ஹிசாரில் ஜன்ஹித் காங்கிரஸ் வெற்றி; வெற்றிக்கு அன்னா ஹசாரே காரணமல்ல- குல்தீப்
Page 1 of 1

ஹிசார்:ஹரியானாவின் ஹிசார் மக்களவைத்
தொகுதி இடைத்தேர்தலில் ஜன்ஹித் காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப் பிஷ்னோய்
23,617 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அன்னா ஹசாரே குழுவினரால் எதிர்ப்புப்
பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்
ஜெயபிரகாஷ் 3-வது இடத்தை வகித்தார்.
கடந்த 2009-ல் ஹிசாரில் நடந்த தேர்தலில்
முன்னாள் முதல்வர் பஜன் லால் 2.48 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி
பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகு அந்தத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில்
அவருடைய மகன் குல்தீப் போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் முதல் முறையாக, அன்னா
ஹசாரே குழுவால் காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனால்,
இந்தத் தேர்தலின் முடிவு முக்கியத்துவம் பெற்றது.
வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை தொடங்கி
நடைபெற்று வந்த நிலையில், ஜன்ஹித் காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப் பிஷ்னோய்
23,617 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிக்கு ஹசாரே காரணமல்ல..
ஹிசார் இடைத்தேர்தலில் தனக்கு கிடைத்த வெற்றிக்கு அன்னா ஹசாரே குழு காரணமல்ல என்று குல்தீப் பிஷ்னோய் கூறினார்.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த
குல்தீப், “என்னுடைய தந்தையாலும், கூட்டணி கட்சியான பிஜேபியின் ஆதரவாலும்
தான் இந்த வெற்றி உறுதி செய்யப்பட்டது.
அன்னா ஹசாரே நான் ஆதரிக்கிறேன். ஆனால், மக்கள் யாருக்கு வாக்களிக்க
வேண்டும் என்று தீர்மானிக்க தாங்கள் யார் என்பதை அவரது குழு புரிந்துகொள்ள
வேண்டும். அவர்கள் ஊழலுக்கு எதிராக இருக்கிறார்களா அல்லது காங்கிரஸுக்கு
எதிராக இருக்கிறார்களா?
காங்கிரஸ் மட்டுமின்றி, ஊழல் புரியும் அனைத்து கட்சிகளுக்கு எதிராகவும் அவர்கள் செயல்பட வேண்டும்,” என்றார் குல்தீப்.
அதேவேளையில், ஹிசாரில் கிடைத்த தோல்வி, காங்கிரஸுக்கு புகட்டப்பட்ட பாடம் என அன்னா ஹசாரே குழு கூறியுள்ளது.

Similar topics
» உடைந்து நொறுங்கும் அன்னா ஹசாரே கூடாரம்?
» நரேந்திர மோடி செய்தது தவறு - அன்னா ஹசாரே!
» அத்வானியின் ரதயாத்திரை ஒரு ஏமாற்று வேலை! அன்னா ஹசாரே
» இடைத்தேர்தல்:2 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி – பா.ஜ.கவுக்கு பின்னடைவு
» ஆர்.எஸ்.எஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டுச் சதி செய்கின்றன - அன்னா ஹஸாரே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum