தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடும் விமர்சனங்களால் விரக்தி: மவுன விரதத்தை தொடர ஹசாரே முடிவு

Go down

கடும் விமர்சனங்களால் விரக்தி: மவுன விரதத்தை தொடர ஹசாரே முடிவு Empty கடும் விமர்சனங்களால் விரக்தி: மவுன விரதத்தை தொடர ஹசாரே முடிவு

Post by முஸ்லிம் Fri Oct 28, 2011 6:18 pm

எங்கள் குழுவில் உள்ளவர்கள் பற்றி ஒரு சிலர் கடும்
வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர். இது என்னை மிகவும் பலவீனமாக்கியுள்ளது.
எனவே என் மவுன விரதத்தை தொடர முடிவு செய்துள்ளேன் என ஹசாரே கூறியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும்
காந்தியவாதி அன்னா ஹசாரே கடந்த 16ம் திகதி முதல் தன் சொந்த ஊரான மகாராஷ்டிர
மாநிலம் ராலேகான் சித்தியில் மன அமைதிக்காக மவுன விரதம் இருந்து
வருகிறார்.

இதற்கிடையே அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கிரண் பேடி, பிரசாந்த் பூஷன்,
அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை குறிவைத்து புகார்களும், விமர்சனங்களும்
எழுந்தன. இதன் உச்சக்கட்டமாக பிரசாந்த் பூஷன் தாக்கப்பட்டர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில மூத்த தலைவர்கள், அன்னா ஹசாரே
குழுவினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் ஹசாரேவுக்கு
கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நேற்று அவர் இணையதளத்தில் தெரிவித்துள்ளதாவது: மவுன
விரதத்தை தொடர்வதற்கு என் உடல் நிலை கைகொடுக்கவில்லை. என் பாதங்கள்,
முழங்கால் ஆகியவற்றில் கடுமையான வலி உள்ளது, பாதங்கள் வீக்கமடைந்துள்ளன.

எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களை ஒரு சிலர் கடுமையாக விமர்சித்து
வருகின்றனர். இது என்னை மிகவும் பலவீனமாக்கியுள்ளது. இந்த பிரச்னையை
தவிர்க்கும் வகையில் மவுன விரதத்தை தொடர முடிவு செய்துள்ளேன்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவரான திக்விஜய் சிங், அன்னா ஹசாரே குழுவினரை நேற்றும் கடுமையாக விமர்சித்தார்.

ராம் தேவ், ஹசாரே, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்களின் பின்னணியில், பா.ஜ
- சங் பரிவார் அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்பினர் தான் மூவரையும் தூண்டி
விடுகின்றனர்.

சங் பரிவார் அமைப்பின் தீவிரவாதச் செயல்களில் இருந்து மக்களின் கவனத்தை
திசை திருப்புவதற்காகவே ஊழல் பிரச்னைகளை இவர்கள் பேசி வருகின்றனர் என
இணையதளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுகையில், "ஒவ்வொருவருக்கும் தங்களது
கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு உரிமை உண்டு. ஒரு சிலர் பல்வேறு
விஷயங்களைப் பற்றி எழுதுகின்றனர். இவர்களைப் போன்றவர்களின் ஒவ்வொரு
கருத்துக்களுக்கும், நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

பா.ஜ செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,"ஊழலுக்கு
எதிராக போராட்டம் நடத்தும் அனைவரையும் விமர்சிக்க வேண்டும் என்பது தான்
திக்விஜய் சிங்கின் திட்டம். இதுபோன்று அவர் தொடர்ந்து பேசினால்
காங்கிரசின் நம்பகத்தன்மை முழுமையாக பறிபோய் விடும்” என்றார்.


கடும் விமர்சனங்களால் விரக்தி: மவுன விரதத்தை தொடர ஹசாரே முடிவு Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுரை:சுப்ரமணிய சுவாமியின் மீது வழக்கு தொடர சிறுபான்மை கமிஷன் முடிவு
» புலனாய்வு ஏஜன்சிகள் மீதான பயம் காரணமாக பிரவீன் சுவாமியின் மீது வழக்கு தொடர தயங்கும் முஸ்லிம் இளைஞர்கள்
» ஹசாரே குழுவினர் மீது மீண்டும் தாக்குதல்!
» உடைந்து நொறுங்கும் அன்னா ஹசாரே கூடாரம்?
» முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க முடிவு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum