரிக்கா ‘பரிசோதனை’ நாடுகளின் பட்டியலில் உட்படுத்தும் என அவ்வறிக்கை கூறுகிறது. 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிராக பெரிய அளவில் கலவரம் நடைபெறாவிட்டாலும் கூட பல்வேறு மதத்தினருக்கு பாதுகாப்பும், ஊக்கவிப்பும் அளிக்கும் விஷயத்தில் கடந்த ஒருவருட செயல்பாடு போதுமானதல்ல என கமிஷன் கூறுகிறது.


இனப்படுகொலை-மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும்-அமெரிக்கா  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10942
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மேற்காசிய நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் – அமெரிக்கா
» குஜராத் இனப்படுகொலை:முன்னாள் அமைச்சர் ஜடேஜாவிடம் குறுக்கு விசாரணை
» ‘ஈராக் ஃபலுஜாவில் என்னுடைய பங்கு குறித்து நான் மன்னிப்பு கோருகிறேன்’ – ரோஸ் கேபுட்டி
» குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை: முன்னாள் அமைச்சர் ஜடேஜாவை விசாரணை செய்ய அனுமதி
» போர்ப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடுக் குறித்து சி.பி.ஐ விசாரணை: பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum