நாளை அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் அதிதீவிர பாதுகாப்பு
Page 1 of 1

நாளை அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி தேசமே பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது.
மக்களின் அச்சத்தைப் போக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்ட அனைத்து மாநில நிலைமைகளையும் உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது.
நாடு முழுவதும் 16 இடங்களில் மத்தியப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை உடனுக்குடன் அழைத்துச் செல்ல விமானப் படையின் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன.
அயோத்தி நில விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.
இதனால் நாடு முழுவதும் அச்சமான சூழ்நிலை நிலவுவதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வன்முறைகள் மூளாமல் தடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக நிலைமையை கண்காணிக்க டெல்லியில் உள்துறை அமைக்கம் கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளது. அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆய்வு செய்தார்.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த இடங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பது குறித்து இன்டலிஜென்ஸ் பீரோ கொடுத்துள்ள உளவுத் தகவல்களின் அடிப்படையில், அந்தந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மிகவும் பிரச்சனை மிகுந்த இடங்களுக்கு மத்தியப் படைகள் அனுப்பப்பட்டுவிட்டன. கலவரம் நடக்கலாம் என்று கருதப்படும் இடங்களுக்கு மிக அருகில் இந்தப் படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மோதல் ஏற்பட்டால், இந்தப் படைகள் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று சேரும் வகையில் வசதிகளை செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி, அகமதாபாத், கோவை, டார்ஜிலிங் உள்ளிட்ட நாட்டின் 16 இடங்களி்ல் மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்புபடை உள்ளிட்ட மத்திய துணை ராணுவ படைகள் தவிர, தேசிய பாதுகாப்பு படை, கமாண்டோ படை, அதிவிரைவு படை, ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை உடனுக்குடன் அழைத்துச் செல்ல விமானப் படையும் தயாராக உள்ளது.
எங்காவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், உடனடியாக அந்தப் படையினர் சம்பவ இடததை அடைய விமானப் படைக்குச் சொந்தமான ஐ.எல்.-76 மற்றும் ஏ.என்.-32 ரக விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
தட்ஸ்தமிழ்

Similar topics
» வாழ்நாள் முழுவதும் சிறை: பரபரப்பு தீர்ப்பு!
» கஷ்மீரில் பலத்த பாதுகாப்பு:நாளை ஹுர்ரியத் முழு அடைப்பு
» தாலிபான்களால் விடுவிக்கப்பட்ட பிரான்சு பத்திரிகையாளர்கள் நாடு திரும்பினர்
» உலகின் சக்தி வாய்ந்த நாடு கத்தார்!
» அயோத்தி தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum