தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திருடு போனதே தெரியாமல் இருந்த நகை திரும்ப ஒப்படைப்பு!

Go down

 திருடு போனதே தெரியாமல் இருந்த நகை திரும்ப ஒப்படைப்பு!  Empty திருடு போனதே தெரியாமல் இருந்த நகை திரும்ப ஒப்படைப்பு!

Post by முஸ்லிம் Thu Nov 18, 2010 3:46 pm

நகை திருடு போனதே தெரியாமல் இருந்த நகையின் உரிமையாளரிடம் காவல் துறையினர் திரும்ப ஒப்படைத்துள்ளனர். மதுக்கடை ஒன்றில் போதையில் மிதந்திருந்த கொள்ளையனிடம் இருந்து இந்த நகைகள் மீட்கப்பட்டன.

சென்னை, திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே `டாஸ்மாக்' அரசு மதுக்கடை பாரில் அளவுக்கு அதிகமான போதையில் இருந்த ஒருவனிடம் ஏராளமான தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஒருவர் மணலி சாத்தாங்காடு காவல்துறையினருக்கு அவரைப்பற்றி தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் ஆய்வாளர் ராஜாராபர்ட் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து போதை வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன் என்பதும், பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்தது.

அவனிடம் இருந்த 30 பவுன் தங்க நகைகளை காவல்துறையினர் கைப்பற்றினர். கடந்த 10ஆம் தேதி ஜோதி நகரில் உள்ள ஒரு வீட்டில் பீரோவை திறந்து அந்த நகைகளை திருடியதாக அவன் கூறினான்.

கடந்த 10ஆம் தேதி ஜோதி நகர், 2-வது தெருவை சேர்ந்த தியாகராஜன் என்பவரது வீட்டில் 39 பவுன் நகை திருட்டு போயிருந்தது. ஜோதிநகர் என்று கூறியவுடன் அவரது வீட்டில்தான் திருடியிருப்பான் என்று கூறி தியாகராஜனின் வீட்டுக்கு அவனை கூட்டிச்சென்றனர்.

அங்கு சென்றதும் திருடன் சரவணன், தான் இந்த வீட்டில் திருடவில்லை என்றும் பக்கத்தில் பாரிவள்ளல் தெருவில் உள்ள ஒரு வீட்டில்தான் அந்த நகைகளை திருடியதாக கூறினான். அப்படி ஏதும் தங்களுக்கு புகார் வராததால் காவல் துறையினர் குழப்பம் அடைந்தனர். பின்னர் அவன் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்றபோது செல்வராஜ் என்பவரின் மனைவி அம்சலட்சுமி என்பவர் வீட்டில் இருந்தார்.

அவரிடம் உங்கள் வீட்டில் ஏதாவது நகை திருட்டு போனதா? என்று காவல் துறையினர் கேட்டனர். அதற்கு அம்சலட்சுமி தங்கள் வீட்டில் ஏதும் நகை திருட்டு போகவில்லை என்று மறுத்தார். ஆனால் திருடன் சரவணன், தான் இந்த வீட்டில்தான் திருடியதாக கூறி, பீரோவின் சாவி எங்கிருந்தது என்பதையும், அதை எடுத்து எப்படி திருடினான் என்பதையும் நடித்துக் காட்டினான்.

அப்போது தான் அம்சலட்சுமிக்கு பக்கத்து தெருவில் வசித்து வரும் தனது கணவரின் அக்காள் ஜெயா 20 பவுன் நகையை தங்கள் வீட்டு பீரோவில் வைத்து விட்டு செல்வதாக கூறியது நினைவுக்கு வந்தது. அவர் மதுரைக்கு செல்வதால் அடகுக்கடையில் இருந்த நகைகளை மீட்டு தம்பியின் வீட்டில் கொடுத்து விட்டுச் சென்று இருக்கிறார்.

உடனே ஜெயாவிடம் தொடர்பு கொண்டு உறுதி செய்த அம்சலட்சுமி, தங்கள் வீட்டில்தான் திருட்டு போனது என்பதை பதற்றத்துடன் ஒப்புக்கொண்டார். கடந்த 10ஆம் தேதி செல்வராஜ் குடும்பத்தினர் விருத்தாசலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற போது திருடன் சரவணன் நகை திருடியது தெரியவந்தது.

மேலும் 10 பவுன் நகை சரவணனிடம் இருந்தது. அந்த நகைகளை அம்பேத்கார் நகர், ராஜா சண்முகபுரத்தில் உள்ள வீடுகளில் திருடியதாக அவன் தெரிவித்தான். பின்னர் போலீசார் சரவணனை கைது செய்தனர். திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சரவணன், புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

திருடு போனதே தெரியாமல், அதுபற்றி காவல் துறையில் புகாரும் கொடுக்காமலேயே திருட்டு நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மணலி சாத்தாங்காடு காவல் துறையினரை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11073
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum