தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடல்கள் இடையே உள்ள திரைகள்

Go down

கடல்கள் இடையே உள்ள திரைகள்  Empty கடல்கள் இடையே உள்ள திரைகள்

Post by முஸ்லிம் Sun Oct 17, 2010 4:20 pm

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَنِ بَيْنَهُمَا بَرْزَخٌ لاَّيَبْغِيَن

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)


அரபி மூலத்தில் பர்ஸக் எனும் சொல் இடம் பெறுகின்றது.இதன் பொருள் ஒரு தடுப்பு அல்லது பிரிவினை என்பதாகும். இந்தத் தடுப்பு என்பது ஜடரீதியான (Material) அல்லது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு அல்ல. 'மரஜா' எனும் அரபிச் சொல்லின் அசலான அர்த்தம் அவர்கள் இருவரும் சந்தித்து கலந்து கொண்டனர் என்பதாகும்.

இன்றைய நவீன அறிவியல் இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது.

ஆனால், ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சி உறுதி செய்துள்ளார்.

மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றது.


وَهُوَالَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هَذَاعَذْبٌ فُرَاتٌ وَّهَذَامِلْحٌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًامَّحْجُوْرًا

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)

நதி முகத்துவாரங்களில், அதாவது இரண்டு நதிகள் சந்திக்கும் இடங்களில் உப்பு நீரிலிருந்து சுவைமிகு நீரை தனியாகப் பிரித்து அடையாளம் காட்டும் ஒரு திரை அல்லது மண்டலம் (Pycnocline Zone) உள்ளது. (இம்மண்டலத்தையே திருக்குர்ஆன் திருக்குர்ஆன் ஹிஜ்ரம் மஹ்ஜூரா என்று குறிப்பிடுகின்றது.) இப்பிரிவினை மண்டலம் சுவை நீரிலிருந்தும், உப்பு நீரிலிருந்த்தும் வித்தியாசமான அளவு உப்புத்தன்மை கொண்டுள்ளது.

இந்த இயற்கை நிகழ்வு கடலின் பல்வேறு இடங்களில் ஏற்படுகின்றது. மத்தியத்தரைக்கடலுக்குள் ஓடி மறையும் எகிப்தின் நைல் நதியிலும் இது நிகழ்கின்றது.


நன்றி : http://hakkem.blogspot.com/
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள்
» மும்பை குண்டுவெடிப்பு:புலனாய்வு ஏஜன்சிகள் இடையே கருத்து வேறுபாடு
» இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம்(யு.ஏ.இ) இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்
»  பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் உள்ள கோவில் இடிப்பு!
» பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்க! ஜவாஹிருல்லாஹ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum