தடை மீறி ஊர்வலம்: இந்து மகா சபை தொண்டர்கள் கைது!
Page 1 of 1

மேலூரில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற இந்து மகாசபா தொண்டர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
"இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும்
கல்வி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மத்திய அரசு மத வன்முறை சட்ட மசோதாவைக்
கண்டித்து தமிழக அரசு அதை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் இந்தி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஏழைக் குழந்தைகளும் இந்தியைக் கற்கும்
வகையில் அரசு பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் இந்தியைக் கட்டாயப்
பாடமாக்க வேண்டும். இந்துமத சொத்துக்களை இந்துக்கள் மட்டும் அனுபவிக்க
அரசாணை நிறைவேற்ற வேண்டும்" என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
அகில இந்திய பாரத இந்து மகாசபையினர் கன்னியாகுமரியில் இருந்து ஊர்வலமாக
புறப்பட்டனர்.
இதன் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன்,
செயலாளர் பொன்.வெற்றிவேல், துணைத்தலைவர் முஸ்தபா மற்றும் நிர்வாகிகள்
இதில் கலந்து கொண்டனர். புறப்பட்ட சிறு நேரத்திலேயே அவர்கள் கைது
செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் வாகன பேரணியாக கிளம்பினர்.
நேற்று காலை மேலூர் பேருந்து நிலையம் அருகே வந்த அவர்களுக்கு இந்து
மகாசபையின் தென் மண்டல அமைப்பாளரும் மாவட்ட தலைவருமான பெரி. செல்லத்துரை,
மாவட்ட செயலாளர் ரமேஷ்பாண்டியன், துணைச் செயலாளர் வெள்ளைத்தம்பி உள்பட
ஏராளமானோர் வரவேற்றனர். பின்னர் மேலூரில் உள்ள கக்கன் சிலைக்கு மாலை
அணிவிக்க நடந்து சென்றனர்.
அப்போது அவர்களைக் காவல்துறை துணை
சூப்பிரண்டு மணிரத்தினம், ஆய்வாளர் மாடசாமி தலைமையில் காவல்துறையினர்
தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்து மகா சபாவைச் சேர்ந்த நிர்வாகிகள்
உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டு அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்க
வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதுபற்றி மாநில தலைவர் பாலசுப்பிரமணியன்
கூறுகையில், "கூடங்குளம் அணு மின்நிலையம் தேவை. இதுதேவை இல்லை என்று
போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தேச விரோத சட்டத்தில் நடவடிக்கை எடுக்க
வேண்டும். நியாயமான கோரிக்கைகளுக்காக பேரணியாக புறப்பட்ட எங்களைக் கைது
செய்வது கண்டிக்கத்தக்கது." என்றார்.
இந்நேரம்

Similar topics
» தடை மீறி கரசேவைக்குச் சென்ற 300 பேர் கைது!
» முத்துப்பேட்டையில் விநாயக ஊர்வலம்! பாதுகாப்பு பணியில் 2000 போலிசார்
» தடையை மீறி ரத யாத்திரை நடத்துவோம் - முஸ்லிம் அமைப்பு!
» விக்கிலீக்ஸ்: லஷ்கரைவிட இந்து தீவிரவாதம் அபாயகரமானது!
» மெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum