தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான்-கி-மூன்?

Go down

இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான்-கி-மூன்?  Empty இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான்-கி-மூன்?

Post by முஸ்லிம் Mon May 30, 2011 4:46 pm

காஸா மீதான இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகையை முறியடிக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் மனிதாபிமான நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தயாராகவுள்ள ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 குழுவை நோக்கித் தமது முயற்சியைக் கைவிடுமாறு கேட்டுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூனை காஸா முற்றுகைக்கு எதிரான ஐரோப்பிய அமைப்பு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் ஒரு சட்டவிரோத முற்றுகை சுமார் 1.5 மில்லியன் பலஸ்தீன் மக்கள்மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட சுமுகவாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகளின் உதவி அவர்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றது.

இந்நிலையில், ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் 'ஏற்படக்கூடிய மிகப் பாரதூரமான பிரச்சினைகளைத் தவிர்க்குமுகமாக காஸாவை நோக்கிப் பயணிக்குமுன் தமது நாட்டுப் பிரஜைகள் கலந்துகொள்ளவிருக்கும் ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 கப்பல்களைத் தடுத்துநிறுத்தும் வகையில் தமது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து பல்வேறு சர்வதேச நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ செய்திகளை அனுப்பிவைத்துள்ளார்.

ஏற்கெனவே 2008,2009 ஆம் ஆண்டுகளில் காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான முன்மொழிவுகளை வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்ஸில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒருவரிடமிருந்து இத்தகையதொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து மேற்படி ஐரோப்பிய அமைப்பு ஆச்சரியம் தெரிவித்துள்ளது.

ஃப்ரீடம் ஃபுளோடில்லா உதவிக்குழு என்பது மனிதாபிமானத்தை நேசிக்கும் தன்னார்வலர்களால் ஆன ஓர் அமைப்பாகும். குறித்த ஒரு மக்கள் குழுமத்தின் மீது சட்டவிரோதமாகத் திணிக்கப்பட்டுள்ள ஒரு முற்றுகையின்போது சர்வதேச சட்டம் நிச்சயமாக மௌனம் சாதிக்கவே முடியாது. எனவே, காஸா மீதான நியாயமற்ற முற்றுகையை முறியடிக்கும் வகையிலும், மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரும் தன்னார்வலர்கள் மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துமுகமாகவும் ஐ.நா.வினால் புதிய பிரேரணைகள் முன்மொழியப்படுதல் வேண்டும் என மேற்படி அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11115
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மகாத்மா காந்தி கொலை:ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு வக்காலத்து வாங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி – காங்கிரஸ் கண்டனம்
» ஹமாஸ்-ஃபத்ஹ் – இஸ்ரேலுக்கு கடுங்கோபம்
» கோலான்குன்றுகளை மீட்போம்-இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
» சட்டவிரோத குடியேற்ற நிர்மாணம்: இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா
» ஃபலஸ்தீனுக்கான வரிப்பணத்தை உடனை அளிக்க இஸ்ரேலுக்கு ஐ.நா உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum