உலகுக்கே குஜராத் உதாரணமாகத் திகழ்கிறது: மோடி
Page 1 of 1

அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்துக்காக 3 நாள் உண்ணாவிரதம் தொடங்கிய
குஜராத் முதல்வர் மோடி, உலகுக்கு தமது மாநிலம் உதாரணமாகத் திகழ்வதாகக்
கூறினார்.
அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரத்தை இன்று தொடங்கிய குஜராத் முதல்வர் மோடி பேசியது:
"அத்வானி, பாதல், துமால், ஜெட்லி மற்றும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மதத்
தலைவர்கள் இங்கே வந்திருப்பதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகுக்கே குஜராத் உதாரணமாகத் திகழ்கிறது. குஜராத்தின் வளர்ச்சி பற்றி நாடும் உலகும் பேசி வருகிறது.
குஜராத் பூகம்பத்துக்குப் பிறகு, இம்மாநிலம் ஒருபோதும் வளர்ச்சி அடையாது
என்று பலரும் கருதினர். ஆனால், குஜராத் மீண்டெழுந்து வளர்ந்த மாநிலமானது.
குஜராத்தில் எவரும் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள் என்று மக்கள் கூறினர்.
ஆனால், எல்லா முட்டுக்கட்டைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு புதிய உச்சத்தை
எட்டியிருக்கிறது.
குஜராத் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டனர். ஆக்ஷர்தம்
தாக்கப்பட்டபோது, குஜராத் பிளவுபட்டுவிடும் என்று நாடே நினைத்தது. அந்தத்
தாக்குதலுக்குப் பிறகு, நாம் அமைதிக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும்
முன்னுதாரணமாகத் திகழ்ந்தோம்.
எனது பிறந்தநாளை நான் ஒருபோதும் கொண்டாடுவது இல்லை. என் பிறந்த தினத்தில்
எவரையும் சந்திக்கவோ, எவருடனும் பேசவோ மாட்டேன். ஆனால், சனிக்கிழமையும்
ஞாயிற்றுக்கிழமையும் வசதியானது என்பதால் இன்றைய தினத்தை (இன்று - மோடியின்
பிறந்த நாள்) தேர்வு செய்தேன். தற்போதைய நிகழ்வுக்கு எனது பிறந்தநாளுக்கும்
சம்மந்தமில்லை," என்றார் நரேந்திர மோடி.
மோடி உரையின் முக்கிய அம்சங்களாவன:
* சத்பாவன இயக்கத்துக்கு நேரில் வந்து ஆசி வழங்கிய அனைவருக்கும் நன்றி.
* குஜராத் வளர்ச்சி பற்றி உலகமே வியந்து பேசிவருகிறது.
* 2001 பூகம்பகத்துக்கு பிறகு, எவரும் எதிர்பார்த்திடாத வகையில் குஜராத் மீண்டெழுந்துள்ளது.
* எவரும் குஜராத்தில் முதலீடு செய்ய வரமாட்டார்கள் என்ற எண்ணமும் தகர்க்கப்பட்டது.
* 2001 கலவரங்களுக்குப் பிறகு, நமது வலியை கேட்பதற்கு ஆளில்லை.
* பயங்கரவாத தாக்குதலால் பிளவு ஏற்படும் என்று கருதப்பட்டது. ஆனால், அமைதியும் சமூக நல்லிணக்கமும் நிலைநாட்டப்பட்டது.
* கடந்த 10 ஆண்டுகளாக குஜராத்தில் கலவரம் என்ற சூழலுக்கே இடமில்லாமல் போனது.
* இந்தியாவின் வளர்ச்சிக்கு குஜராத் பெரும் பங்கு வகிக்கும் என்பதை உலகுக்குச் சொல்ல விழைகிறேன்.
* இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் குஜராத் வந்து தங்கள்
வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்துக்கொள்வதற்கு அழைப்பு விடுக்கிறேன்.
* நாம் ஒருபோதும் தூண்டுதல்களுக்கு விலைபோய்விடக் கூடாது.
* நாம் அரசியலமைப்பு மற்றும் உண்மை வழியையே தேர்ந்தெடுப்போம்.
* நல்ல நிர்வாகத்துக்கு முன்னுதாரணமாகவே குஜராத் திகழ்கிறது.
* எனது மூன்று நாள் உண்ணாவிரதம் எவருக்கும் எதிரானது அல்ல.
* வாக்கு வங்கி அரசியலுக்கு 'சத்பாவனா மிஷன்' முற்றுப்புள்ளி வைக்கும்.
* எனது நாட்டுக்கும், எனது மாநிலத்துக்குமான சேவை என்றும் தொடரும்.
* நமது நோக்கம், 'இந்திய வளர்ச்சிக்காக குஜராத்தை முன்னேற்றுவோம்,' என்பதேயாகும்.
* மக்களின் வலியே எனது வலி. 6 கோடி குஜராத்தியர்களின் நம்பிக்கையே எனது நம்பிக்கை.
* எவரது பிரசங்கமும் குஜராத்துக்கு தேவையில்லை.
* எனது பிறந்தநாளை ஒருபோதும் கொண்டாடியது இல்லை. இந்த உண்ணாவிரதத்துக்கும் எனது பிறந்தநாளுக்கும் தொடர்பில்லை.
* பொதுவாழ்வில் இருக்கும் நாம் ஜனநாயகத்தை நம்புவோம்.
* எவர் மீதும் மனக்கசப்பு இன்றி ஒற்றுமையுடன் இருப்போம்.
உண்ணாவிரதம் ஏன்?
குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடி உள்ளிட்ட 63 பேரை சேர்ப்பது குறித்து
விசாரணை நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த
திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.
இதையடுத்து, குஜராத் மக்களுக்கு மோடி எழுதிய திறந்த மடலில், நாட்டில் சமூக
நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக
'சத்பாவன மிஷன்' என்கிற இயக்கத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்
ஒருபகுதியாக இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
அதன்படி, மோடி தனது 3 நாள் உண்ணாவிரதத்தை இன்று காலை தொடங்கினார். இதில்,
பிஜேபி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா
சுவராஜ், அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங்
பாதல் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சியும் இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு
தெரிவித்துள்ளது. சமூக நல்லிணக்கத்தைக் காக்கவே மோடி உண்ணாவிரதம்
மேற்கொண்டுள்ளார் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் மோடி, உலகுக்கு தமது மாநிலம் உதாரணமாகத் திகழ்வதாகக்
கூறினார்.
அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரத்தை இன்று தொடங்கிய குஜராத் முதல்வர் மோடி பேசியது:
"அத்வானி, பாதல், துமால், ஜெட்லி மற்றும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மதத்
தலைவர்கள் இங்கே வந்திருப்பதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
| |||

Similar topics
» ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மாவுக்கு குஜராத் மோடி அரசின் குற்றப்பத்திரிகை
» ஹரேன் பாண்டியா கொலை: குஜராத் மோடி அரசுக்கு நோட்டீஸ்
» குஜராத் ஆளுநரை நீக்கக் கோரி மோடி யாத்திரை செய்ய முடிவு
» குஜராத் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் – மோடி அரசுக்கு மேலும் பின்னடைவு
» குஜராத் கொலைகளுக்கு அனுமதி அளித்தது நரந்திர மோடி" : DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum