எளிதாக வழியறியும் தேனீக்கள்!
Page 1 of 1
எளிதாக வழியறியும் தேனீக்கள்!
மனிதன் மற்ற எல்லாவற்றையும் விட தன்னை மிகப் பெரிதாக நினைக்கிறான். ஆனால் தன்னை விட மிகத் தாழ்ந்த உயிரினமாக கருதப்படும் பல உயிரினங்களுக்கு இறைவன் கொடுத்திருக்கும் அபரிதமான ஆற்றல்களை நாம் உணர்ந்தால்... சுப்ஹானல்லாஹ்! அந்த இறைவனின் வல்லமையை சொல்லத்தான் வார்த்தைகளுண்டோ..?
உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம், பூச்சி இனமாம். அவற்றில் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மைப் தரக்கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த தேனீக்களையும் அத பலன்களையும் பற்றி மிகப் பெரிய கட்டுரையே எழுதலாம்! மேலும் திருக்குர்ஆனில் "தேனீ" என்றொரு அத்தியாயத்தையே இறைவன் இறக்கி வைத்திருப்பது நாம் அறிந்ததே. அந்த அத்தியாயத்தில், தேனீக்கள் தமது பாதையை எளிதாகக் கண்டு பிடித்து விடுகின்றன என்று திருக்குர்ஆன் கூறுவதை, இன்றைய அறிவியல் அப்படியே மெய்ப்பித்துள்ளது!
சில வகைத் தேனீக்கள் தங்கள் உணவிற்காக செல்லும் தொலைவை நாம் அறிந்தால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகதான் இருக்கும். ஏனென்றால் தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கி.மீ. வரை பயணித்து இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து குளுக்கோஸை எடுத்துக் கொண்டு, பிறகு சரியாக தங்கள் கூடுகளுக்கு திரும்புகின்றன என்று சொன்னால்......
இறைவா, உன்னுடைய அற்புதம்தான் என்ன! இவ்வளவு தொலைவான தூரங்களிலிருந்து மிகச் சரியாக கூடு திரும்பும் இந்த ஆற்றல் எவ்வாறு இவற்றிற்கு சாத்தியம் ஆகிறது? இதுகுறித்து குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!" என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
(திருக்குர்ஆன் 16:68,69)
தேனீக்கள் சரியான பாதையில் திரும்பி, தங்கள் கூடுகளுக்கு வர எல்லாம் வல்ல இறைவன் பொறுப்பேற்றுக் கொண்டான் என்பதை மேற்கண்ட இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது. இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நிறைய அத்தாட்சிகளை ஆக்கியிருக்கின்றான் வல்ல இறைவன்!
நேற்று (2 நவம்பர் 2010) தினமலர் சென்னை பதிப்பில் வந்த செய்தியில் இது குறித்து லண்டனில் வெளியான ஆய்வறிக்கையையும், சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் கூறிய திருக்குர்ஆனின் இறைவசனத்திற்கு அது ஒத்துப் போவதையும் பாருங்கள்!
லண்டன் : சிக்கலான கணிதத்திற்கு, கம்ப்யூட்டரை விட தேனீக்கள் தீர்வளித்துள்ளதாக, பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.பிரிட்டனை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் தேனீக்கள் போக்குவரத்து குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அதில், விற்பனை பிரதிநிதியின் சிக்கலான போக்குவரத்து வழிக்கு, கம்ப்யூட்டரை விட தேனீக்கள் எளிதாக தீர்வளித்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.பல்வேறு இடங்களுக்கு விற்பனை பிரதிநிதிகள் செல்வதற்கான வழிகள் குறித்து, கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதன் மூலம், அதிக இடங்களுக்கு, குறுகிய நேரத்தில், எளிதாக சென்று சேர்வதற்கான குறுக்கு வழிகளை கம்ப்யூட்டர் உருவாக்கி கொடுத்தது. ஆனால், பிரிட்டன் விஞ்ஞானிகள் நடத்திய தேனீக்கள் குறித்த ஆய்வில், கம்ப்யூட்டர் உருவாக்கிய வழிகளை விட, அதிக வழிகளை தேனீக்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.தேனீக்கள் நாள்தோறும், தேனை சேகரிப்பதற்காக, பூக்களைத் தேடி அதிக தூரம் பயணம் செய்கிறது. பறப்பதற்காக, அதிக சக்தியை செலவழிக்கும் தேனீ, குறுகிய நேரத்தில், அதிக பூக்களுக்கு செல்கிறது. இதற்காக, குறுக்கு வழிகளை அதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்தது.இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது: தேனைத் தேடி, தேனீக்கள் அதிக பயணம் மேற்கொள்கின்றன. ஆனால், அவை அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துகின்றன. இதற்காக, கம்ப்யூட்டரின் உதவியுடன், செயற்கை பூக்களை கொண்டு, தேனீக்களின் பயண வழியை கண்காணித்தோம். அதில், தேனீக்கள் மிகக்குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்கு செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துவதை கண்டறிந்தோம்.அந்த வழிகள், விற்பனை பிரதிநிதி செல்வதற்காக, கம்ப்யூட்டர் உருவாக்கி கொடுத்த வழிகளை விட, அதிக வழிகளாகும். இதன் மூலம், கம்ப்யூட்டரின் அறிவை, மிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நன்றி : http://payanikkumpaathai.blogspot.com/
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum