சிரிய அரசுடன் எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அரபு லீக் கோரிக்கை
Page 1 of 1

தங்கள் கூட்டமைப்பில் இருந்து சிரியாவை நீக்குவது குறித்து கலந்தாலோசித்த
அரபு லீக் அந்த முடிவைக் கைவிட்டு சிரிய அரசும் எதிர்க்கட்சிகளும்
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.எகிப்து தலைநகர்
கெய்ரோவில் நேற்று முன்தினம் அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக்
கூடியது. அதில் கூட்டமைப்பில் இருந்து சிரியாவை நீக்குவது குறித்து
ஆலோசிக்கப்பட்டது.
எனினும் சில நாடுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அதனால் சிரியாவை
அமைப்பில் இருந்து நீக்கும் முயற்சி கைவிடப்பட்டது. தொடர்ந்து பேசிய பொதுச்
செயலர் நபில் அல் அரபி கூறுகையில்,"இன்னும் 15 நாட்களுக்குள் கெய்ரோவில்
சிரிய அரசும் எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தையைத் துவக்க வேண்டும்.
வன்முறையை நிறுத்துவற்கான நடவடிக்கைகளைத் துவக்க சிரியாவில் செயல்படும்
குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து சிரிய அரசு தொலைக்காட்சியில் வெளியான
செய்தியில்,“கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்த சிரிய அரசுக்குத் தயக்கம்
உள்ளது. இந்த விவகாரத்தை தானே சமாளித்துக் கொள்வதாக சிரிய அரசு
கூறியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் பல பொருளாதாரத் தடைகளை சிரியா மீது
விதித்துள்ள நிலையில் அரபு லீக்கும் சிரியாவைக் கைகழுவி விட்டால் சிரிய
அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» சிரியாவுக்கு அரபு லீக் இறுதி எச்சரிக்கை
» பாக்.கொடி ஏற்றம்:ஸ்ரீராமசேனாவை தடைச்செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை
» அடையாளம் தெரியாத கல்லறைகள்:விசாரணை நடத்த மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை
» சஞ்சீவ் பட் சாட்சியாக வேண்டும் – குல்பர்க் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை
» காஸாமீதான முற்றுகைக்கு முடிவு வேண்டும்- 21 சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum