துனீஸிய நிவாரண உதவிக்குழுவின் காஸா விஜயம்
Page 1 of 1

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (27.12.2011) ரஃபா எல்லைக் கடவை மூலம் துனீஸிய மருத்துவ உதவிக் குழுவான 'அஹ்ரார்' காஸா வந்தடைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை காஸாவைச் சென்றடைய
வேண்டிய இந்த நிவாரண உதவிக் குழுவுக்கு நான்கு நாள் காலதாமதத்தின் பின்பே
காஸா செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
காஸா மருத்துவமனைகளுக்கு
வினியோகிப்பதற்காக சுமார் நான்கு தொன் எடையுள்ள மருந்துப் பொருட்கள்
மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் 11 செயற்பாட்டாளர்களைக் கொண்ட இந்த நிவாரண
உதவிக்குழு, கடந்த வியாழக்கிழமை துனீஸியாவிலிருந்து கெய்ரோவுக்குப்
புறப்பட்டது. எனினும், ரஃபா எல்லைக் கடவையில் நிலவிய "வழமையான" கெடுபிடிகள்
காரணமாக அவர்கள் காஸாவை அடைவதில் நான்கு நாட்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,
கடந்த செவ்வாய்க்கிழமை காஸாவை அடைந்த நிவாரணக் குழுவினர் காஸா மக்களால்
வெகுவிமரிசையாக வரவேற்கப்பட்டனர். மேற்படி செயற்பாட்டாளர்கள் காஸா
வைத்தியசாலைகள் மற்றும் சமூகநல நிறுவனங்கள் பலவற்றையும் பார்வையிடவுள்ளனர்.
பல வருடகாலமாக காஸாமீதான இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகையினால்
அங்குள்ள மக்கள் தம்முடைய அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள
முடியாமல் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றமையும், காஸா
மருத்துவமனைகளில் அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ
உபகரணங்களுக்கு மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றமையும்
குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், துனீஸிய மருத்துவ நிவாரண உதவிக்குழுவின்
வருகையானது காஸா மக்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமையும் என
பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். முன்னர் இந்தியாவிலிருந்தும்
காஸாவுக்கு நிவாரண குழு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவரின் காஸா விஜயம்
» காஸ்ஸா:பிரெஞ்சு நிவாரண கப்பலை இஸ்ரேல் சிறைபிடித்தது
» கலாநிதி அஹ்மத் பஹ்ஹாரின் ஓமான் விஜயம்
» மரணத்தின் விளிம்பில் தவிக்கும் காஸா நோயாளிகள்
» 'அரசியல் ரீதியாக இஸ்ரேலைத் தனிமைப்படுத்துவோம்!' –காஸா அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum