மோடிக்கு எதிராக காங்கிரஸ் போட்டி உண்ணாவிரதம்
Page 1 of 1

குஜராத் முதல்வர் மோடிக்கு எதிராக, அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் இன்று 'போட்டி' உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.
அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கதுக்காக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி
மூன்று நாள் உண்ணாவிரதத்தை இன்று காலை தொடங்கினார். அகமதாபாத் நகரில் உள்ள
குஜராத் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மண்டபத்தில் நடைபெறும் இந்த
உண்ணாவிரத நிகழ்வில் பிஜேபி மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக, குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் சங்கரசின் வகேலாவும், மோத்வாடியாவும்
ஏற்கெனவே அறிவித்தபடி, மோடிக்கு எதிராக போட்டி உண்ணாவிரத்தை இன்று காலை 10
மணியளவில் தொடங்கினர். மோடியின் உண்ணாவிரதம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம்
முன்பாக அவர்கள் தொடங்கினர்.
மோடியின் உண்ணாவிரதம் குறித்து நிருபர்களிடம் காங்கிரஸ் தலைவர் வகேலா
கூறுகையில், "சுயநலத்துடன் இமேஜை உயர்த்தும் நோக்கத்தில் ஐந்து மற்றும் ஏழு
நட்சத்திர கலாசாரத்தைப் பயன்படுத்தி ஓர் உண்ணாவிரத்தை மேற்கொள்வது
இன்றையச் சூழலில் தேவை என்று மக்களிடம் கேட்கிறேன். குஜராத் என்ன
சொர்க்கபூமியாகிவிட்டதா?"
மக்களின் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிட வேண்டியதன் அவசியம் தான் என்ன?
அவர் (மோடி) உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றால் வீட்டில்
இருந்துகொள்ளட்டுமே. ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு இதுபோன்ற தமாஷ்
வேலைகளைச் செய்யக் கூடாது.
இது ஊழல் அரசு. லோக் ஆயுக்தாவை விரட்டும் அரசு. இந்த உண்மைநிலையை
மக்களுக்கு உணர்த்தவே நாங்கள் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளோம்,"
என்றார் வகேலா.
தனது உண்ணாவிரதத்தையோட்டி மோடி எழுதிய திறந்த மடல், நாட்டிலுள்ள அனைத்து
மாநிலங்களிலும் பல்வேறு மொழி நாளிதழ்களிலும் இன்று அரசு விளம்பரமாக
வந்துள்ளதையும், அதற்கு மக்களின் கோடிக்கணக்கான பணம்
செலவழிக்கப்பட்டுள்ளதையும் காங்கிரஸ் சுட்டிக்காட்டியது.
"அரசுக்கு எதிராக ஊழல் புகார்கள் இருக்கின்றன. மாநில அரசின் கடன் 1.30
லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. இது பற்றி குஜராத் மக்களுக்குத் தெரியாது.
இதுதான் உண்மையான முன்னேற்றமா?" என்று வகேலா கேள்வி எழுப்பினார்.
குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடி உள்ளிட்ட 63 பேரை சேர்ப்பது குறித்து
விசாரணை நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த
திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தனக்கு வழங்கிய நற்சான்றாக பயன்படுத்திக்
கொள்ளும் வகையில் மோடி உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாக வகேலா
குற்றம்சாட்டினார்.
அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின் ஏ.சி. அறையில் மூன்று
நாட்களுக்கு நடைபெறும் உண்ணாவிரதத்துக்காக சுமார் ரூ.50 லட்சம் செலவாகிறது
என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு போட்டியாக இருக்கும் உண்ணாவிரதம் என்பதால், தங்கள் தலைவர்கள்
சபர்மதி ஆசிரமம் முன்பு தரையில் அமர்ந்து உணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக
குஜராத் காங்கிரஸார் கூறினர்.
| |||

Similar topics
» மோடிக்கு எதிராக மாயாவதி – மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா
» மோடிக்கு எதிராக போராட்டம் - மல்லிகா சாராபாய் கைது
» மோடிக்கு எதிராக அமிக்கஸ் க்யூரி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
» மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் – காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடம் – அன்னாவினால் எந்த பாதிப்பும் இல்லை
» மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ போட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum