தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சமூக வலை தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி

Go down

சமூக வலை தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி  Empty சமூக வலை தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி

Post by முஸ்லிம் Wed Dec 07, 2011 6:32 pm

சமூக வலை தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி  Google-Yahoo-Bing-Twitter-Facebook-270x170

புதுடெல்லி:கூகிள்,ஃபேஸ்புக்போன்ற சமூக வலைதளங்களிலிருந்து பிறரை புண்படுத்தும் கருத்துக்களை நீக்குமாறு மத்திய அரசு அந்நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த நிறுவனங்கள் இது தொடர்பான நடவடிக்கையை எடுக்க தவறும் பட்சத்தில் அரசே தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.

கருத்து சுதந்திரத்தை தடை செய்ய அரசு
விரும்பவில்லை. ஆனால், ஆட்சேபகரமான கருத்துக்களை இணைய தளங்களிலிருந்து
நீக்குவதற்கு ஏதேனும் செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என கபில்
சிபல் கூறுகிறார்.

இந்திய பிரதமர் மன்மோகன்சிங், ஆளும்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை
இழிவுப்படுத்தும் வகையில் இணையதளங்களில் வெளியான திருத்தியமைக்கப்பட்ட
படங்களை அவர் செய்தியாளர்களிடம்
காண்பித்தார். மேலும் மதங்களை புண்படுத்தும் படங்களையும் நீக்கிவிடுமாறு
மத்திய அரசு சமூக இணையதளங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியர்களின்
உணர்வுகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை எனவும் கபில் சிபல் கூறினார்.

இதுத்தொடர்பாக இணையதள நிறுவனங்களான யாஹூ,
ஃபேஸ்புக், கூகிள் மற்றும் மைக்ரோஸாஃப்டுடன் நேற்று முன் தினம்
பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இத்தகைய ஆட்சேபகரமான போஸ்டுகளை நீக்குமாறு
வலியுறுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்
‘ஃபேஸ் புக்’ நிறுவனத்தினர், இந்திய அரசின் கவலைகளை தாங்கள்
உணர்ந்துள்ளதாகவும், வெறுப்புணர்வு மற்றும் வன்முறையைத் தூண்டக்கூடிய
விடயங்கள், நிர்வாணத்தை வெளிப்படுத்தும் படங்கள் ஆகியவற்றை அகற்றிவிடுவோம்
எனவும் தெரிவித்துள்ளனர்.

கூகிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்
கூறுகையில், ’சர்ச்சைக்குரியது என்பதால் மட்டும் ஒரு போஸ்டை மாற்ற இயலாது.
மக்களின் அறியும் உரிமையை தடைச்செய்ய முடியாது. ஆனால், நாடுகளின்
சட்டத்திற்கு எதிரான கருத்துக்களை
நீக்குவோம்’ என தெரிவித்தார். இதர நிறுவனங்கள், ஏதேனும் குறிப்பிட்ட
சம்பவத்தில் புகார் கிடைத்தால் பரிசோதிப்போம் என மத்திய அரசுக்கு
தெரிவித்துள்ளன.

அண்மையில் முஸ்லிம்களின் உணர்வுகளை
புண்படுத்தும் வகையில் புனித ஸ்தலமான மக்காவில் உள்ள கஃபாவின் மீது ஆபாசமான
பெண்மணி மற்றும் நாய் அமர்ந்திருக்கும் அருவருக்கத்தக்க ஆட்சேபகரமான படம்
ஃபேஸ்புக் வலைதளத்தில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.


சமூக வலை தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10941
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி
» நியமத் அன்ஸாரி கொலை வழக்கு:சி.பி.ஐ விசாரிக்கவேண்டும்-மத்திய அரசு
» ருஷ்டி:எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் – மத்திய அரசு
» சிறுபான்மை சமூக முன்னேற்றத்திற்கு அரசு உறுதி பூண்டுள்ளது-சல்மான் குர்ஷித்
» மலேகான்:முஸ்லிம் இளைஞர்களின் ஜாமீன் மனுவை மத்திய அரசு எதிர்க்காது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum