தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஸ்ரேல் மசூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை

Go down

இஸ்ரேல் மசூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை Empty இஸ்ரேல் மசூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை

Post by முஸ்லிம் Tue Dec 13, 2011 5:31 pm

இஸ்ரேலில் உள்ள மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதிக்கும்
புதிய சட்டத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹு(Benjamin Netanyahu)
ஆதரவு தெரிவித்துள்ளார்.இஸ்ரயீல் பெய்டெய்னு கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர் அனஸ்டசியா மிக்கேலி இஸ்ரேல் நாட்டில் உள்ள மசூதிகளில்
தொழுகைக்கு மக்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கியைத் தடை
செய்யும் விதத்தில் புதிய சட்ட பிரேணனை ஒன்றைக் கொண்டு வந்துள்ளார்.

இந்தச் சட்டத்தின்படி எந்த விதமான மதத் தலங்களிலும் மக்களுக்கு இடையூறு
செய்யும் வகையில் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது. எனினும்
மசூதிகளில் ஒலிப்பெருக்கிப் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில் இம்மசோதா
கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மிக்கேலி கூறுகையில், இதுபோன்ற ஒலிப்பெருக்கி அழைப்புகளால்
இஸ்ரேல் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மதச் சுதந்திரம்
என்கிற பெயரால் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படக் கூடாது என்ற உலக நோக்கில்
இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மதப் பிரச்னை அல்ல. சுற்றுச் சூழல்
பிரச்னை என்றார்.

இதை வரவேற்றுள்ள பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹு, ஐரோப்பாவை விட அதிக சுதந்திரம் இஸ்ரேலில் தேவையில்லை என்றார்.

இந்த ஒலிப்பெருக்கியால் அவஸ்தைப்படும் மக்கள் என்னிடம் முறைப்பாடு
தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும் இதே பிரச்னை இருந்தது.

பெல்ஜியம், பிரான்ஸ் போன்றவை சட்டப்பூர்வத் தடை கொண்டு வந்தன. அதே தடையை இங்கு ஏன் கொண்டு வரக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.

இருப்பினும் துணைப் பிரதமர், அமைச்சர்கள் சிலர் இந்த சட்டத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இதன் மீதான விவாததத்தை பிரதமர் தள்ளி
வைத்துள்ளார்.


இஸ்ரேல் மசூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11125
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum