தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிந்திக்க வேண்டுகிறேன்.

Go down

சிந்திக்க வேண்டுகிறேன். Empty சிந்திக்க வேண்டுகிறேன்.

Post by meeranhasani Tue Jan 16, 2018 11:48 am

நன்மைகளை ஏவுதல் தீமைகளை தடுத்தல் என்ற விவகாரத்தில் ஆதிக்க அதிகாரத்தின் பங்கு மிகவும் பிரதானமானது; தனிமனிதர்களின் பங்கு பெறுமதியானதாக இருந்தாலும் சக்தியற்றது.

தனிமனிதர்கள் எனும்போது அது அரச சார்பற்ற அமைப்புகளையும் உள்ளடக்கியதே ஆகும். ஏனென்றால் இவைகளும் ஒரு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மட்டுமே மூச்சுவிட முடியும்.

அப்படியல்லாது ஏதாவது ஒரு குழு அல்லது அமைப்பு தீமைக்கும் அநீதிக்கும் எதிராக ஆளும் அதிகாரத்தின் சட்ட வரம்புகளை மீறி போர்க்கொடி தூக்கி அரசுக்குள் ஓர் அரசாக செயற்பட முடியாது.

அவ்வாறு செய்தால் அவ்வமைப்பு சட்டவிரோத அமைப்பாக பிரகடனம் செய்யப்பட்டு குறித்த ஆதிக்க அரசினால் வேட்டையாடப்படும்.

இங்கு இவ்வாறு சுட்டிக்காட்டுவதன் நோக்கம் நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் என்பதில் ஆதிக்க அரசின் பங்கு அதிகமானதும் கட்டாயமானதும் என்பதை உணர்த்தவேயாகும்.

ஆனால் நடப்பு அரசுகளின் நிலவரம் இது விடயத்தில் கேலிக்கூத்தாகவும் முட்டாள்தனமாகவுள்ளது! தீமைகள் அதன் போக்கில் இயங்குகிறது! அரசு தன் அதிகார சுயநலத்திற்காக அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகரிக்கிறது! பாதுகாப்பு துறையும் சட்டத்துறையும் அதிகார மிலேச்சத் தனத்தின் அடியாட்களாக தொழிட்படுகிறது!

உதாரணமாக குடி குடியைக் கெடுக்கும் என்று விளம்பரப்படுத்திவிட்டு லைசென்ஸ் மதுபான சாலைகள் மூலம் சமூகத்திற்கு அதை விற்பனை செய்வதானது அப்பட்டமான அநியாயம் தவிர வேறில்லை தானே!?

எனவே சிவில் நிர்வாக நிறுவனங்களை தவறாக வழிநடத்தி தீமைகள் ஒரு பக்கம் சுதந்திரமாக நடமாட விடுவதானது ஒரு அதிகார சூழ்ச்சி மிக்க கையாலாகாத்தனம் தவிர வேறில்லை.

சட்டங்களின் இறுக்கமற்ற தன்மைகள் மூலம் குற்றங்களும் குற்றவாளிகளும் இலகுவாக தப்பிக்க முடியுமாக இருந்தால், சுதந்திரமாக இயங்க முடியுமாக இருந்தால் அவ்வாறான சட்டங்கள் எதற்கு!? அந்த சட்டங்களை விதித்து அமுலாக்கம் செய்ய ஓர் அரசு எதற்கு!? இங்கே அரசுதானே அடிப்படை குற்றவாளி!?

எனவேதான் சரியான சிந்தனை தரத்தை அடிப்படையாக கொண்ட அதிகார அரசின் தேவையே இன்று முதன்மையானது. அதன் சட்ட முறைமைகள் மற்றும் சீர்திருத்த வழிகாட்டல்கள் மனித குலத்திற்கு மத்தியில் துணிவுடன் நடமாடும் தீமைகளை ஒடுக்கி அழித்து ஓரங்கட்டும்.

இவ்வாறான அதிமுக்கிய விவகாரத்தை நடப்பு ஜனநாயக சிந்தனாவாத அதிகார அரசுகளால் ஒருக்காலமும் செய்யமுடியாது. இதை செய்யாதுவிட்டால் தீமைகளை கட்டுப்படுத்தும் பிரதான வேலையும் நடக்கவே நடக்காது.

எனவேதான் இவ்வாறான கையாலாகாத அரசுகளை பற்றி மெளலானா மெளதூதி(ரஹ்) "தீமைகளின் ஆணிவேர் தீய அரசு" எனக்கூறினார். இங்கு அதிமுக்கிய விவகாரமாக எங்கள் முன் தற்போதிருப்பது நீதி நியாயம் மிக்க ஒரு அதிகார அரசை கட்டமைப்பது தவிர வேறில்லை.

அவ்வாறான நீதிமிக்க அரசு சத்தியமான ஒரு சிந்தனையால் மட்டுமே உருவாக முடியும். அது ஏகத்துவத்தை அடிப்படையாகவும் அந்த ஏக இறைவன் வழங்கிய ஷரீஆவை வாழ்வியலாகவும் கொண்ட தெய்வீக அரசான நபிவழியிலான கிலாபா அரசு தவிர வேறில்லை.
meeranhasani
meeranhasani
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 1
ஸ்கோர் ஸ்கோர் : 2295
Points Points : 0
வயது வயது : 36

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum