நரோடா பாட்டியா:உயர் போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
நரோடா பாட்டியா:உயர் போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்
படுகொலையின் போது நடந்த நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையில் தொடர்புடைய
நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் சிறப்பு
புலனாய்வு குழுவிற்கு(எஸ்.ஐ.டி) உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் சமர்ப்பித்த தொலைபேசி உரையாடல்களின் ஆவணங்களின் அடிப்படையில் நீதியின் விசாலமான விருப்பத்தை
முன்னிறுத்தி அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் விளக்கமளித்தது.
கூட்டுப்படுகொலை நடக்கும் வேளையில்
நரோடாவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கெ.கெ.மைசூர்வாலா, சோன் 4 இன் டி.சி.பி
பி.ஆர்.கோண்டியா, முன்னாள் டி.ஜி.பி(செக்டர் 2) எம்.கே.டாண்டன், முன்னாள்
போலீஸ் கமிஷனர் பி.சி.பாண்டே ஆகியோர் மீது விசாரணை நடத்த நீதிமன்றம்
உத்தரவிட்டது. இவர்களை இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும் என கோரி
பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகினர்.
கலவரத்தின் சதித்திட்டத்தில் இவர்களுக்கு
பங்கிருப்பதாகவும், ஆகையால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை
என பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டினர். கடந்த வாரம் இம்மனு
அளிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தொடர் விசாரணை
நடப்பதாகவும், இறுதி அறிக்கையை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படும் என எஸ்.ஐ.டி உறுப்பினர் ஹிமான்சு சுக்லா நீதிமன்றத்தில்
தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து எஸ்.ஐ.டி
தொடர் விசாரணை நடத்தும் என சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் அகில் தேசாய்
அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களை பரிசோதித்து தேவைப்பட்டால் புதிய விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர் விசாரணைக்கு எஸ்.ஐ.டி உறுதி
அளித்துள்ள சூழலில் இதர கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என
பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞரான ஒய்.பி.ஷேக் கூறுகிறார். ஒரு
அமைச்சரும், எம்.எல்.ஏயும் உள்பட பா.ஜ.க தலைவர்களுடன் போலீஸ் அதிகாரிகள்
சதித்திட்டம் தீட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மனுவில் குற்றம்
சாட்டுகின்றனர்.
2002-ஆம் ஆண்டு முதல் இவ்வழக்கு
உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் குஜராத் போலீஸில் மூத்த அதிகாரிகள் போலீஸ்
கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஆவணங்களை அழித்துவிட்டனர் என அவர்கள் மனுவில்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
Similar topics
» நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: எஸ்.ஐ.டிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
» சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ருத்ராபூர் கலவரம்:அக்கறையின்றி செயல்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பதவி நீக்கம்
» அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு எதிரான கண்டனம் சரியே: உச்ச நீதிமன்றம்!
» சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ருத்ராபூர் கலவரம்:அக்கறையின்றி செயல்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பதவி நீக்கம்
» அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு எதிரான கண்டனம் சரியே: உச்ச நீதிமன்றம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum