தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

டெல்லி குண்டுவெடிப்பு: குவியும் இமெயில்கள்

Go down

டெல்லி குண்டுவெடிப்பு: குவியும் இமெயில்கள்  Empty டெல்லி குண்டுவெடிப்பு: குவியும் இமெயில்கள்

Post by முஸ்லிம் Sat Sep 10, 2011 8:23 pm

டெல்லி:டெல்லி உயர்நீதிமன்ற
குண்டுவெடிப்பு தொடர்பாக மூன்றாவதாக வந்துள்ள இமெயிலில் குஜராத்
மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல்
விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்
நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் 90-க்கும்
அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஹுஜி தீவிரவாத இயக்கம்
பொறுப்பேற்பதாக முதலில் ஒரு இமெயில் அனுப்பப்பட்டது. அந்த இமெயில்
காஷ்மீரிலிருந்து வந்ததை அறிந்த அதிகாரிகள் சிலரை விசாரித்து கைது
செய்தனர்.

இந்நிலையில் நேற்று வந்த இரண்டாவது
மெயிலில், டெல்லி குண்டுவெடிப்பிற்கு நாங்கள் பொறுப்பேற்பதாக இந்தியன்
முஜாஹிதீன் தெரிவித்துள்ளது. இந்த இமெயில் கொல்கத்தாவிலிருந்து
அனுப்பப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் வருகிற 13 ஆம் தேதி
செவ்வாய்க்கிழமையன்று வணிக வளாகம் ஒன்றிலும் குண்டுவெடிப்பு தாக்குதல்
நடத்தபோவதாகவும் அதில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

வல்லுநர்களை குழப்பக்கூடிய வகையில் நவீன
தொழில்நுட்ப உதவியுடன் ரஷ்யாவிலிருந்து மூன்றாவது மெயில் வந்துசேர்ந்தது.
இதுவும் இந்தியன் முஜாஹிதீனின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. அரசிற்கும்,
சில ஊடகங்களுக்கும் இன்று வந்த இந்த மூன்றாவது இமெயிலில், அடுத்ததாக
அகமதாபாத் நகரில் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இமெயில்கள் மற்றும் தடயவியல் பரிசோதனை முடிவுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக அமைந்துள்ளது . பாஜக
ஆளும் மாநிலமான குஜராத்தின் காந்திநகர் பகுதியில் ஒரு தடயவியல் சோதனை
கூடமும் மற்றொன்று ஹைதராபாத்திலும் தான் இருக்கிறது. அதேபோல பி.எஸ்.என்.எல்
தொலைபேசி மற்றும் இணையதள சேவை மையத்தின் முக்கிய அலுவலகமும் பாஜக அரசின்
கட்டுப்பாட்டில் உள்ள கர்நாடகத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது
.


டெல்லி குண்டுவெடிப்பு: குவியும் இமெயில்கள்  Logo-to
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11125
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி குண்டுவெடிப்பு மிருகத்தனமானது – அப்சல் குரு
» டெல்லி குண்டுவெடிப்பு:அப்பாவியை கைது செய்த என்.ஐ.ஏ
»  டெல்லி உயர்நீதிமன்றதில் குண்டுவெடிப்பு 12 பேர் பலி 75-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
» டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு -9 பேர் பலி! பலர் படுகாயம்!
»  டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு : பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum