பாராளுமன்றத்தை அவமதிக்கும் ஹஸாரே: காங்கிரஸ் குற்றச்சாட்டு
Page 1 of 1

டெல்லி:ஹஸாரே பாராளுமன்றத்தை அவமதிக்கிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுத்தொடர்பாக அக்கட்சியின் செய்தித்
தொடர்பாளர் ரஷீத் ஆல்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்தவொரு பிரச்னை
குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவும் அரசியலமைப்புச் சட்டரீதியாக ஹஸாரேவுக்கு
உரிமை உள்ளது. ஆனால், அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், பொதுச்
செயலர் ராகுல் காந்தியையும் தேவையில்லாமல் குறிவைத்து தாக்குகிறார்.
இதிலிருந்தே அவர் அரசியலில் ஈடுபடுவது தெளிவாகிறது. ஏற்கெனவே உறுதி
அளித்தபடி லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ளது.
எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற
நிலைக்குழுவும் லோக்பால் மசோதாவை ஆய்வு செய்துள்ளது.
டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கும்
இடத்தில் இருந்து சட்டங்களை இயற்ற முடியாது. நாடாளுமன்றத்தை ஹஸாரே
அவமதிக்கிறார் என்று கூறுவதில் எந்தத் தயக்கமும் எனக்கு இல்லை.
அவரது கருத்துகளுக்கு மதிப்பளித்து
லோக்பால் மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது பாராளுமன்றம் அது குறித்து
விவாதித்து முடிவெடுக்கும். பாராளுமன்றம் அல்லது அரசியலமைப்புச்
சட்டத்தைவிட எவரும் பெரியவரல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின்படியே இந்த நாடு
வழிநடத்தப்படுகிறது. கோஷங்களால் அல்ல. எல்லா நிலைகளிலும் ஊழலை ஒழிக்க
காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும். ஒரு சில சட்டங்களால் மட்டும் ஊழலை ஒழிக்க
முடியாது. சமூகத்தின் மனநிலையே மாற்றப்பட வேண்டும். நாம் எல்லோரும்
இணைந்துதான் அதைச் செய்ய வேண்டும் என்றார் ரஷீத் ஆல்வி.
அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பதன் மூலம்
தேவையற்ற நெருக்கடியை பாராளுமன்றத்துக்கும், ஜனநாயகத்துக்கும் ஹஸாரே
ஏற்படுத்துகிறார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திரிவேதி
சனிக்கிழமை கருத்து தெரிவித்திருந்தார்.

Similar topics
» ஹஸாரே போராட்டம் – வெளிநாட்டு சதி! – காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு
» ஆர்.எஸ்.எஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டுச் சதி செய்கின்றன - அன்னா ஹஸாரே!
» ஹஸாரே குழுவினருக்கு கிடைத்த 80 லட்சம் மோசடி – கேஜ்ரிவால் மீது அக்னிவேஷ் குற்றச்சாட்டு
» மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் – காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடம் – அன்னாவினால் எந்த பாதிப்பும் இல்லை
» இந்தியாவை அவமதிக்கும் நிகழ்ச்சி: பி.பி.சி மீது இந்திய ஹைக்கமிஷன் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum