பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஷம்ஸி விமானநிலையம்
Page 1 of 1
பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஷம்ஸி விமானநிலையம்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான்
அரசின் இறுதி எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிய
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷம்ஸி விமானநிலையத்தின் கட்டுப்பாடு
பாகிஸ்தான் ராணுவம் எடுத்துக்கொண்டது.
கடந்த மாதம்26-ஆம் தேதி நேட்டோ ராணுவம்
நடத்திய அக்கிரம தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் படுகொலைச்
செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த பாகிஸ்தான் 15 தினங்களுக்குள்
விமான நிலையத்திலிருந்து நேட்டோ படை வெளியேற உத்தரவிட்டது.
ஷம்ஸி விமானநிலையத்திலிருந்து கடைசி
அமெரிக்க விமானமும் பறந்து சென்றதாக செய்தி ஒலிபரப்பு அமைச்சகம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்தில்
இருந்துதான் பாகிஸ்தானின் எல்லை மாகாணங்களிலும், ஆப்கானிலும் அமெரிக்கா
ஆளில்லா விமானம்(ட்ரோன்)மூலம் தாக்குதலை நடத்திவந்தது. அமெரிக்க ஆளில்லா
விமானங்கள் பாக்.எல்லையை கடந்துவந்தால் சுட்டுவீழ்த்துவோம் என பாக்.ராணுவ
அதிகாரி கூறியுள்ளார். இவ்விவகாரம் தொடர்புடைய பாராளுமன்ற குழு
ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என அல்ஜஸீரா கூறுகிறது.
நவம்பர்26-ஆம் தேதி தாக்குதலுக்கு பிறகு
ஆப்கானிஸ்தானில் நேட்டோ ராணுவத்திற்கு ஆயுதங்கள், உணவு, எரிபொருளை கொண்டு
செல்லும் வழியை பாகிஸ்தான் மூடியுள்ளது.
Similar topics
» இந்தியக் கட்டுப்பாட்டில் கச்சத்தீவு: ஜவாஹிருல்லாஹ்!
» இந்திய ராணுவத்தின் வெறித்தனம்: கஷ்மீர் முஸ்லிம் இளம்பெண் வன்புணர்வு - கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி
» பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உஸாமாவிற்காக பிரார்த்தனை
» மன்மோகன்சிங்கின் அழைப்பு: பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்
» அமெரிக்கா உறவு: பாகிஸ்தான் மறு பரிசீலனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum