இடைத்தேர்தல்:2 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி – பா.ஜ.கவுக்கு பின்னடைவு
Page 1 of 1

புதுடெல்லி:பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் முப்பது ஆண்டுகளாக
ஐ.என்.எல்.டி கட்சியின் வசமிருந்த கதியா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ்
வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 46
இடங்களுடன் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக விளங்குகிறது. ஹரியானாவில்
மொத்த இடங்கள் 90 ஆகும்.
பா.ஜ.க ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில்
அக்கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த நாலாகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்
1598 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். ஆனால், காங்கிரஸ்
கட்சியின் தொகுதியான ரேணுகாவில் பா.ஜ.க 3596 வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றுள்ளது.
ஒடிஸாவில்(ஒரிஸ்ஸா) உமர்கோட் தொகுதியில்
பா.ஜ.க வேட்பாளரை பின்னுக்கு தள்ளி ஆளுங்கட்சியான பி.ஜே.டியின் வேட்பாளர்
வெற்றி பெற்றுள்ளார். மும்முனை போட்டி நடந்த இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி
3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. பெல்லாரியில் சுயேட்சை வேட்பாளர்
ஸ்ரீராமுலு வெற்றிப் பெற்றுள்ளார். பா.ஜ.க ஆளும் கர்நாடகா மாநிலத்தில்
அக்கட்சியின் வேட்பாளர் டெபாசிட்டை இழந்து படுமோசமான தோல்வியை
தழுவியுள்ளார்.

Similar topics
» ஹமீது அன்சாரி மீது அபாண்டம்: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
» ஹிசாரில் ஜன்ஹித் காங்கிரஸ் வெற்றி; வெற்றிக்கு அன்னா ஹசாரே காரணமல்ல- குல்தீப்
» மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் – காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடம் – அன்னாவினால் எந்த பாதிப்பும் இல்லை
» பொருளாதார நெருக்கடி: ஐரோப்பிய யூனியனின் திட்டத்திற்கு பின்னடைவு
» குஜராத் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் – மோடி அரசுக்கு மேலும் பின்னடைவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum