சிக்கிம் நிலநடுக்க பலி 53 ஆனது; மீட்புப்பணிகள் தீவிரம்
Page 1 of 1

சிக்கிமில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை இன்று 53 ஆக அதிகரித்தது.
சிக்கிம் மாநிலத்தில் மட்டும் இடிபாடுகளில் சிக்கி 31 பேர்
பலியாகியுள்ளனர்; மேற்கு வங்கத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்; பிகாரில்
பீதியின் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் இறந்தார். நேபாளம்
மற்றும் திபெத் ஆகிய நாடுகளில் தலா 7 பேர் பலியாகினர்.
ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவையே உலுக்கிய இந்த கடுமையான
நிலநடுக்கத்தால் சிக்கிமின் வடக்குப் பகுதிகளே பெரும் பாதிப்புக்குள்ளாகின.
காங்டோக்-கில் இன்று காலை தான் மின்வினியோகம் சீரடைந்தது. இந்நகரில்
மட்டும் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வுகள் சுமார் 20 முறை
உணரப்பட்டிருக்கிறது.
சிக்கிமில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர்
மிகத் தீவிரமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இடிபாடுகளில்
சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காங்டோக்கை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான வீடுகள், கட்டடங்கள்
சேதமடைந்துள்ளன. சிக்கிமின் மலைப்பகுதிகள் நிலச்சரிவு அபாயம் மற்றும் கன
மழை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் கொண்ட ராணுவப் படை, சாலைகளை புனரமைப்பது உள்ளிட்ட நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
வடக்கு சிக்கிமில் மின் இணைப்புகளும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதும்
பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தின் சாலைவசதிகள் குறைவான
குக்கிராமங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும்
அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்க பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் போன்ற நிலைமைகளை பிரதமர்
மன்மோகன் சிங் தொடர்ந்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக உள்துறைச் செயலர்
அஜீத் குமார் சேத் கூறியுள்ளார்.
சிக்கிம் மாநிலத்தில் மட்டும் இடிபாடுகளில் சிக்கி 31 பேர்
பலியாகியுள்ளனர்; மேற்கு வங்கத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்; பிகாரில்
பீதியின் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் இறந்தார். நேபாளம்
மற்றும் திபெத் ஆகிய நாடுகளில் தலா 7 பேர் பலியாகினர்.
| |||
வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவையே உலுக்கிய இந்த கடுமையான
நிலநடுக்கத்தால் சிக்கிமின் வடக்குப் பகுதிகளே பெரும் பாதிப்புக்குள்ளாகின.
காங்டோக்-கில் இன்று காலை தான் மின்வினியோகம் சீரடைந்தது. இந்நகரில்
மட்டும் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வுகள் சுமார் 20 முறை
உணரப்பட்டிருக்கிறது.
சிக்கிமில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர்
மிகத் தீவிரமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இடிபாடுகளில்
சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காங்டோக்கை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான வீடுகள், கட்டடங்கள்
சேதமடைந்துள்ளன. சிக்கிமின் மலைப்பகுதிகள் நிலச்சரிவு அபாயம் மற்றும் கன
மழை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் கொண்ட ராணுவப் படை, சாலைகளை புனரமைப்பது உள்ளிட்ட நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
வடக்கு சிக்கிமில் மின் இணைப்புகளும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதும்
பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தின் சாலைவசதிகள் குறைவான
குக்கிராமங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும்
அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்க பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் போன்ற நிலைமைகளை பிரதமர்
மன்மோகன் சிங் தொடர்ந்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக உள்துறைச் செயலர்
அஜீத் குமார் சேத் கூறியுள்ளார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum