மே.வங்கம்:முஸ்லிம்களின் புறக்கணிப்பால் இடதுசாரிகூட்டணி 90 இடங்களை இழந்தது
Page 1 of 1

கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை பெறுவதில் இடதுசாரி கூட்டணி முற்றிலும் தோல்வியை தழுவியுள்ளது. முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள 90 இடங்களை இடதுசாரி கூட்டணி இழந்துள்ளது. 10 எல்லை மாவட்டங்களில் 125 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ளனர்.
2008-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும், தொடர்ந்து நடந்த மக்களவை தேர்தலிலும் பலத்த அடிவாங்கிய இடதுசாரி கூட்டணியால் சட்டமன்ற தேர்தலிலும் முஸ்லிம் வாக்காளர்களை கவர இயலவில்லை. 2008-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி எட்டு இடங்களையும், இடதுசாரி கூட்டணி ஐந்து இடங்களையும் கைப்பற்றியது. மக்களவை தேர்தலில் மாநிலத்தில் 42 இடங்களில் 26 இடங்களை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி இடதுசாரி கூட்டணிக்கு பதிலடி கொடுத்தது.
இத்தோல்விகளை தொடர்ந்து முஸ்லிம்களுக்காக பல்வேறு நல திட்டங்களை அரசு கொண்டு வந்த போதிலும் அவற்றால் இழந்து போன முஸ்லிம்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இயலவில்லை. முஸ்லிம் சமுதாயத்திற்கு தேவையான எதையும் செய்யாத அரசு மேற்கு வங்காளம் என சச்சார் கமிட்டி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து இடதுசாரி அரசு முஸ்லிம்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஒ.பி.சி) பிரிவில் சேர்த்தது. மேலும் ஏராளமான கல்வி, தொழில் பயிற்சி மையங்களை உருவாக்கியது. இவற்றை கொண்டு வருவதில் முன்னணியில் நின்ற சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துல் ஸத்தார் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரிடம் பரிதாபமாக தோற்றுபோனார்.

Similar topics
» மேற்கு வங்கம்: கள்ளச்சாராயத்துக்கு பலி 101
» இந்தியாவுக்கு புகழ் சேர்க்கும் முஸ்லிம்களின் கட்டிட கலை!
» குஜராத்:முஸ்லிம்களின் கைதுக்கெதிராக சமூக சேவகர்கள் கண்டனம்
» முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆல் இந்தியா மில்லி குழுவுக்கு மம்தா உத்திரவாதம்
» முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum