தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

Go down

லைலத்துல் கத்ரின் சிறப்புகள் Empty லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

Post by முஸ்லிம் Sun Aug 21, 2011 9:05 pm

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?.கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல் குர்ஆன் 97: 1-5)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!" என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 2014).

லைலத்துல் கத்ர் இரவை (ரமளானில்) கடைசி ஏழு நாள்களில் தேடுதல்:
இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானில்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரை கண்ட விசயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர் (ரமளானில்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!" என்று கூறினார்கள். (புஹாரி 2015).


அபூ சயீத்(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஹ்திகாப் இருந்தோம், அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலதுல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தாசெய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஹ்திகாப் இருந்தாரோ அவர் அவர் திரும்பவும் வரட்டும்" என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது, அந்த கூரை பேரீச்சை மட்டையினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தைப் பார்த்தேன். (புஹாரி 2016)

கடைசிப் பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் லைலதுல் கத்ரை தேடுதல்:
இது பற்றிய ஹதீஸை உபாதா(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமளானில் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரை தேடுங்கள்" என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 2017).


அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாள்களில் இஹ்திகாப் இருப்பார்கள் இருபதாம் இரவு கழித்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தம் இல்லம் திரும்புவார்கள் அவர்களுடன் இஹ்திகாப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி(ஸல்) அவர்கள் இரண்டு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். பின்னர் 'நான் இந்தப் பத்து நாள்கள் இஹ்திகாப் இருந்தேன் பிறகு கடைசிப் பத்து இஹ்திகாப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது' எனவே, என்னுடன் இஹ்திகாப் இருந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு காட்டப் பட்டது பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, கடைசிப் பத்து நாள்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நால்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வதுபோல் (கனவு) கண்டேன்!' எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் தோலும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை, நான் என் கண்களால் பார்த்தேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, சுப்ஹூ தொழுதுவிட்டுத் திரும்புவதையும் கண்டேன். (புஹாரி 2018).
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(லைலதுல் கத்ரை) தேடுங்கள்" என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 2019).


நபி(ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப்பத்து நாள்களில் இஹ்திகாப் இருப்பார்கள்' ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்!" எனக் கூறுவார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 2020).

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" ரமளானில் கடைசிப் பத்து நாள்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள்!' லைலதுல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!" என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 2021).
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" லைலதுல் கத்ர் இரவு கடைசி பத்து நாள்களில் உள்ளது அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது" என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 2022).

மக்கள் சச்சரவிட்டு கொண்டிருந்ததால் லைலத்துல் கத்ர் இரவு பற்றிய விளக்கம் நீக்கப்படுதல்:
உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்கள் கூறினார்கள்:
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள், "லைலதுல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன் அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!" எனக் கூறினார்கள். (புஹாரி 2023)


ரமளானின் கடைசிப்பத்தில் புரிய வேண்டிய வணக்கம்:


ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள் இரவை(அல்லாஹ்வைத் தொழுது) உயிர்பிப்பார்கள் (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!". (புஹாரி 2024).


Source : அழைப்புப்பணி
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11138
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum