பாகிஸ்தானின் அரசியலில் இம்ரான்கானின் அலை வீசுகிறது
Page 1 of 1

லாகூர்:பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்
முன்னாள் தலைவரும் தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான்
பாகிஸ்தான் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவருகிறார்.
பாகிஸ்தானில் முக்கிய அரசியல் கட்சிகளான பாகிஸ்தான் பீப்பிள்ஸ்
பார்டிக்கும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ் ஷெரீஃப் பிரிவு) கட்சிக்கும்
ஒரே போல் இன்ஸாப் சவாலை விடுக்கிறது.
நேற்று முன்தினம் லாகூரில் இன்ஸாப் கட்சி
நடத்திய பிரம்மாண்ட பேரணியை இதற்கு ஆதாரமாக அரசியல் நோக்கர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அரசு எதிர்ப்பு
பேரணியில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துக்கொண்டனர்.
பேரணியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய
இம்ரான் கான், பாகிஸ்தானின் பி.பி.பி, பி.எம்.எல் ஆகிய இருகட்சிகளின்
மேற்கத்திய விசுவாசத்தை கடுமையாக சாடினார். ’இது ஒரு பிரளயமல்ல.
சுனாமியாகும்.இதன் முன்னால் வருபவர்களெல்லாம் வழிந்தோடி விடுவார்கள்’என
இம்ரான்கான் கூறினார்.
இம்ரான் கானின் மக்கள் ஆதரவை உயர்த்திய
சம்பவமாக பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் நடந்த பேரணி
கருதப்படுகிறது.கடந்த ஜூன் மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நடத்திய
கருத்துக்கணிப்பில் இம்ரான்கானுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்துவருவதாக
தெரியவந்தது. குறிப்பாக பாகிஸ்தான் இளைஞர்களிடையே இம்ரான் கானுக்கு ஆதரவு
அதிகரித்து வருகிறது.
இதற்கு காரணம் அமெரிக்காவிற்கு எதிரான
கடுமையான இம்ரான் கானின் நிலைப்பாடாகும் என கருதப்படுகிறது.
அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் அளிக்கும் ராணுவ ஒத்துழைப்பை பகிரங்கமாக
எதிர்க்கும் இம்ரான்கான் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு
எதிராக எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவராவார். கடந்த வெள்ளிக்கிழமை
ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கான் தலைமையில்
2000 பேர் பாராளுமன்றத்திற்கு பேரணி நடத்தியிருந்தனர்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில்
தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தற்பொழுது உறுப்பினர்கள் இல்லை.2013
பெப்ருவரியில்தான் இனி தேர்தல் நடைபெறும். ஆனால், நாட்டின் பொருளாதார
நெருக்கடி, தீவிரவாத ஒழிப்பு ஆகியவற்றில் அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை
சுட்டுக்காட்டி பி.எம்.எல்-நவாஸ் ஷெரீஃப் கட்சி வெள்ளிக்கிழமை அரசு பதவி
விலக கோரி பேரணி நடத்தியிருந்தது. அழுத்தங்களுக்கு அஞ்சி அரசு தற்பொழுது
தேர்தலுக்கு தயாரானால் அது மிக அதிகமாக இம்ரான் கானின் கட்சிக்கு ஆதாயமாக
மாறும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum