ஹமாஸ்-இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் முடிவானது
Page 1 of 1

காஸ்ஸா/டெல்அவீவ்:ஹமாஸும், இஸ்ரேலும்
கைதிகளை பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. 2006-ஆம் ஆண்டு காஸ்ஸா
தாக்குதலின் போது ஹமாஸால் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர் கிலாத்
ஷாலிதிற்கு பதிலாக 1027 ஃபலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.
ஷாலித் சில தினங்களில் விடுதலைச் செய்யப்படுவார் என இஸ்ரேல்
அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த
இஸ்ரேல் அமைச்சரவை எகிப்தின் மத்தியஸ்தத்தில் தயாரான ஒப்பந்தத்தை
அங்கீகரிக்க தீர்மானித்தது. 26 அமைச்சர்கள் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக
வாக்களித்தபோது 3 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
1027 ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளுக்கு பதிலாக
கிலாத் ஷாலிதை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான
காலித் மிஷ்அல் சிரியாவில் வைத்து உறுதிச்செய்தார். இது ஃபலஸ்தீனுக்கு
கிடைத்த வெற்றி எனவும், இதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஃபலஸ்தீன் சிறைக் கைதிகள் இரண்டு கட்டமாக
விடுவிக்கப்படுவார்கள். இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீன்
பெண்கள் உள்பட 450 பேர் ஒரு வாரத்திற்குள்ளும், 550 பேர் இரண்டு
மாதத்திற்குள்ளும் விடுதலைச் செய்யப்படுவார்கள். முதலில் விடுதலைச்
செய்யப்படும் 450 பேரில் 131 பேர் காஸ்ஸாவுக்கு செல்வர். 110 பேர் மேற்கு
கரைக்கு செல்வார்கள்.
ஆறுபேர் ஃபலஸ்தீனைச் சார்ந்த
இஸ்ரேலியர்களாவர். மீதமுள்ளவர்கள் நாடு கடத்தப்படுவர். இதில் 40 பேர்
ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேலில் நுழைய தடை விதிக்கப்பட்டவர்களாவர். 20
வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு விடுதலை செய்வதில் முன்னுரிமை
அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு கரை, காஸ்ஸா, ஜெருசலம், கோலான்
ஆகிய பகுதிகளைச் சார்ந்த ஃபலஸ்தீனியர்களை விடுதலைச் செய்யப்படுபவர்களில்
உட்படுத்த கவனம் செலுத்தியதாக காலித் மிஷ்அல் தெரிவித்தார்.
ஃபலஸ்தீனியர்களின் ஒற்றுமையைத்தான் இது
நிரூபிக்கிறது என கூறிய காலித் மிஷ்அல் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள
அனைத்து ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை போராட்டம்
தொடரும் என கூறினார்.
அதேவேளையில் ஃபத்ஹின் முக்கிய தலைவர்
மர்வான் பர்குத்தி, பாப்புலர் ஃப்ரண்ட் ஃபார் லிபரேசன் ஆஃப் ஃபலஸ்தீன்
தலைவர் அஹ்மத் ஸாதத் ஆகியோரை விடுதலைச்செய்ய முடியாது என இஸ்ரேல்
அறிவித்துள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை
எனவும், நாடு கடத்தப்படும் ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க
சாதிக்க முடிந்தது எனவும் ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான கஸ்னி ஹமத்
தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்ற எகிப்து, கத்தர்,துருக்கி, சிரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஹமாஸ் நன்றி தெரிவித்துள்ளது.
ஒப்பந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து
ஃபலஸ்தீன் தெருக்களில் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஸ்ஸாவில் ஜபலியா அகதி முகாமில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இஸ்ரேலிலும்
மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar topics
» இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம்(யு.ஏ.இ) இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்
» ஐக்கிய அரசுக்கு ஹமாஸ்-ஃபத்ஹ் ஒப்பந்தம்
» தேர்தலை விரைவில் நடத்த ஹமாஸ்-ஃபத்ஹ் ஒப்பந்தம்
» ஹமாஸ்-பத்ஹ் நல்லிணக்க ஒப்பந்தம்:இந்தியா வரவேற்பு
» ஹமாஸ் பதாஹ் ஒப்பந்தம்: நிதியுதவியை துண்டிக்குமாறு கோரும் அமெரிக்க செனட்டர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum