தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution)

Go down

சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Empty சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution)

Post by முஸ்லிம் Mon Aug 15, 2011 9:04 pm


சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Ksa
இவ்வருடம் அரபுலகில் புரட்சிகளின் வருடம் போலும்..! துனிசியா, எகிப்து என்று மக்கள் புரட்சி வெற்றி பெற்றாலும் லிபியா, சிரியா, எமன், பஹரைன், ஜோர்டான் போன்ற நாட்டு அரபு மக்கள் இன்னும் முனைப்போடு ஜனநாயக வழியில் தங்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவ்வாறின்றி, தம் நிலத்தை அபகரித்த ஆயுத அடக்குமுறை வந்தேறிகளுக்கு எதிராக தீரமுடன் ஆயுதமேந்தியும் ஏந்தாமலும் போராடும் பாலஸ்தீனியரையும் நாம் மறந்துவிட இயலாது. இந்நிலையில் சவூதியிலும் சென்ற மாதம் சத்தம் போடாமல் ஒரு புரட்சி ஆரம்பித்து இரண்டே வாரத்தில் வெற்றியும் பெற்று விட்டது..! அல்ஹம்துலில்லாஹ்..! சவூதி பற்றிய செய்தி என்றாலே 'ஈரை பேனாக்கி, பேனை பெருச்சாளியாக்கும்' உலக ஊடகங்கள் இதை மட்டும் ஏனோ வெளியில் தெரியப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக அமுக்கி விட்டன..! ஆனால், நாம் விட்டு விடுவோமா..? பின்னே, தனியே எதற்கு ஒரு வலைப்பூ வெச்சிருக்கோம்..? லேட்டானாலும் தாளிச்சிட மாட்டோம்..?

சவூதியை பொறுத்தவரை பால், தயிர், மோர், பட்டர், ச்சீஸ்... இப்படி பால் பொருட்களை தயாரித்து சவூதி உட்பட வளைகுடாநாடுகள் அனைத்துக்கும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்துவரும் முன்னணி நிறுவனங்கள் சில உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை : அல்மராய், அல்சஃபி, நடா, நாடக், நஜ்தியா, ரயான்... போன்றன..! இதில் அல்மராய் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல்.அவர்தான் இந்த பிசினசில் நம்பர் ஒன் மட்டுமல்ல... அவர்தான் "வளைகுடாவின் பால்பொருட்களுலகிற்கு தாதா"...!!!


சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Almarai0


எந்த அளவுக்கு என்றால்... பொதுவாக நீங்கள் சவூதியில் எந்த சூப்பர் மார்க்கெட் சென்றாலும் அங்கே உங்கள் கண்முன்னே தென்படுமாறு வைக்கப்பட்டு இருப்பது அல்மராய் பால்/தயிர்/மோர்/ஜூஸ்/பிரட்/கேக் வகை மட்டுமே...! மற்றவையும் கிடைக்கும் என்றாலும் அவற்றை தேடி நீங்கள்தான் செல்ல வேண்டும் என்பதுபோல அதன் இருப்பிடம் இருக்கும். ஆனால், அல்மராய்..? உங்கள் நடைக்கும், தேடலுக்கும் வேலையே வைக்காமல் உங்களை தன் இருப்பிடம் நோக்கி இழுத்துச்சென்று விடும்..! இதுதான் "தாதா டெக்னிக்"...!

சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Image032

சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Image054

மேலே உள்ள புகைப்படங்கள் இரண்டும் நேற்று நான் என் கம்பெனி குவார்ட்டர்ஸில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் எடுத்தவை. உள்ளே நுழைந்தவுடன் நம் கண்ணில் படுமாறு வைக்கப்பட்டு இருப்பன அனைத்தும் அல்மராய் அயிட்டங்கள்தான். மற்ற பிராண்டுகள் வேண்டுமானால் இந்த ராக்கின் சந்தினுள்ளே புகுந்து சென்று எடுத்து வர வேண்டும்..! :)


இதை நம் பதிவர்களுக்கு புரியும்படி நம் மொழியில் (!?) சொல்வதானால், உதாரணமாக... தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைத்தவுடனே அது நேராக சென்று 'சூடான இடுகை', 'வாசகர் பரிந்துரை', 'மகுடம்' இங்கெல்லாம் போய் ஜம்மென்று ஒன்றிரண்டு நாட்கள் உட்கார்ந்து கொள்வதாய் வைத்துக்கொள்வோம்...! (அட.. சும்மா ஒரு பேச்சுக்கு..) அப்புறம் உங்கள் பதிவு ஹிட்ஸ் மழை பொழிந்து அடிச்சு நொறுக்கி பட்டையை கிளப்பாது..? அப்படித்தான் அல்மராய் வியாபாரம் லாபத்தை கொட்டோ கொட்டு என்று அள்ளிக்கொட்டியது..!


"இதை எல்லாம் பார்த்துக்கொண்டு மற்ற பால்பொருள் நிறுவனங்கள் எல்லாம் ஏன் சும்மா விரல் சூப்பிக்கொண்டு இருக்கின்றன..?" என்று நீங்கள் கேட்டால்... விடை... அல்மராய் நிறுவன ஓனர்... கொஞ்சம் இல்லை... ர்ர்ர்ர்ர்ரோம்ப பெரிய இடம்..! ஆமாம்..! சவூதி அரேபிய இளவரசர்..!


தமிழ்மணத்தில், எப்படி... "மகுடம் ஏறும் பதிவுகள் மட்டுமே சிறந்தவை; மற்றவை மோசம்" என்று நம்மால் கூற முடியாதோ... அதேபோல, 'அல்மராய் மட்டுமே சிறந்த பால்; மற்றவை மோசம்' என்றும் கூற இயலாது..! (சரியாத்தானே சொல்றேன் சகோ..?) அல்மராய் போலவே மற்றவையும் சிறந்தவையே..!

அல்மராய் மற்றும் இன்னபிற அனைத்து கம்பெனிகளின் 2-லிட்டர் பால் மற்றும் மோர் கேன்களின் விலை: 7 ரியால். (ரயான் மட்டும் 6 ரியால்) சொல்லப்போனால் நான் வாங்கும் இந்த 6 ரியால்-ரயான் பால், 7 ரியால் நாடக், நஜ்தியா இவற்றை விட சற்று சிறப்பாக, மற்றவைக்கு இணையாக இருக்கும்..!


நிலைமை இப்படி இருக்க, சென்ற மாதம் ஜூலை முதல்வாரத்தில் அல்மராய் மட்டும் தன் 2-லிட்டர் பால் மற்றும் மோர் கேன் விலையை அதிரடியாக திடீரென்று 8-ரியால் ஆக்கியது..!கேட்டால், 'தமக்கு விலை கட்டுபடியாகவில்லை' என்றது. மற்ற கம்பெனி பால் விலை ஏதும் ஏறவில்லையே..? 'மற்றவர்களுக்கு மட்டும் கட்டுபடியாகிறதே... அதெப்படி..?' என்றால், பதில் இல்லை..!


பிறகு அல்மராய், தம் பொருட்கள் ஒவ்வொன்றாய் விலை ஏற்றியது. பட்டர், ச்சீஸ் போன்ற சில பொருட்களின் விலையை ஏற்றாவிட்டாலும் 'ரகசியமாக' அளவையை மட்டும் சிறிது குறைத்தது..! எல்லாமே 'இந்த பால் கம்பெனி... இளவரசர் கம்பெனி' என்ற மமதை..!


சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Almarai6
இடது பக்கம் பழைய அளவு 910g / வலது பக்கம் புதிய அளவு 900g
சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Almarai4
இடது பக்கம் பழைய அளவு 200 ml / வலது பக்கம் புதிய அளவு180 ml
சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Almarai5
இடது பக்கம் பழைய அளவு 690g / வலது பக்கம் புதிய அளவு 680g

இங்கேதான் மக்கள் உஷாராயினர். இவையனைத்தையும் மக்கள் கண்டுபிடித்து போட்டோவுடன் இணையத்தில் பரப்பி விட்டனர்..! சவூதியில் மட்டுமே விலை ஏற்றி இருப்பதையும், இவை ஏற்றுமதி ஆகும் ஏனைய வளைகுடா நாடுகளில் அல்மராய் விலையேற்றம் செய்யாததையும் கூட அண்டைநாட்டு இணைய நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டனர்.!


சவூதியை பொறுத்தவரை ஏறக்குறைய இணைய வசதி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். மேலும், பாதிக்குமேல்பட்ட மக்கள்... இணைய வசதி உள்ள கைபேசியே வைத்து இருக்கின்றனர். இந்நிலையில்தான் யாரோ எங்கோ கொளுத்திப்போட்ட அல்மராய் பட்டாசு படபட வென வெடித்து சிதறியது. வெடித்த களங்கள்... SMS, ட்விட்டர், ஃபேஸ்புக், ஈ-மெயில், பிளாக்கர், ஃபோரம்... என்று எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் புகுந்து வெளியேறி ஒட்டுமொத்த மக்கட்தொகையையும் ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது.
.
சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Almarai7


அதென்ன அல்மராய் பட்டாசு..? ஒரே வாக்கியம்தான்..! "Let their milk rot" ("இவர்களின் பால் கெட்டழியட்டும்") #almarai #Marai #StopMara3i #Mara3i #saudi #ksa என்ற ட்விட்டர் ஹாஷ் டேக்ஸ், அப்புறம் இந்த http://twitpic.com/5m10k6 ட்விட்டர் இமேஜ்... இவற்றில் எல்லாம் சொல்லப்பட்டவை என்னவெனில்... 'யாரும் அல்மராய் பால்பொருட்களை இனி வாங்கக்கூடாது. ஒட்டுமொத்தமாய் பகிஷ்கரிக்க வேண்டும்' என்பது தான்..! கன்னாபின்னா என்று இச்செய்தி அனைவருக்கும் அரபியில் ஈ-மெயிலில் படத்துடன் பறந்தது இப்படி... (எனக்கும் மெயில்கள் வந்தன)
.
சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Almarai2
அரபியில் لا المراعي "லா அல்மராயி" என்றால்... "வேண்டாம் அல்மராய்" என்று அர்த்தம்.

இவ்விஷயத்தில் சில சூப்பர் மார்க்கெட்டுகள் ஒரு படி மேலே போய்... இந்த வார்த்தைகளை அல்மராய் பால் பொருட்கள் இருந்த ராக்கில் கூட நோட்டீஸ் ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டினர்..!


சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Almarai3
இந்த நோட்டீஸ் என்ன சொல்லுதுன்னா... "இவர்களின் பால் கெடட்டும்"..என்று..!

இதன் விளைவு..? விற்காமல் போய் EXPIRY DATE முடிந்த அயிட்டங்களை எல்லாம் கண்டெய்னர் கண்டெய்னராய் திரும்ப எடுத்துக்கொண்டு போய் ஆளரவமற்ற அத்துவான பாலைவன மண்ணில் கொட்டினார்கள். இரண்டே வாரம்தான் இப்படி கொட்டினார்கள்..!


சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Almarai
இவை எல்லாமே விற்காத எக்ஸ்பைரி ஆன மோர் கேன்கள். அட..! விற்காத எக்ஸ்பைரி ஆன பால் கேன்கள் எங்கே..? குசும்பர்கள்... ஒரையூற்றி மோர் ஆக மாற்றி இருப்பார்களோ..?

அதற்குள் இவர்களின் இலாபம், பங்குகள் எல்லாமே கடும் வீழ்ச்சியடைந்தன. இது கண்டு நிலைகுலைந்து போன அல்மராய், சென்றமாதம் ஜூலை நடுவில் அந்த மாபெரும் முக்கிய அறிவிப்பை அறிவித்தது. "மீண்டும் அதே முந்தைய பழைய விலையான 7 ரியால் தொடரும்"என்று..!


அப்போது அந்த சவூதி மக்களிடம் வந்த விழிப்புணர்வு, அது இணையம் மூலம் -குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலம்- எப்படி சில நாட்களில் ஒட்டு மொத்த நாட்டு மக்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, ஓர் ஒருமித்த உறுதியான முடிவை எடுக்க வைத்து மக்கள் நினைத்ததை சாதிக்க வைத்தது பார்த்தீர்களா சகோ..?


ஒரு கட்சி இல்லாமல்... ஒரு தலைவர் இல்லாமல்... ஆனால்... ஒருமித்த நல்ல குறிக்கோள் ஒன்றே அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது. அதுவே வெற்றியை நோக்கி அவர்கள் அனைவரையும் இயக்கியது. வென்று சாதிக்கவும் வைத்தது..!

சவூதி போன்ற நாட்டிலேயே இது சாத்தியப்படுகிறது என்றால்... நம் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில்... என்றோ... எவ்வளவோ மாற்றங்கள்... நடந்திருக்க வேண்டுமே சகோ..? ஏன்.. நடக்கவில்லை..? நாம் இந்த சமூக வலைத்தலங்களை இன்னும் சரியான முறையில் பயன்படுத்தவில்லை அல்லவா..?


[url=http://1.bp.blogspot.com/-YvV59bo9hEc/TkUnx9RyFcI/AAAAAAAAA7s/dim-xy52U9s/s1600/social web.JPG]சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Social web[/url]


வாருங்கள் சகோ...! இனியாவது நம் கையில் உள்ள இலவச சமூக வலைத்தளங்களான... ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் பஸ், கூகுள் பிளஸ், பிளாக்கர், ஈ-மெயில் ஆகிய இவற்றினை... பாலியல் மனோஇச்சை, வீணான பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், வெட்டி மொக்கைகள் என அல்லாமல் சரியான திசையில் சரியான நோக்கில் மக்கள் நன்மைக்காக பயன்படுத்தி நம் வாழ்வில் நம்முடைய எதிரிகளை வெல்லும் ஆயுதங்களாக மாற்றி அமைத்துக்கொள்வோமாக சகோ..! தீமையை ஒழித்து நன்மையை நிலைநாட்ட சமூக வலைத்தளங்களில் அதிகமாக இணையுங்கள்..!


இறைநாடினால் நம் ஒருமித்த தீரமான முயற்சிக்கு நிச்சயம் வெற்றி உண்டு சகோ..!


டிஸ்கி:- தன் MONTHLY ROTATION QUOTA மூலம் "புரச்சி(?)ப்பதிவுகள்" போட்டு எல்லாரையும் சகட்டுமேனிக்கு வசைபாடித்திரியும் "வசவு(?)கும்பல்" கூட, தம் 'மாதாந்திர இஸ்லாமிய கோட்டா'வில் இந்த மக்கள் புரட்சியை மக்களுக்கு சொல்லாமல் அமுக்கிவிட்டனர்..! ஏன்..?

சென்றமாத இஸ்லாமிய கோட்டாவில் 'ஆப்பிரிக்க பழங்குடி பெண்'களிடம் இருந்துவிட்டு அப்புறம் இம்மாத இஸ்லாமிய கோட்டாவுக்கு அங்கிருந்து நேராக பங்களாதேஷிற்குள் தாண்டிக்குதித்து 'அமிலம்' தேடி அலைந்ததில் படு பிசியாக இருந்ததால், இந்த 'சவூதி மக்கள் புரட்சி' மேட்டர் அவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதோ..? பொதுவாக, முஸ்லிம்களின் செயல்களை எல்லாம் இஸ்லாம் என்று ஏற்றிக்கூறுவதுதானே இவர்கள் வழக்கம்..!? அதன்படி, இதே இடுகை "சவூதி:மக்கள்இஸ்லாமிய புரட்சிக்கு மகத்தான வெற்றி..!"--என்ற தலைப்பில் வினவுவில் வருமா..!?! எப்படி வரும்..? பிறரால் நேர்ந்த கொடுமைகள் தவிர்த்து முஸ்லிம்கள் பற்றிய நல்லவைகளை மட்டும் சொல்லவே மாட்டார்களே..?

'புரட்சி புரட்சி' எனும் இவர்களின்... புரட்சி கூட... தன்மீது "நாத்திக சிவப்பு சட்டை" போட்டிருந்தால்தான் ஒத்துக்கொள்வார்களா..? அது... "ஆத்திக கருப்பு அல்லது வெள்ளை அங்கி" அணிந்திருக்கக்கூடாதா..? ம்..?

இதுபோன்ற போலிப்புரட்சிவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிப்போம் சகோ..!

Our sincere thanks to all these source websites and personal e-mails :-





நன்றி : ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) Empty Re: சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution)

Post by முஸ்லிம் Wed Aug 31, 2011 9:55 pm

test
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum