தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பன்றி வெடிக்கும் அத்வானிக்கும் என்ன தொடர்பு?

Go down

பன்றி வெடிக்கும் அத்வானிக்கும் என்ன தொடர்பு?  Empty பன்றி வெடிக்கும் அத்வானிக்கும் என்ன தொடர்பு?

Post by முஸ்லிம் Fri Nov 04, 2011 6:34 pm

குண்டு வெடிப்பு செய்திகளை வெளியிடுவதில்
பத்திரிக்கை துறையினர் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வது குறித்து பிரஸ்
கவுன்சில் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வெளிப்படையாகவே குற்றம் சாட்டிய
பின்பும் வெறும் பரப்பரப்புக்காகவும், பத்திரிகை அலுவலகத்தில் நல்ல பெயர்
சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும் செய்தியாளர்கள் காட்டும் காமடி
கொடுமையாக உள்ளது.



அப்படி ஒரு காமடி நேற்றும் நடந்து உள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:

நெல்லை
மாவட்டம் தென்காசி அருகே உள்ள பண்பொழி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்
முகம்மது அன்சாரி. வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்
அப்துல் முஜீப். 14 வயதான இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில்
ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை வீட்டின் அருகே நின்று
விளையாடி கொண்டிருக்கும் போது பக்கத்தில் உள்ள குப்பைமேட்டில் டெட்டனேட்டர்
குச்சி ஒன்று கிடந்துள்ளது. டெட்டனேட்டர் குறித்த எந்த அறிவும் இல்லாத
முஜீப் அதை வீட்டிற்கு எடுத்து வந்து அதில் உள்ள ஒயர் கனக்சனில் பேட்டரியை
வைத்துள்ளார். உடனே அந்த டெட்டனேட்டர் குச்சி வெடித்துள்ளது. இதில் முஜீப்
காயமடைந்து பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு
அவருக்குத் தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை சரக டிஐஜி வரதராஜு, ரூரல்
எஸ்பி விஜயேந்திர பிதாரி உட்பட காவல்துறையினர் விசாரணை நடத்திக்
கொண்டிருந்தனர். அப்போது அங்கு லோக்கல் முதல் நேஷனல் வரை உள்ள அனைத்து
பத்திரிக்கையாளர்களும் குவிய ஆரம்பித்தனர். அத்தனை
பத்திரிக்கையாளர்களுக்கும் பேட்டி அளித்த டிஐஜி வரதராஜூ கூறும்போது,

"முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள்
கிடைத்துள்ளன .இன்னும் சிறிது நேரத்தில் இங்கு எப்படி டெட்டனேட்டர் வந்தது
தகவல் தெரிந்து விடும். இச்சம்பவத்திற்கும் மதுரையில் அத்வானி ரத
யாத்திரையில் கைப்பற்றப்பட்ட பைப் வெடி குண்டு சம்பவத்திற்கும் எந்தத்
தொடர்பும் கிடையாது" என்று உறுதியாக கூறினார்.

ஆனால் பரப்பரப்பு
செய்திகளைக் கொடுத்து மட்டுமே பழக்கப்பட்ட நமது பத்திரிக்கையாளர்கள்
இச்சம்பவத்தையும் மதுரை சம்பவத்தையும் தொடர்பு படுத்தி கதை எழுத
ஆரம்பித்தனர். ஆனால் அங்கு கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர் குச்சி பன்றியைக்
கொல்ல ஒருவர் பயன்படுத்தியது என்பது தற்போதைய விசாரணையில் தெரிய வந்து
உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

அவசரப்பட்டு தவறான செய்திகளைப்
பத்திரிக்கை துறை வெளியிடுவதால் மவுனமாக ஒரு சமுதாயம் அழிக்கப்பட்டு
வருகிறது என்பதை இன்னும் பத்திரிக்கை துறையினர் புரிந்துக் கொள்ளவில்லை
என்றே தெரிகிறது. ஊடகத்துறையின் இத்தகு பொறுப்பற்ற செயல்பாட்டுக்கு
எப்போதுதான் முடிவுகட்டப்படுமோ!




இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11140
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum