அரபு வசந்தம்: பாக்கிஸ்தானிலும் நடக்க இம்ரான்கான் விருப்பம்
Page 1 of 1

துனிஷீயா,
எகிப்து, லிபியா ஆகிய அரபுநாடுகளில் மக்கள் ஒன்று திரண்டு நீண்ட கால
சர்வாதிகாரிகளைத் துரத்தியும், வீழ்த்தியும் புரட்சி செய்தனர். இந்தப்
புரட்சி ‘அரபு வசந்தம்’ என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
பாக்கிஸ்தானிலும்
அத்தகைய மக்கள் புரட்சி காலத் தேவையாக உள்ளது என்று தஹ்ரீக்கெ இன்சாஃப்
கட்சித் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் அணித்தலைவருமான
இம்ரான் கான் கூறியுள்ளார்.
லாஹுரில்,
மினாரே பாக்கிஸ்தான் என்னுமிடத்தில் கூடிய 50,000க்கும் மேற்பட்ட
ஆதரவாளர்களிடையே, பேரணியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். “மாற்றத்தை
முன்னெடுப்போம்” என்றொரு முழக்கத்தைப் பற்றிக்கொண்ட இம்ரான்கான், “இந்த
நாடு, திருடர்களிடமிருந்தும், சுரண்டல்வாதிகளிடமிருந்தும்,
ஊழல்பேர்வழிகளிடமிருந்தும் விடுதலைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது”
என்றார். (லாஹூரின் மினாரே பாக்கிஸ்தான் என்னுமிடத்தில் தான்
‘பாக்கிஸ்தானின் தனி நாடு கோரிக்கைத் தீர்மானம் 1940ல் நிறைவேற்றப்பட்டது
என்பது நினைவு கூரத்தக்கது)
இதே
இடத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பாக, நவாஸ் ஷரீஃபின் சகோதரர் ஷாபாஸ்
ஷரீஃப் தலைமையில் நவாஸ் ஷரீஃபின் முஸ்லிம் லீக் (ந) கட்சியும் 30,000
ஆதரவாளர்களுடன் பேரணி கண்டிருந்தனர்.
“பாக்கிஸ்தான்
அதிபர் ஸர்தாரி, கூட்டணியின் நவாஸ்ஷரீஃப் இருவரையும் கடுமையாகத் தாக்கிப்
பேசிய இம்ரான்கான், “பாக்கிஸ்தான் அரசியலில் இனியும் இவர்களைப்
பொறுத்துக்கொண்டிருக்க முடியாது, இது மாற்றத்திற்கான நேரம்” என்றார்.
“எங்கள் கட்சி வெற்றியடைந்தால், இஸ்லாமிய அரசை, நபிகள்நாயகத்தின்
வழிகாட்டும் நெறிமுறைகளின்படி அமைத்து அரசாள்வோம்” என்றார் இம்ரான்கான்.
“நாடு
வாழட்டும்; நச்சு அரசியல் வீழட்டும்” என்ற கருத்தை முழங்கிய இம்ரான்கானின்
கட்சி பாக்கிஸ்தானின் தேசியப் பேரவையில் இடம் பெற்றிருக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களிடையே
உள்ளூற வேரூன்றாதது, தேர்தலில் வெல்வதற்குப் போதுமான ‘தகுதி’களை
வளர்த்துக்கொள்ளாதது ஆகியவை இம்ரான்கான் கட்சியின் பலவீனங்கள் என்று
அரசியலறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்நேரம்

Similar topics
» அரபு வசந்தம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரானது – கொமேனி
» பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரர்கள் கைது!
» அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக இம்ரான்கான் ஆர்ப்பாட்டம்!
» ஆப்கானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற அமெரிக்காவிற்கு உதவ தயார்-இம்ரான்கான்
» எனக்கு பின்னால் ரகசிய சக்திகள் இல்லை – இம்ரான்கான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum