தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."

Go down

கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்." Empty கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."

Post by gulam Wed Oct 26, 2011 1:54 pm

ஓரிறையின் நற்பெயரால்

  • இந்த உலகத்தையும் அதில் உள்ள யாவற்றையும் படைத்தது கடவுளென்றால் அந்த கடவுளை படைத்தது யாரு...?
விவாத முடிவில் இறை ஏற்பாளர்களை நோக்கி நாத்திகர்கள் வீசும் இறுதி வார்த்தை ஆயுதம் தான் மேற்சொன்ன வாக்கியம்....
. . .
விஞ்ஞானத்தை
பொருத்தவரை எந்த ஒன்றையும் அதுவரை முடிவுற்ற நிகழ்வுகளின் வெளிபாட்டை
அடிப்படையாக வைத்து ஊகங்களில் ஒன்றை உலகுக்கு சொல்லலாம். பின் அதன் நம்பக
தன்மையில் குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவ்வுண்மை திரிபு அடைந்தாலோ பிறிதொரு
(புதிய) அறிவியல் தெரிவுகளை மேற்கோளாக காட்டலாம்.

ஆனால் இஸ்லாத்தை பொருத்த வரை எந்த ஒன்றை விளக்குவதாக இருந்தாலும்
விமர்சிப்பதாக இருந்தாலும் அவை குர்-ஆன் சுன்னாவில் கூறப்பட்ட விதத்திலேயே
மேற்கோள் காட்டப்பட வேண்டும். அதனடிப்படையில் இஸ்லாமிய வட்டத்திற்குள்ளாக
இருந்தே மேற்கண்ட தலைப்பை அணுகுவோம்.

கடவுளின் பிறப்பு..?
இறை நம்பிக்கையாளர்கள் வணங்கும் கடவுள் என்பவர் சர்வ வல்லமை பெற்றவராக
-இணைத்துணை இல்லாதவராக - குறிப்பாய் யாராலும் பெற்றெக்கப்படாதவராக
இருக்கவேண்டும் இதை
இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த ஒன்றின் மூலமும் உருவாக்காத அல்லது
எந்த ஒரு மூலத்திலிருந்தும் உருவாகதாக ஒன்றாக இருக்கவேண்டும்.


அதாவது உயிரினங்களின் சிந்தையில் உதிக்கும் எண்ணம் கடந்து கடவுள்
என்பவர் தோன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரை மனித
பகுத்தறிவு கடவுளாக அதை / அவரை ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்நிலை மட்டுமே
படைப்பினங்களை படைக்கும் நிகரற்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு படைப்பாளர்
என்பவராகவும் அதை /அவரை காட்டும்.

கடவுளை என்பதை /என்பவரை ஏற்றுக்கொள்ளும் நிலை இப்படியிருக்க
படைப்பினங்களுக்கு உரிய செய்கைகளை உயரிய படைப்பாளனோடு எப்படி பொருத்த
முடியும். ?

மேற்கண்ட கேள்விகளை உற்று நோக்கினால்... இக்கேள்வியே நியாயமற்றது என்பதை விட அர்த்தமற்றது என்பது தெளிவாய் புரியும்

கடவுளை படைத்தது என்று ஒன்று இருந்தால் கடவுள் என்பவர் படைப்பாளன்
அல்ல மாறாக படைக்கப்பட்டவர் என்ற நிலையை அடைவார். அந்நிலையில் எப்படி
படைக்கப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியும்.?
அதுமட்டுமில்லாமல்
கடவுளை படைக்கும் அதுவல்லவா "பெரிய"கடவுளாகி விடும். இந்நிலையிலும்
மீண்டும் அதேக்கேள்வி இங்கேயும் தொடரத்தான் செய்யும். அந்த பெரிய கடவுளை
படைத்தது யார் என்று..?

ஆரம்பமும் இறுதியுமாக இருக்கும் இயங்கும், யாராலும் உருவாக்க முடியாத கடவுள் என்பவரை உருவாக்கியது யார்..? -என்று
முரண்பாட்டில் மூழ்கிய ஒரு கேள்வியை முன்னிருத்தினால் எப்படி சரியான பதிலை
தர முடியும். ஆக இங்கு சரியான பதில் தரவில்லையென்பதை விட சரியான பதில்
தரும் பெறும் வகையில் கேள்வி அமைக்கப்படவில்லையென்பதே சரி..!
கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்." Online_reputation_management_and_monitoring1


கடவுளின் இருப்பு..?


கடவுளின் இருப்பு -மனித சமூகங்களுக்கு தெரியும் வகையில் அமைய வேண்டும் என்பது நியாயமான சிந்தனையா...? பார்ப்போம்

ஒரு வாதத்திற்கு , கடவுள் என்பவர் பார்க்கும் பொருளாவோ அல்லது ஏற்கும்
கருத்தாகவோ இருந்தால் அவரது இருப்பு எல்லோருக்கும் தென்படும் ஆக நமக்கிடையில் தெளிவாக தெரியும் அப்பொருள் அல்லது அந்த செய்கையை எத்தனைப்பேர் நம்மில் கடவுளாக ஏற்றுக்கொள்வார்கள்? ஒருவர் கூட கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஏனெனில் நமக்கு தென்படும் ஒன்றின் இருப்பை கண்டிப்பாக வரையறை செய்ய
முடியும். ஆக வரையறை செய்ய முடிந்த ஒன்றை கடவுளாக ஏற்றுக்கொண்டால் அதை சர்வ
சக்தி பெற்றதாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆக வரையறை செய்ய முடியாத
ஒரு உயரிய சக்தி மட்டுமே கடவுளாக இருக்க முடியும் என்பது பகுத்தறிவு
ஏற்றுக்கொள்ளும் வாதம்.

மேலும் மனிதனால் இறைவனின் இருப்பை அறிந்துக்கொள்ள முடியாதென்பதை தர்க்கரீதியாகவும் விளக்(ங்)கலாம்.

உதாரணமாக பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த முழு
செய்கையும் மனிதன் தெளிவாக வரையறுத்து பதிந்து வைத்திருக்கிறான். எனினும்
அவற்றின் ஊண் ,உறக்கம் என எல்லா பண்பியல் நிலைகளையும் ஆராய்ந்து அவற்றின்
செயல்பாடுகள் முழுவதையும் துல்லியமாக அறிய குறிப்பிட்ட பறவையாகவோ அல்லது
விலங்காகவோ மனிதன் மாற வேண்டிய அவசியமில்லை. ஆய்ந்தறியும் தன்மை மட்டுமே
போதுமானது.

ஆக ஒரு செயல் குறித்த தகவல்களை முழுவதும் திரட்ட மனிதன் அச்செய்கையாக காட்சியளிக்க தேவையில்லை. ஆனால்
இதே நிலை ஒப்பிட்டு நிலையில் கீழாக அதே பறவையினம் அல்லது விலங்கினம்
மனிதன் குறித்த எல்லா தகவல்களையும் அதே உயிரின வளர்ச்சியிலிருந்து
துல்லியமாக பெற முடியாது., மனிதனின் சில செயல்களை சில பறவை மற்றும்
விலங்குகள் உணர்ந்தாலும் பொதுவாக எல்லா உயிரினங்களின் சிந்தனையாலும்
மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளையும் துல்லியமாக கணிக்க முடியாது.,

மாறாக கலவியல் ரீதியாக இன்பம் பெறுவதிலும், உணவிட்டலிலும், இன்னபிற
தன்னின் சமூகம் சார்ந்த செயல்களில் மட்டுமே அவைகளின் கவனம் இருக்கும் மாறாக
மனிதன் கண்டறிந்த முற்போக்கு ரீதியான அறிவியல் கண்டுப்பிடிப்புகளை
குறித்து அறிந்திருக்க முடியாது என்பதை விட அதுக்குறித்த சிந்தனை
அவைகளுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.,

மனிதனை விட ஆய்வு ரீதியாவும் அறிவு ரீதியாகவும் சிந்தனை செய்வதில் பலஹீன படைப்பாக அத்தகைய உயிரினங்கள் இருப்பதே இதற்கு காரணம்.

ஆக இங்கு படைப்பினங்களின் படைப்பு நிலைக்கேற்ப அளவிலேயே சிந்திக்கும்
திறனுடன் ஏனைய திறன்களும் வேறுப்படும். ஆக ஐந்தறிவு உயிரினங்களின்
சிந்தனையானது, பகுத்தறிவு என்ற ஓரறிவு கூடுதலாக கொண்ட மனித சிந்தனை தாண்டி
எப்படி செயல்பட முடியாதோ., அதுப்போல மனித சிந்தனையை மிகைத்து செயல்படும்
ஒன்றை மனிதனால் அறிந்துக்கொள்ள முடியாது என்பதும் தெளிவு!

அதனடிப்படையில்,

  • மனிதன் உட்பட ஏனைய உயிரினங்களின் செயல் திறத்தை முழுவதும் வடிக்கும்,
  • எந்த ஒன்றின்
    ஆரம்பம் மற்றும் இறுதி நிலையையும் தீர்மானிக்கும் அறிவுமிக்க மனிதனை விட
    அளவிட முடியா அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை திறனையும்,

  • எண்ணிடலங்காத
    தெரிவுகளையும் உள்ளடக்கிய கடவுள் எனும் ஒட்டுமொத்த உலகின் செய்கைகளை
    நிர்ணயிக்கும் ஒரு மூலத்தின் இருப்பை மனிதர்கள் சிந்தனையில் உருவான
    ஆய்வறிவில் கொண்டு வர முயற்சிப்பது எப்படி பொருந்தும்?????

ஆக கடவுளின் இருப்பை உணர்த்தும் குறீயிடுகள் மனிதனுக்கு அறிமுகமான
வகையில் இருக்க அவசியமில்லை என்பதை விட அவனின் இருப்புக்குறித்து அறிய
மனிதனுக்கு தகுதி இல்லை என்பதே மிக்க பொருந்தும்., ஆக
எதையும் மறுப்பதற்கல்ல ஏற்பதற்க்கே வேண்டும் பகுத்தறிவு..!


படைப்பினங்களுக்கு
முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;.
அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள
முடியாது. (02:255)


அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்." C3744E72588856187F927FA101F1CDE9




கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்." New+33333s

gulam
gulam
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 14
ஸ்கோர் ஸ்கோர் : 4752
Points Points : 22
வயது வயது : 42

http://iraiadimai.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum