முஸ்லிம் ஓட்டுக்களை குறிவைத்து தாருல் உலூம் நத்வதுல் உலமாக்களை சந்தித்த ராகுல் காந்தி
Page 1 of 1

லக்னோ:2012-ல் நடைபெறவிருக்கும்
உத்தரபிரதேச மாநிலத்தின் மாநிலங்களவை தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை பெறும்
இறுதிகட்ட முயற்சியாக ராகுல் காந்தி லக்னோவிலுள்ள தாருல் உலூம் நத்வதுல்
உலமாக்களை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார்.
ராகுல் காந்தி இமாம் ரபி ஹசனி நட்வியுடன்
ஒரு மணிநேரம் கலந்துரையாடினார். நட்வி அனைத்து இந்திய முஸ்லிம் சட்ட
வாரியத்தின் தலைவரும் ஆவார். அரசியல் தொடர்பாக உலமா குழு எந்த கருத்தையும்
வெளியிடாது என்றபோதும் ராகுலின் இந்த வருகை காங்கிரசுடன் முஸ்லிம்கள்
இருக்கிறார் என்கிற அடையாளத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. மேலும் இது
வருகின்ற 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மேற்கு உத்தர பிரதேசத்தின் 19
சட்டசபை முஸ்லிம் தொகுதிகளுக்கு ராகுல் இரண்டாம் முறையாக சுற்றுப்பயணம்
மேற்கொள்ள இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து உத்தரபிரதேச காங்கிரஸ்
கமிட்டி தலைவர் ரீட்டா பஹுகுணா லக்னோவில் முஸ்லிம் அறிஞர்களை ராகுல் காந்தி
சந்திப்பது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார். மேலும் ரீட்டா
கூறியதாவது “நட்வி சோனியா காந்தியின் ரேபரலி தொகுதியை சேர்ந்தவர் என்பதால்
அவர்கள் ஏற்கனவே சந்தித்துள்ளனர் என்றும் ஆனால் ராகுல் தற்போதுதான் முதன்
முறையாக உலமாக்களை சந்தித்துள்ளார் என்று கூறினார். மேலும் இந்த சந்திப்பு
இறுதிநேரத்தில் தான் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் காங்கிரஸ் அரசு
முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக என்னென்ன திட்டங்களை மேற்கொண்டு வருகிறது
என்று விளக்கியிருப்பார் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர்
கூறியதாவது “முன்னதாக தாருல் உலூம் தேவ்பந்த் காங்கிரசின் இட ஒதுக்கீடு
வாக்குறுதி வெறும் தேர்தல் ஸ்டன்ட் என்று விமர்சித்திருந்தது. எனவேதான்
காங்கிரஸ் தாருல் உலூம் நத்வதுல் உலமாக்களை சந்திக்க முனைந்ததாகவும்
தெரிவித்துள்ளார். மேலும் முஸ்லிம்கள் காங்கிரசின் முக்கிய
எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி கட்சியுடனோ அல்லது பஹுஜன் சமாஜ் கட்சியுடனோதான்
இருக்கின்றனர் என்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் ராகுலிடம்
தெரிவித்ததாகவும் கூறினர் என்று தெரிவித்துள்ளார்.
எங்களது வேட்பாளர்கள் முஸ்லிம்களின்
வாக்குகளை பெறுவதில் பெறுவதில் பெரிய சவால்களை சந்திக்கின்றனர் என்றும்
கூறியுள்ளார். இதை பற்றி ராகுலிடம் தெரிவித்ததாகவும் ஆனால் ராகுல் காந்தியோ
பிரச்சனைகளை தலைவர்களிடம் விட்டுவிட்டு பிரசாரத்தை கவனிக்குமாறு
வேட்பாளர்களை அறிவுறுத்தினார் என்றும் கூறியுள்ளார். மேலும் மத்திய அரசு
சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை விரைவில் வெளியிடும்
என்று ராகுல் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னதாக தாருல் உலூம்
தேவ்பந்தின் மக்கள் தொடர்பாளர் அதில் சித்திக்கி காங்கிரஸ் சிறுபான்மையினரை
ஏமாற்றி வருகிறது என்று கூறியிருந்தார். மேலும் சிறுபான்மையினருக்கான இட
ஒதுக்கீடு வெறும் தேர்தல் வாக்குறுதிதான் என்றும் கூறியிருந்தார். மேலும்
இத்தனை வருடங்களாக மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் அமைதியாக
இருந்துவிட்டு தற்போது மட்டும் தனது சமுதாயத்தின் மீது அன்பு இருப்பதுபோல்
காட்டுகிறார் என்றும் கூறியிருந்தார்.
மேலும் நட்வியோ அல்லது நத்வதுல் உலமாவின்
எந்த உறுப்பினரும் ராகுலின் சந்திப்பு பற்றி எதுவும் தெரிவிக்காத நிலையில்
நத்வதுல் உலமாவின் ஆசிரியர் ஒருவர் தாங்கள் எந்த கட்சியுடனும் இல்லை
என்றும் மற்றும் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று
வாக்காளர்களுக்கு சொல்வது கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி
கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும் மற்றும் அக்கட்சியின் பொதுச்
செயலாளர் நஜிமுத்தீன் அவர்களும் சித்திக்கியை சந்தித்துள்ளனர்.

Similar topics
» அமெரிக்கா தாருல் உலூம் மதரஸாவிடம் நட்பு பாராட்ட விரும்பியது – விக்கிலீக்ஸ்
» அனைத்து வகை தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஆபத்தானதே-ராகுல் காந்தி விளக்கம்
» ‘கஷ்மீர் மக்களின் துன்பம் என்னுடைய துன்பம்’- ராகுல் காந்தி
» பத்தாண்டுகளுக்கு பிறகு காப்பாற்றியவரை சந்தித்த குத்புதீன்!
» பரத்பூருக்கு ராகுல் திடீர் வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum