துருக்கியில் நேட்டோவின் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு இஸ்ரேலுக்காக – துருக்கி அரசியல் கட்சி தலைவர் குற்றச்சாட்டு
Page 1 of 1

அங்காரா:நேட்டோவின் ஏவுகணை பாதுகாப்பு
கட்டமைப்பை துருக்கியில் நிறுவுவதன் நோக்கம் இஸ்ரேலின் விருப்பங்களை
பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியாகும் என துருக்கியின் ஃபெலிசிட்டி
கட்சியின் தலைவர் முஸ்தஃபா கமாலக் குற்றம் சாட்டியுள்ளார்.
துருக்கி மற்றும் ஈரான் நாடுகள் இடையே
பிரச்சனையை உருவாக்குவது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேவையாகும்.
துருக்கி மீது ஏவுகணை தாக்குதல் அபாயம் இல்லை என்பதால் இத்தகையதொரு
பாதுகாப்பு கட்டமைப்பு தேவை இல்லை என கமாலக் கூறுகிறார்.
நேட்டோ கூட்டமைப்பிற்காக இம்மாதம் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை நிறுவ இருக்கும் வேளையில் கமாலக் இக்குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
துருக்கி மற்றும் ஈரான் இடையே மோதலை
உருவாக்கி அதில் ஆதாயம் பெறுவதுதான் மேற்கத்தியர்களின் லட்சியம் என கமாலக்
கூறுகிறார். இரு நாடுகள் இடையே மோதல் உருவானால் அமெரிக்காவும், அதன்
கூட்டணி நாடுகளும் அதில் ஆதாயம் பெறும். சிரியாவில் மேற்கத்திய நாடுகளை
தலையிட அனுமதிக்கக் கூடாது என தெரிவித்த கமாலக், இஸ்லாமிய நாடுகள்
பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என கூறினார்.
அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டணி நாடுகளை
பாதுகாப்பதற்கு இந்த ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை நேட்டோ நிறுவவில்லை
என்றும், இது தங்களை குறிவைத்துதான் அமைக்கப்படுவதாகவும் நேற்று முன்தினம்
ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது. வெளிநாட்டு தாக்குதல்களிலிருந்து
பாதுகாப்பதற்காகவே இந்த ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை நிறுவுவதாக
எனக்கூறும் அமெரிக்காவின் கூற்றை நிராகரித்துள்ளது ரஷ்யா.

Similar topics
» அரசியல் தரகு வியாபாரி சுப்ரமணிய சுவாமியை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மத்திய மாநில அரசுகளுக்கு SDPI மாநிலத் தலைவர் கோரிக்கை
» லிபியாவில் நேட்டோவின் கோரத்தாண்டவம்
» பலஸ்தீன் பிரதமருக்கு துருக்கியில் கோலாகலமான வரவேற்பு
» மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்குத் தீ!
» துனிஷியா: வெற்றிப்பாதையில் இஸ்லாமிய கட்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum