தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்ட மக்கள்:இரண்டாவது புரட்சியை நோக்கி எகிப்து?

Go down

தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்ட மக்கள்:இரண்டாவது புரட்சியை நோக்கி எகிப்து?  Empty தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்ட மக்கள்:இரண்டாவது புரட்சியை நோக்கி எகிப்து?

Post by முஸ்லிம் Sat May 28, 2011 4:30 pm

கெய்ரோ:எகிப்தில் ஜனநாயக நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோரி அந்நாட்டின் முபாரக் எதிர்ப்பாளர்கள் வெள்ளிக்கிழமை தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்று திரண்டனர். எகிப்தின் புரட்சி முடிவுறவில்லை என எழுதப்பட்ட பேனர்களுடன் தஹ்ரீர் சதுக்கத்தில் அவர்கள் ஒன்று திரண்டனர்.

ஜனநாயகத்திற்கான இரண்டாவது புரட்சி என எதிர்ப்பாளர்களால் சிறப்பிக்கப்பட்ட போராட்டத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பங்கேற்றனர். ராணுவ தலைமை ஜனநாயக நடவடிக்கைகளுக்கு காலதாமதம் ஏற்படுத்துவது குறித்து எதிர்ப்பாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்குடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மென்மையான அணுகுமுறையை கையாளுவதாகவும் எகிப்தின் தற்காலிக ராணுவ அரசின் மீது எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதற்கிடையே, செப்டம்பரில் நடத்தவிருக்கும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென சுதந்திர-மதசார்பற்ற கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.


தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்ட மக்கள்:இரண்டாவது புரட்சியை நோக்கி எகிப்து?  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11074
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum