தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பூங்காவில் போராட்டம் நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி

Go down

பூங்காவில் போராட்டம் நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி Empty பூங்காவில் போராட்டம் நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி

Post by முஸ்லிம் Thu Nov 17, 2011 5:54 pm

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஜூகோட்டி பூங்காவில் இருந்து
வெளியேற்றப்பட்ட வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தினர் மீண்டும் அதே
பூங்காவுக்கு நேற்று திரும்பினர்.அவர்களை நள்ளிரவில் அங்கிருந்து
வெளியேற்றிய நியூயோர்க் நிர்வாகத்தின் செயல் சட்டப்பூர்வமானது தான் எனக்
கூறியுள்ள நியூயோர்க் சுப்ரீம் கோர்ட் கூடாரம், பெரிய பைகள், ஜெனரேட்டர்கள்
போன்ற எதுவும் அனுமதிக்கப்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து
தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இயக்கத்தினர் ஆலோசித்து
வருகின்றனர்.

கடந்த 15ம் திகதி அதிகாலை 1 மணியளவில் ஜூகோட்டி பூங்காவில் தங்கியிருந்த
ஆர்ப்பாட்டக்காரர்களை நியூயோர்க் பொலிசார் பலவந்தமாக வெளியேற்றினர்.

வெளியேறியவர்கள் அருகில் உள்ள போலே பூங்காவில் தங்கினர். இவ்விவகாரம்
குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் நியூயோர்க் சுப்ரீம் கோர்ட்டில்
வழக்குத் தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையில் நேற்று கோர்ட் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
அமெரிக்க அரசியல் சாசனப்படி நியூயோர்க் அதிகாரிகள் செய்தது சரிதான். தொடர்
போராட்டத்தின் போது பொது மக்களுக்கு தொந்தரவு எதுவும் விளையக் கூடாது.

அதன்படி பூங்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால்
இரவில் தங்கக் கூடாது. கூடாரம், பெரிய பைகள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட
பொருட்களுடன் உள்ளே போகக் கூடாது என உத்தரவிட்டது. இவ்வாறு நியூயோர்க்
சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

நியூயோர்க் மேயர் மிக்கேல் ப்ளூம்பெர்க் கூறுகையில், பூங்காவில் இருந்த
சூழல், மக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தது.
அங்கிருந்தவர்கள் ஆர்ப்பாட்டத்திற்காக வந்ததாகத் தெரியவில்லை. அதனால் தான்
அவர்களை வெளியேற்றி பூங்காவை தூய்மைப்படுத்த வேண்டியதாகி விட்டது.
பாதுகாப்புக் காரணமாக இந்த நடவடிக்கை நள்ளிரவில் மேற்கொண்டது என்றார்.

பூங்கா பகுதியில் ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூங்காவில் இரவில் தங்கித் தூங்க
அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து
வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.

பொலிசாரின் இந்த நடவடிக்கை குறித்து ஒரு ஆர்ப்பாட்டக்காரர் கூறுகையில்,
ஆர்ப்பாட்டம் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. இது எங்கள் நகரம். இந்தப்
பூங்கா தான் கடந்த இரு மாதங்களாக எங்கள் வீடாக இருந்தது என்றார்.

இன்று மூன்றாவது மாதத்தில் நுழையும் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்
அமெரிக்கா மற்றும் உலகின் பல முக்கிய நகரங்களில் தொடர்ந்து நடக்கிறது.
பூங்கா அதிரடி நடவடிக்கை அவர்களின் குறிக்கோளை மேலும் உறுதியாக்கியுள்ளது.


பூங்காவில் போராட்டம் நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10943
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்
» சொல்வதெல்லாம் உண்மை டி.வி நிகழ்ச்சிக்கு கோர்ட் தடை!
» ஜுக்கோட்டி பூங்காவில் மீண்டும் வால்ஸ்ட்ரீட் எதிர்ப்பாளர்கள்
» யுரேனிய செறிவூட்டல் நேரடி ஒளிபரப்பு, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை - ஈரான் அதிரடி
» இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum