தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...

Go down

தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்... Empty தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...

Post by முஸ்லிம் Mon Oct 17, 2011 5:14 pm


தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்... Bismillah_2




நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.


ஏற்கனவே
எடுத்த முடிவின்படி, தமிழ்மணதிற்கெதிராக இன்று (தமிழ்மணத்தில் இணைந்துள்ள)
முஸ்லிம் பதிவர்களின் பதிவுகள் தொடர்ந்து வெளிவரும், இன்ஷா அல்லாஹ். இதுவரை
வெளிவந்துள்ள பதிவுகளின் சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


முதலில், இந்த பதிவை படிக்கும் முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த பதிவு
உங்களை கொதிப்படைய செய்யலாம். பொறுப்பான சேவையில் இருக்க வேண்டிய திரட்டி,
பொறுப்பற்ற முறையில் இஸ்லாமிய போதனையை கேலியும், அவமதிப்பும்
செய்திருப்பது உங்களது உணர்ச்சிகளை தூண்டலாம். நான் கேட்டுக்கொள்வதெல்லாம்,
இறைவன் காட்டிய வழிப்படி பொறுமையை கடைப்பிடித்து அழகாக முறையில் நம்
எதிர்ப்பை காட்டுவோம் என்பதுதான். இன்ஷா அல்லாஹ்.


முதலில் தமிழ்மணம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு அது குறித்து
சொல்லிவிடுகின்றேன். தமிழ்மணம் என்பது பல்வேறு பதிவர்களின் ஆக்கங்களை
சேகரித்து ஒரே இடத்தில் கொடுக்கும் தளமாகும் (திரட்டி). தமிழ்மணம் போல
தமிழில் எண்ணற்ற திரட்டிகள் உண்டு.



சென்ற மாதம் தமிழ்மணத்துடனான ஒரு உரையாடலின் போது (அந்த உரையாடலை காண இங்கே
சுட்டவும்) அவர்களை நோக்கி "உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும்
நிலவுவதாக" என்று முகமன் கூறியதற்கு, தமிழ்மணம் அளித்த பதில் அதிர்ச்சி
தந்தது. அது,





"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"



இந்த பதில் அதிர்ச்சியை கொடுத்தாலும், அந்த தளத்தை விவாதக்களமாக்க விரும்பாததால் இது குறித்து கேட்கவில்லை.




ஆனால், சில நாட்களுக்கு முன்பு terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண
நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது.





"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"


ஒரு திரட்டியின் நிர்வாகி பொறுப்பில் இருப்பவர் இப்படியான தரம் தாழ்ந்த கருத்தை கூறுவது மிகுந்த வேதனையளிக்கும் விசயம்.




இரமணிதரனின் இந்த செயல், இஸ்லாமிய போதனையை கேள்வி செய்வதாகவும்,
கொச்சைபடுத்துவதாகும் இருந்ததால், இதுக் குறித்து விளக்கம் அளிக்குமாறு தனி
மெயில் ஒன்றை தமிழ்மண நிர்வாகத்திற்கு அனுப்பினோம். அந்த மெயில்
சென்றடைந்ததும் இரமணிதரன் அவர்களைத் தான்.




அந்த மெயிலிற்கு பதிலளித்த ரமணிதரன், தனி நபரின் கருத்தை தமிழ்மணத்தின்
கருத்தாக கருதி தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்ப வேண்டுமா என்றும், எனினும்
இதனை தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளின் கவனத்திற்கு அனுப்புவதாகவும்
கூறினார். அதுமட்டுமல்லாமல், அந்த கருத்தை நீங்கள் உங்களை கேலி செய்வதாக
ஏன் நினைக்கின்றீர்கள் என்றும் கூறியிருந்தார் (பின்பு பதிவுத்தோஷம் என்று
எதனை குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை).




ரமணிதரன் அவர்களின் இந்த பொறுப்பற்ற பதில் முஸ்லிம்களை மேலும் கொதிப்படைய
செய்தது. ஏனென்றால், அந்த தளத்தில் விவாதித்த ரமணிதரன், தமிழ்மணம்
சார்பாகவே தான் கருத்து கூறுவதாக ஆரம்ப கமெண்ட்டுகளிலேயே (இரண்டாவது
கமெண்ட்) தெரிவித்துவிட்டார். இதனை உறுதிப்படுத்திக் கொண்டு தான்
தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்பினோம்.




தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்... Capture




இருப்பினும் பொறுமைக் காத்து, தமிழ்மணம் சார்பாக தான் செயல்படுவதாக
ரமணிதரன் கூறிய அந்த கமெண்ட்டை ஆதாரமாக அனுப்பி, மறுபடியும் விளக்கம்
கேட்டோம். அதற்கு பதில் என்ற பெயரில் ரமணிதரன் கூறியிருந்தது மிகவும்
துரதிஷ்டவசமானது.




என்ன தெரியுமா கூறினார்?? ஒரு கமெண்ட்டில் தானே தமிழ்மணம் சார்பாக
என்றிருக்கின்றது, நீங்கள் குறிப்பிட்ட கமெண்ட்டில் அப்படி இல்லையே என்று.




என்ன அறியாமைக்கருத்து இது??? அப்படியென்றால் அந்த ஒரு கமெண்ட் மட்டுமே
தமிழ்மணம் சார்பாக போடப்பட்டது, மற்ற அவருடைய கருத்தெல்லாம் இவருடைய
தனிப்பட்ட கருத்தாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.




இருப்பினும், தமிழ்மண நிர்வாகிகள் பதில் சொல்லுவார்கள் என்று பொறுமை
காத்தோம். தமிழ்மண நிர்வாகிகளின் பதில் வரும் வரை எங்களின் பதிவுகளில்
தமிழ்மண வோட்டு பட்டையையும், தமிழ்மணத்தில் எங்கள் பதிவை சேர்ப்பதையும்
நிறுத்திவைத்தோம். இதனாலேயே கடந்த இரு நாட்களில் பதிவிட்ட (இந்த
விவகாரங்களை பற்றி தெரிந்த) முஸ்லிம் சகோதர சகோதரிகள், தமிழ்மணத்தில்
தங்களுடைய பதிவுகளை சேர்க்கவில்லை, வோட்டு பட்டையையும் தூக்கிவிட்டார்கள்.




இதுநாள் வரை தமிழ்மண நிர்வாகிகளின் பதில் வரவில்லை. ஆகையால் இந்த விசயத்தை பொதுவில் வைக்கின்றோம்.




தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த
செயலுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றோம். இஸ்லாமிய
முகமனை கேலி செய்ததற்காக முஸ்லிம்களிடம் தமிழ்மணம் பகிரங்க மன்னிப்பு கேட்க
வேண்டும். அதனை அந்த தளத்திலேயே இரமணிதரன் கேட்டாலும் பரவாயில்லை.




நேரம் தாமதிக்காது தமிழ்மணம் இந்த விசயத்தில் செயல்படுவது சாலச்சிறந்தது.


அந்த தளத்தில், அந்த தள உரிமையாளர்களுக்கும், அங்கே கமெண்ட் போட்டவர்களின்
கருத்துக்கும் பதில் என்று பெயரில் சகோதரர் இரமணிதரன் கூறிய வார்த்தைகள்
ஆபாசத்தின், அருவருப்பின், அநாகரிகத்தின் உச்சக்கட்டம். எங்களுடைய கடும்
கண்டனத்தை இதற்கு தெரிவித்து கொள்கின்றோம்.ஒரு நிர்வாகி இப்படி செயல்படுவதை
இதற்கு முன் பார்த்ததில்லை. இனி பார்க்ககூடாதென்றும் இறைவனிடம்
பிரார்த்திக்கின்றேன். பொதுவில் இப்படி பேசி எல்லார் மனங்களையும்
உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்கு பகிரங்க மன்னிப்பை சகோதரர் ரமணிதரன் கேட்க
வேண்டும்.


மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன செய்வார்கள் முஸ்லிம்கள் என்ற
எண்ணத்தில் தமிழ்மண நிர்வாகம் இருக்குமானால், வெறும் வோட்டுபட்டையை
நீக்குவதுடனும், தமிழ்மணத்தில் இருந்து விலகுவதுடனும் எங்களது நடவடிக்கைகள்
முடிவடையாது என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இதற்கு
ஆதாரமாக வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள் கொட்டிக்கிடக்கின்றன.



பதிவர்கள், வாசகர்கள் இல்லையேல் திரட்டிகள் கிடையாது. இதனை படிக்கும்
முஸ்லிம்கள் பொறுமைக்காத்து, இதுக் குறித்த உங்கள் கண்டனங்களை அழகான
முறையில் தமிழ்மணத்திற்கு தெரியப்படுத்தவும் (admin@thamizmanam.com). மேலும் நீங்கள் அறிந்தவர்களுக்கும் இதனை அனுப்பி அவர்களுடைய கண்டனத்தையும் பதிவு செய்ய சொல்லவும்.



”..நீங்கள்
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்,
பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்.
அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்"
- குர்ஆன் 5:2



குறிப்பு: எங்களிடம் இருந்த, தமிழ்மணத்தில் இணைந்துள்ள முஸ்லிம்
பதிவர்களின் மெயில் முகவரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைக்காதவர்கள், இதனை பார்த்த பிறகு, உங்கள் தளங்களிலும் கண்டனத்தை
பதியுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.




இதுவரை இன்று வெளிவந்துள்ள முஸ்லிம்களின் ஏனைய கண்டன பதிவுகள் (இந்த பகுதி தொடர்ந்து update செய்யப்படும்):

1. சகோதரி அஸ்மா: http://payanikkumpaathai.blogspot.com/2011/10/blog-post_17.html
2. சகோதரர் குலாம்: http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html
3. சகோதரர் Faaique: http://faaique.blogspot.com/2011/10/blog-post_16.html
4. சகோதரர் முஹம்மது ஆஷிக்: http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_17.html
5. சகோதரர் அப்துல் பாசித்: http://bloggernanban.blogspot.com/2011/10/remove-tamilmanam-vote-button.html
6. சகோதரர் ஹைதர் அலி: http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_16.html
7. சகோதரி ஆமீனா: http://kuttisuvarkkam.blogspot.com/2011/10/blog-post_17.html
8. சகோதரர் ஜமால்: http://www.itsjamaal.com/2011/10/my-dear-blog-friends.html
9. சகோதரர் ரஜின்: http://sunmarkam.blogspot.com/2011/10/blog-post.html
10. சகோதரர் இளம் தூயவன்: http://ilamthooyavan.blogspot.com/2011/10/blog-post.html
11. சகோதரர் அந்நியன் 2 (அய்யூப்): http://naattamain.blogspot.com/2011/10/blog-post.html
12. சகோதரர் கார்பன் கூட்டாளி: http://carbonfriend.blogspot.com/2011/10/blog-post.html
13. சகோதரி ஜலீலா கமால்: http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/blog-post_17.html
14. சகோதரர் சிநேகிதன் அக்பர்: http://sinekithan.blogspot.com/2011/10/blog-post.html
15. சகோதரர் ஹாஜா மைதீன்: http://hajaashraf.blogspot.com/2011/10/blog-post.html
16. சகோதரர் HajasreeN: http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html

17. சகோதரர் அரபுத்தமிழன்: http://ibnuzubairtamil.blogspot.com/2011/10/blog-post_17.html

18. சகோதரர் அப்துல் ஹகீம்: http://neermarkkam.blogspot.com/2011/10/thamil-manme-mannippukkeel.html

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன்.


இறைவனே எல்லாம் அறிந்தவன்...




வஸ்ஸலாம்,




உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹமத் அ



எதிர்க்குரல்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இஷ்ரத்தை குறித்து அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மன்னிப்பு கேட்க பிரமுகர்கள் கோரிக்கை
» நார்வே கூட்டுப்படுகொலை:ப்ரெவிக் மீது பகிரங்க விசாரணை
» மோடிக்கு அஞ்சும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களிடம் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் – பதேஹ்பூரி இமாம்
» கஷ்மீர்:ஆர்ப்பாட்டங்களின் போது கல்லெறிந்தவர்களுக்கு பெருநாள் பரிசாக பொது மன்னிப்பு
» அப்சல் குருவுக்கு மன்னிப்பு: காஷ்மீர் பேரவையில் அமளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum