யேமன் : விடைபெற்றார் அலீ அப்துல்லா சாலேஹ்!
Page 1 of 1

அரபு நாடுகளில் பூத்த முல்லைப் புரட்சியில் அந்த நிறத்திற்கேற்ப சமாதானமாக வெளியேறும் முதல் அதிபராக யேமன் அதிபர் அலீ அப்துல்லாஹ் சாலேஹ் இருக்கிறார்.
ஞாயிறன்று தலைநகர் சனாவிலுள்ள அதிபர் மாளிகையில், உயர்நிலை அதிகாரிகள், இராணுவத்தலைவர்கள், அமைச்சர்கள் புடைசூழ நடைபெற்ற வழியனுப்பு விழாவில் பிரியாவிடை உரை நிகழ்த்திய அலீ அப்துல்லா சாலேஹ் தன்னுடைய தவறுகளையும் பிழைகளையும் மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். முன்னதாக, துணை அதிபர் அப்துர் ரப் மன்சூர் அல்ஹாதிக்கு உயர்வு அளித்து 'மார்ஷல்' பதவி அளித்தார். அப்துர்ரப் மன்சூர் அல்ஹாதி அடுத்த அதிபராக வர உள்ளார் என்பது குறிக்கத்தக்கது.
மருத்துவப் பரிசோதனைக்காக, ஓமன் வழியாக அமெரிக்கா செல்ல இருப்பதாகத் அலீ அப்துல்லாஹ் சாலேஹ் தெரிவித்திருந்தார். இந்த அமைதியான அதிபர் மாற்றத்திற்கு அமெரிக்காவின் உதவி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஞாயிறன்று தலைநகர் சனாவில் கூடிய எதிர்ப்பாளர்கள், அலீஅப்துல்லாஹ் சாலேஹ்வை விசாரிக்கத் தடைவிதிக்கும் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். 33 வருட குற்றங்கள் குறித்து விசாரிக்கப்படவேண்டுமென்று அவர்கள் குரல் எழுப்பினர்.
"புரட்சியின் எல்லா இலக்குகளையும் அடையும் வரை எங்கள் எதிர்ப்புணர்வு மங்காமல் தொடரும்" என்று எதிர்ப்புக்குழுவினரின் தலைவரான மானி அல் மத்தாரி தெரிவித்தார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum