தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பீகாரை தீவிரவாதத்​துடன் இணைக்க வேண்டாம்: முஸ்லிம் அரசியல்வாதி​கள் கண்டனம்

Go down

பீகாரை தீவிரவாதத்​துடன் இணைக்க வேண்டாம்: முஸ்லிம் அரசியல்வாதி​கள் கண்டனம்  Empty பீகாரை தீவிரவாதத்​துடன் இணைக்க வேண்டாம்: முஸ்லிம் அரசியல்வாதி​கள் கண்டனம்

Post by முஸ்லிம் Wed Dec 14, 2011 5:18 pm

பாட்னா:டெல்லி உயர்நீதிமன்ற குண்டு
வெடிப்பு, பெங்களுர் சின்னசுவாமி மைதானம் மற்றும் மும்பை தாஜ் ஓட்டலின்
தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் எனக்கூறி பீகாரை சேர்ந்த ஆறு முஸ்லிம்
இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததை தொடர்ந்து முழு பீகாரையும் ஒரு
தீவிரவாத மாநிலமாக நோக்குவது கண்டனத்துக்குரியது என்றும், போதுமான ஆதாரம்
இல்லாமல் யாரையும் கைது செய்ய இயலாது என்றும், ஒருவர் மீது குற்றம்
சுமத்தப்பட்டால் அதற்கு முழு சமூகத்தையும் குற்றவாளியாக கருதக் கூடாது
என்று அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.

புர்னியா மாவட்டத்தைசேர்ந்த பி.ஜே.பியின் எம்.எல்.ஏ சபா ஜாஃபர் தெரிவித்ததாவது:
கடந்த வாரம், டெல்லிகாவல் துறை என்னுடைய தொகுதியை சேர்ந்த பெல்வா
கிராமத்தில் முஹம்மது அய்யூப்பின் மகன் அஃப்தாப் ஆலத்தை கைது செய்துள்ளனர்.
இது வரை குற்றம் நிரூபிக்கபடாத நிலையில், ஊடகங்கள் முழு பீகாரையும்
பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றும்,
எந்தவித ஆதாரமும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் கைது செய்வது, இது போல்
நூற்றுக்கும் மேற்ப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து பின் பல வருடங்கள்
கழித்து குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுதலை செய்வதும் வழக்கமாகி
வருகிறது என்றும், தீவிரவாதிகள் நேபாள் மற்றும் பங்களாதேசில் இருந்து
பீகாருக்கு வருகிறார்கள் என்றால் பாதுகாப்பு படை சரிவர வேலை செய்வதில்லை
என்பது தான் உண்மை என்றும், இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு எனவும், தனது
கண்டத்தை வெளியிட்டுள்ளார்.

கிஷாங்கன்ஞ்சின் காங்கிரஸ் எம்.பி மௌலானா அஸ்ரருள் ஹக் கஸ்மி தெரிவித்ததாவது:
பீகாரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் குற்றத்தை நிரூபிக்கும் வரை
தீவிரவாதி என்ற பட்டம் கொடுக்க முடியாது எனவும், ஒருவேளை அவர்கள் குற்றம்
நிரூபிக்கப்பட்டாலும், அதற்கு முழு சமூகத்தையும் பயங்கரவாதத்துடன்
தொடர்புடையதாக குற்றம்சாட்ட முடியாது எனவும், புலானாய்வு துறை ஆதாரம்
இல்லமால் யாரையும் கைது செய்யக்கூடாது எனவும், கடந்த கால வழக்குகளில்
இருந்து படிப்பினை பெற வேண்டும் என்றும் தனது கண்டத்தை வெளியிட்டுள்ளார்.

பீகாரை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் டாக்டர் ஷகீல் அஹ்மத் கான் தெரிவித்ததாவது:-
பீகாரை சேர்ந்த மக்கள் அனைவரும் ஏழ்மை நிறைந்தவர்களும், அமைதி மற்றும்
அன்புடன் வாழ்ந்து வரும் அவர்கள் மதப் பிரச்சினையின் மூலம் தொந்தரவு
செய்வது குறிப்பாக வட பீகாரில் அனைத்து முஸ்லிம்களும் இந்த பிரச்சினையால்
உறைந்து போய் உள்ளனர். மேலும் துரதிஸ்டவசமாக அனைத்து ஊடகங்களும்,
புலானாய்வு துறையும் பீகாரை பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சித்தரித்தது
நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்று டாக்டர்
ஷகீல் அஹ்மத் கான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கிஷாங்கன்ஞ்சின் ஆர்.ஜே.டிஎம்.எல்.ஏ அக்தருள் இமான் தெரிவித்ததாவது:
பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக வட பீகாரை தெரிவித்ததற்கு இவர் தனது ஆழ்ந்த
கண்டனத்தை தெரிவித்துள்ளார். தவறு செய்தவகர்ளுக்கு கண்டிப்பாக தண்டனை
கொடுக்க வேண்டும் அதற்காக முழு பகுதியையும் குற்றம் சாட்டுவது ஒப்புக்
கொள்ள முடியாது எனவும்,மேலும் தீவிரவாதிகள் நம் நாட்டை பேரம் பேசுகிறார்கள்
என்பதால் நாங்கள் அரசாங்கத்திற்கு நேபாள் மற்றும் சீனாவின் எல்லை பகுதியை
தடை செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம் என்றும் அக்தருள் இமான்
தெரிவித்துள்ளார்.

ராஜ்ய சபாவின் என்.ஸி.பியின் எம்.பி தாரிக் அன்வர் தெரிவித்ததாவது:

வட பீகார் மிகவும் அமைதி வாய்ந்த பகுதி,
கல்வி மற்றும் சமூகவளர்ச்சியில் அதிக மக்கள் பங்கெடுக்கும் நிலையில், ஒரு
சிலரை கைது அதற்காக முழு பகுதியையும் பயங்கரவாதத்துடன் இணைப்பது ஏற்றுக்
கொள்ள முடியாதது மற்றும் கண்டனத்துக்குரியது என்று தாரிக் அன்வர்
தெரிவித்துள்ளார்.

கடந்த 5-ஆம் தேதி பீகாரை சேர்ந்த ஆறு
முஸ்லிம்களை டெல்லி போலீஸ் துறை கைது செய்தது மட்டுமல்லாமல் எந்த ஆதாரமும்
இல்லாமல் இந்திய முஹாஜிதீனின் உறுப்பினர்கள் என்றும், இவர்கள்
பயங்கரவாதத்தை பீகாரில் பரப்பி வருவதாக புலானாய்வு துறை குற்றம்
சாட்டியுள்ளதற்கே இந்த கண்டங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.


பீகாரை தீவிரவாதத்​துடன் இணைக்க வேண்டாம்: முஸ்லிம் அரசியல்வாதி​கள் கண்டனம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11116
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum