தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம்

Go down

 குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம்  Empty குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம்

Post by முஸ்லிம் Mon Nov 29, 2010 2:51 pm

ரஷ்ய கார்கோ விமானம் ஒன்று பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கிடையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 8 சிப்பந்திகளும் உயிரிழந்தனர். 20 வீடுகள் சேதமடைந்ததுடன் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.மக்கள் அதிகம் வாழும் குடியிருப்பு பகுதியிலிருந்து சில அடிகள் தள்ளி விழுந்ததினால் மேலும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.



இன்று அதிகாலை 1.50 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றது. கராச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 2 நிமிடத்தில் விழுந்ததாக விமான நிலைய அதிகாரி பர்வேஷ் ஜார்ஜ் தெரிவித்தார். விழுவதற்கு முன்னால் விமானத்தின் இறக்கையில் நெருப்பு எரிந்ததை பலர் பார்த்துள்ளனர். இந்த விமானம் சூடானுக்கு சென்று கொண்டிருக்கும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஏறத்தாழ 3 மணி நேரம் போராடி தீ அணைப்பு வீரர்கள் நெருப்பை அணைத்தனர்.

ஐந்து மாதத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மூன்றாவது விமான விபத்தாகும் இது. நவம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட பயணிகள் விமான விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். ஜூலை மாதம் ஏற்பட்ட மிகப் பெரிய விபத்தில் பாகிஸ்தானின் ஏர்புளு விமானம் இஸ்லாமாபாத்தில் மலையில் விழுந்ததில் பயணம் செய்த 152 பேரும் உயிரிழந்தனர்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10941
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum