மேற்கு கரையில் மேலும் 40 சட்டவிரோத குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதி!
Page 1 of 1
மேற்கு கரையில் மேலும் 40 சட்டவிரோத குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதி!
டெல்அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட
ஃபலஸ்தீனின் மேற்கு கரையில் மேலும் 40 சட்டவிரோத குடியிருப்புகளை கட்ட
இஸ்ரேலிய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
மேற்கு கரையின் முக்கிய நகரமான
பெத்லஹமிற்கு அருகே இரண்டு மையங்களில்40 குடியிருப்புகளை கட்டுவதற்கு
இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. குடியிருப்புகளுடன் ஒரு பண்ணையை கட்டவும்
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை எ.எஃப்.பி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் தற்போதையை சட்டவிரோத
குடியிருப்புகளுக்கு வெளியே புதிய குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதன்
மூலம் மேற்கு கரையின் வடக்கு எல்லை வரை இஸ்ரேலின் குடியிருப்புகள் பரவும்.
தற்பொழுது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் மேற்கு கரையிலும், 2
லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் கிழக்கு ஜெருசலத்திலும் சட்டவிரோத
குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.
முன்னர் இப்பகுதிகளில் குடியிருப்பு
கட்டுமானங்களை விரைவுபடுத்த இஸ்ரேல் அரசு தீர்மானித்தது. சர்வதேச
சமூகத்தின் எதிர்ப்புகளை புறக்கணித்துவிட்டு இஸ்ரேல் சட்டவிரோத
குடியிருப்புகளை கட்டி வருகிறது. இதற்கிடையே மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு செல்ல
உதவும் மரப்பாலத்தை இஸ்ரேல் மூடிவிட்டது. அபாயமாக உள்ளது என காரணம் காட்டி
இந்நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.
மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு செல்லும் பாலத்தை
மூடியது இஸ்ரேலின் போர்பிரகடனம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. மஸ்ஜிதுல்
அக்ஸாவை ஆக்கிரமிப்பதற்கான சியோனிச சதித்திட்டம் என ஹமாஸ் குற்றம்
சாட்டியுள்ளது. பாலத்தை அடைப்பதற்கான இஸ்ரேலின் முயற்சியை ஜோர்டான்
கண்டித்துள்ளது.
Similar topics
» ஃபலஸ்தீனில் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்த இஸ்ரேல் உத்தரவு
» சர்ச்சைக்குரிய அருங்காட்சியகம் கட்ட இஸ்ரேல் அனுமதி
» சட்டவிரோத கட்டிட பணிக்கு இஸ்ரேல் அனுமதி
» சட்டவிரோதமாக குடியிருப்புகளை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்-இந்தியா
» காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் மரணம்
» சர்ச்சைக்குரிய அருங்காட்சியகம் கட்ட இஸ்ரேல் அனுமதி
» சட்டவிரோத கட்டிட பணிக்கு இஸ்ரேல் அனுமதி
» சட்டவிரோதமாக குடியிருப்புகளை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்-இந்தியா
» காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum