தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்

Go down

கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்  Empty கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்

Post by முஸ்லிம் Sun Oct 16, 2011 4:41 pm

கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்  Fb4-270x170திருவனந்தபுரம்/பெரும்பாவூர்/கோழிக்கோடு:
போலீஸ்-ஆட்சியாளர்களின் உரிமை மறுப்புக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மண்டல அளவிலான
பேரணிகள் மூன்று நகரங்களை மக்கள் வெள்ளத்தால் திணறடித்தது.

பேரணிக்கு முன்னோட்டமாக பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேடர்கள் சீருடை அணிந்து நடத்திய வாலண்டியர்
அணிவகுப்பு சுதந்திர தினத்தில் அணிவகுப்பு நடத்த மறுக்கும்
ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் படைத்த இறைவனை தவிர வேறு எவருக்கும்
அஞ்சமாட்டோம் என்ற துணிச்சலை பதிலாக அளிப்பதாக அமைந்தது.

‘சுதந்திரம் பிறப்புரிமை’ என்ற முழக்கத்துடன் திருவனந்தபுரம், பெரும்பாவூர், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருவனந்தபுரம் ப்ரஸ் க்ளப்பிற்கு அருகே
துவங்கிய பேரணியும், வாலண்டியர் அணிவகுப்பும் கிழக்கே கோட்டை காந்தி
பூங்காவில் முடிவடைந்தது. கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்  Fb6-344x170

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் மெளலவி
அஷ்ரஃப், மாநில தலைவர் அப்துல் ஹமீது, நூருல் அமீன், ஹாரிஸ் மற்றும்
திருவனந்தபுரம், கொல்லம், பத்தணம் திட்டா மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் தலைமை
வகித்தனர்.கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்  Fb2-344x228

கோழிக்கோட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின் தேசிய பொருளாளர் வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப்
பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்தார். வழக்கறிஞர் ரஃபீக் சிறப்புரை
நிகழ்த்தினார்.

கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்  Fb8-344x140

கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் முஹம்மது
தும்பே, பிரபல மனித உரிமை ஆர்வலர் க்ரோ வாசு, எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர்
எம்.கே.மனோஜ்குமார், எம்.வி. முனீர், வரவேற்பு குழு தலைவர் முஹம்மத்
அஷ்ரஃப் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தடை
விதித்திருக்கவே பாப்புலர் ஃப்ரண்ட் கேடர்கள் பெரும்பாவூரில் வாலண்டியர்
மார்ச்சும், பேரணியும் நடத்தினர். அணிவகுப்பை தடுத்த போலீசாரால் கேடர்களின்
பேரணியை தடுத்து நிறுத்தமுடியவில்லை.

கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்  Fbr1-344x228

தடைகளை தகர்த்து கேடர்கள் முன்னேறிய கட்டத்தில் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போலீசாரே பேரணியை நடத்த அனுமதி வழங்கினர்.

மாவட்டத் தலைவர்களையும்,
வாலண்டியர்களையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர். பெரும்பாவூரில்
முதலில் அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் இரண்டு தினங்களுக்கு முன்பு
பேரணிக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். ஆனால், சரியாக 3 மணிக்கே பாப்புலர்
ஃப்ரண்டின் சீருடை அணிந்த 600 வாலண்டியர்கள் பாண்ட் வாத்தியங்களை முழங்கி
காலடிகளை எடுத்துவைக்க துவங்கினர். பின்னால் பாலக்காடு, திருச்சூர்,
இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த
கேடர்களும் திரண்டனர்.

பேரணிக்கு ஆதரவு தெரிவித்து தேசிய பெண்கள்
முன்னணி(NWF)யைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பெண்களும் திரண்டிருந்தனர்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து அரசு மருத்துவமனைக்கு அருகில் வைத்து மாவட்ட
எஸ்.பி தலைமையில் போலீஸ் தடைகளை வைத்து தடுத்து நிறுத்தியது.

கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்  Fb3-344x228

ஆனாலும், மக்கள் தொடர்ந்து வந்துக்
கொண்டேயிருந்தனர். இதனால் போலீஸ் செய்வதறியாது திணறியது. இதனைத் தொடர்ந்து
வேறுவழியில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி பேரணிக்கு அனுமதி அளித்தது போலீஸ்.

கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்  Fb5-344x160

தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தை பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர்
கே.எம்.ஷெரீஃப் துவக்கி வைத்தார். நீதி மறுக்கப்படும் பொழுது நீதியை
நிலைநாட்டுவதற்காக குடிமக்கள் சட்டத்தை மீறவேண்டிய சூழலுக்கு
நிர்பந்திக்கப்படுகின்றனர் என தனது உரையில் ஷெரீஃப் குறிப்பிட்டார். தேசிய
செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் பி.கோயா சிறப்புரை நிகழ்த்தினார்.


கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதாரமில்லாமல் பொய் குற்றச்சாட்டுகளை பரப்பும் உளவு நிறுவனங்களை கலைக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
» கேரளா:பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை
» கேரளா:நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு
» பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும்: பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியா
» இஸ்ரேல்-இந்தியா ஒப்பந்தம்: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum