தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’ நாளிதழின் என்.ராம், பிரவீன் சுவாமி மீது வழக்கு

Go down

‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’ நாளிதழின் என்.ராம், பிரவீன் சுவாமி மீது வழக்கு  Empty ‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’ நாளிதழின் என்.ராம், பிரவீன் சுவாமி மீது வழக்கு

Post by முஸ்லிம் Thu Dec 22, 2011 5:34 pm

‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’ நாளிதழின் என்.ராம், பிரவீன் சுவாமி மீது வழக்கு  News-270x170



புதுடெல்லி:கர்நாடகாவை
சேர்ந்த முஹம்மத் ஜரார் சிதிபாபா என்பவர் ‘தி ஹிந்து’ தினசரி நாளிதழின்
தலைமை நிரூபர் என்.ராம் மற்றும் செய்தியாளர் பிரவீன் சுவாமி மீது அவதூறு
வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வெளிவந்த
ஹிந்து செய்திதாளின் முதல்பக்கத்தில் ‘தலைமறைவான இந்திய முஜாஹிதீன் தலைவர்
அலியாஸ் யாசின் பட்கல் 2005-ஆம் ஆண்டின் நகர்ப்புறங்களில் நடந்த
குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதாகவும் காவல்துறையால் தேடப்பட்டு வந்த இவர்
2010-ல் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களில் மூலம் தங்கள் ஜிஹாத்
இயக்கத்தை மீண்டும் புதுப்பித்ததாகவும் இவரது இயற்பெயர் முஹம்மத் ஜரார்
சிதிபாபா’ என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த அவதூறான செய்தி மூலம் தானும் தனது
குடும்பத்தினரும் பெரும் மனஉளைச்சலை அடைந்ததாகவும் இதற்கு நஷ்ட ஈடாக ஐந்து
கோடி வழங்கி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜரார் சிதிபாபா
தனது வழக்கில் குறிபிட்டுள்ளார்.

கர்நாடகாவின் பட்கலை சொந்த ஊராக கொண்ட
முஹம்மத் ஜரார் சிதிபாபா தான் தலைமறைவாகவும் இல்லை, தேடப்பட்ட
பயங்கராவாதியும் இல்லை, கடந்த முப்பது ஆண்டுகளாக துபாயில் தொழில் செய்து
வந்ததாகவும், தன்னை காணாமற்போன பயங்கரவாதியாக அறிவித்ததற்காக தனி
குற்றவியல் அவதூறு வழக்கு தொடங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’ நாளிதழின் என்.ராம், பிரவீன் சுவாமி மீது வழக்கு  Law-notice1‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’ நாளிதழின் என்.ராம், பிரவீன் சுவாமி மீது வழக்கு  Law-notice2

‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’ நாளிதழின் என்.ராம், பிரவீன் சுவாமி மீது வழக்கு  Law-notice-3

‘இந்தியன் முஹாஜிதீன் தலைவர் ஜரார்
சிதிபாபா உதவியுடன் பாகிஸ்தானை சேர்ந்த முஹம்மத் ஆதில் பீகாரின்
மதுபானியில் இருந்து அழைத்து வரப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு
வரபட்டதாகவும், கடந்த சில வருடங்களாக ஜெய்ஷ்—இ-முஹம்மத் மற்றும்
கட்டமைக்கப்பட்ட தீவிரவாத குழுக்களுடன் ஆதிலுக்கு தொடர்பு இருப்பதாகவும்,
அவரை இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டபின் கடந்த 2010 முதல் பீகார்
மதுபானியில் வசித்து வருவதை காவல் துறை கண்காணித்து வருவதாகவும்’ பிரவீன்
சுவாமி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரவீன் சுவாமி தனது டிசம்பர்
1-ஆம் தேதி கட்டுரையில் ‘ஜிஹாதிகளின் காரச்சி திட்டத்தை அம்பலபடுத்திய
டெல்லி கைது’ என்ற தலைப்பில் காவல்துறையின் குண்டுகளை தயாரிக்கும்
தொழிற்சாலை சோதனையின் போது இந்திய முஹாஜீதின் குழுவின் முக்கிய தலைவர்
ஜரார் சிதிபாபா கர்நாடகாவின் பாத்ரா காட்டு பாதையில் ஓடியதாகவும், பின்னர்
பங்களாதேஷ் எல்லை வழியாக கராச்சியின் லஷ்கர்-இ-தொய்பாவால் நடத்தப்படும்
புகலிடத்தை தேடி தப்பி ஓடினார் என்று சினிமாவை மிஞ்சும் அளவிற்கு கற்பனை
கதையை கூறியதாக குறுப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ‘தி ஹிந்து’ பத்திரிக்கையை
சேர்ந்த என்.ராம் மற்றும் பிரவீன் சுவாமி ஆகியோர் தங்கள் மீது வழக்கு பதிவு
செய்தது குறித்து சட்ட ரீதியாக தங்களுக்கு அறிவிப்பு வரவில்லை என்று
கூறியுள்ளனர். ஆனால் இந்த சட்ட அறிவிப்புக்கு ஹிந்து பத்திரிக்கையின்
சென்னை பதிப்பின் இணை ஆசிரியர் தியாகராஜன் வழக்கறிஞர் குழுவின் துணையுடன்
பதில் அளிக்கப்போவாதாக தெஹல்கா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சமூக ஆர்வலர்கள் ஜரார்
சிதிபாபாவிற்கு ஆதரவளித்து எந்த வித ஆதாரமும் இல்லாமல் அப்பாவி முஸ்லிம்
இளைஞர்களை பயங்கரவாதி என்ற முத்திரைக் குத்தி அவர்களை சமூகத்தின் உயர்வு
நிலைக்குவருவதில் இருந்து தடுப்பவர்கள் மீது கண்டிப்பாக வழக்கை தொடர
வேண்டும் என்றும் குரல் எழுப்பி உள்ளனர்.

பாட்னாவின் சிறந்த சமூக ஆர்வலர் நய்யார்
ஃபாத்மி மற்றும் பாதுகாப்பு மனித உரிமை கூட்டமைப்பின் செயலாளர்
திரு.அக்லக் அஹ்மத் தெரிவித்தாவது; ‘பயங்கரவாதி என்று பெயரிடப்பட்டு, கைது
செய்து கம்பிகளுக்கு பின்னால் இட்டு பின்னர் நிரபராதி என்று விடுதலையாகும்
குற்றமற்ற இளைஞர்கள் கண்டிப்பாக வழக்கு தொடர வேண்டும், மேலும் எந்த வித
ஆதாரமும் மற்றும் விசாரணையும் இல்லாமல் முதல்முறை கைது செய்யப்படும்
பொழுதே அவர்கள் பயங்கரவாதி என்று முத்திரை இடப்படுபடுகிறார்கள், இதனால்
அவர்களது வாழ்க்கை, எதிர்காலம் அனைத்தையும் வீணாகி பின்னால் நிரபராதி என்று
விடுதலை செய்யும் பொறுப்பற்ற காவல்துறை, அராசாங்கம் மற்றும் வதந்தியை
பரப்பும் ஊடகம் மீது வழக்கு தொடர்வது அந்த இளைஞர்கள் செய்யவேண்டிய கட்டாய
கடமை’ என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஏற்கனவே இது போன்ற தேவையற்ற மன
உளைச்சலால் தனது வாழ்க்கையை இழந்த அந்த குடும்பத்தவர்களிடம் இருந்து இது
போன்ற ஒருசெயலை எதிர்பார்க்க முடியாது என்பதால், சமூக ஆர்வலர்கள் மற்றும்
சமூக உரிமை குழுக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்
என்று டெல்லியை சேர்ந்த பாதுகாப்பு மனித உரிமை கூட்டமைப்பின் செயலாளர்
திரு.அக்லக் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யும் பொழுது பயங்கரவாதி,
தீவிரவாதி என்று பெயரை கொடுக்கும் அரசாங்கமோ, ஊடகமோ, விடுதலையாகும் பொழுது
எந்த வித நற்பெயரையோ அல்லது அறிவிப்பையோ தெரிவிப்பதில்லை என்றும்
தெரிவித்துள்ளார்.


‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’ நாளிதழின் என்.ராம், பிரவீன் சுவாமி மீது வழக்கு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11139
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» புலனாய்வு ஏஜன்சிகள் மீதான பயம் காரணமாக பிரவீன் சுவாமியின் மீது வழக்கு தொடர தயங்கும் முஸ்லிம் இளைஞர்கள்
» இஷ்ரத் மீது அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – கொல்லப்பட்ட ஜாவேதின் தந்தை கோரிக்கை
» 2008 டெல்லி குண்டுவெடிப்பில் 13 பேர்கள் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது
» ஃபேஷன் விஷயங்கள் குறித்து முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்ட இந்திய ஊடகங்கள் மீது பாக். அமைச்சர் ஹினா கோபம்!
» இஸ்லாமோஃபோபியா:விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் பெண் – விமான நிறுவனம் மீது வழக்கு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum