தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பழங்குடி பெண்கள் பாலியல் பலாத்காரம்:5 போலீஸார் இடைநீக்கம்

Go down

பழங்குடி பெண்கள் பாலியல் பலாத்காரம்:5 போலீஸார் இடைநீக்கம்  Empty பழங்குடி பெண்கள் பாலியல் பலாத்காரம்:5 போலீஸார் இடைநீக்கம்

Post by முஸ்லிம் Tue Nov 29, 2011 7:20 pm

சென்னை:திருக்கோவிலூர் அருகே ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த 4 பழங்குடிப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக
கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸார்
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, இருளர் சமுதாயத்தைச்
சேர்ந்த பழங்குடிப் பெண்களான வைகேஸ்வரி, ராதிகா, கார்த்திகா, லட்சுமி ஆகிய 4
பேர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு
ஒன்று அளித்தனர்.

அந்த மனுவில், கடந்த 22-ம் தேதி
திருக்கோவிலூர் போலீஸôர் விசாரணைக்காக எங்கள் குடும்பத்தினரை காவல்
நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கினர். பின்னர் எங்களை (ராதிகா,
கார்த்திகா, லட்சுமி, வைகேஸ்வரி) போலீஸ் வேனில் கொண்டு சென்று
மானபங்கப்படுத்தினர். அதன்பிறகு, வீட்டருகே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, அவர்கள் எங்களை
மிரட்டுகின்றனர். எனவே, எந்தத் தவறும் செய்யாத எங்கள் குடும்பத்தினரை
மீட்டுத் தர வேண்டும். மேலும் எங்களை பலாத்காரம் செய்த போலீஸôர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்தப் புகார் தொடர்பாக, விழுப்புரம்
மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன், திருக்கோவிலூர் குற்றவியல் நடுவர் மன்ற
நீதிபதி (பொறுப்பு) முரளிதர கண்ணன் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை
நடத்தினர்.

இந்த நிலையில் புகாருக்குள்ளான
திருக்கோவிலூர் காவல்நிலைய ஆய்வாளர் சீனிவாசன், உதவி ஆய்வாளர் ராமநாதன்,
ஏட்டு தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவத்சலம் ஆகியோரை இடைநீக்கம்
செய்து வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

சட்டத்தை மீறும் வகையில் மாலை 6 மணிக்கு
மேல் பெண்கள், குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதற்காக அவர்கள்
இடைநீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


பழங்குடி பெண்கள் பாலியல் பலாத்காரம்:5 போலீஸார் இடைநீக்கம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்
» பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண்களை பாதுகாக்க சவுதியில் புதிய சட்டம்
» அமெரிக்க ராணுவ வீரர்களிடையே பாலியல் அத்துமீறல் அதிகரிப்பு
» சிறுவர் பாலியல் கொடுமை: நெதர்லாந்து ஆர்ச் பிஷப் வருத்தம்
» 10 வருடகாலம் இஸ்ரேலியச் சிறையில் வாடும் பலஸ்தீன் பெண்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum