தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தீர்ப்பு கூறுவது பெரும்பான்மையினரின் விருப்பத்தின் அடிப்படையில் அல்ல – நீதிபதி கபாடியா

Go down

தீர்ப்பு கூறுவது பெரும்பான்மையினரின் விருப்பத்தின் அடிப்படையில் அல்ல – நீதிபதி கபாடியா  Empty தீர்ப்பு கூறுவது பெரும்பான்மையினரின் விருப்பத்தின் அடிப்படையில் அல்ல – நீதிபதி கபாடியா

Post by முஸ்லிம் Sun Jan 15, 2012 8:22 pm

மும்பை:பெரும்பான்மையினரின் விருப்பங்கள்
மற்றும் அரசியல் ஆகியவற்றில் இருந்து நீதிமன்றங்கள் சுதந்திரமாக
செயல்படவேண்டும் என்றும், நீதிபதிகள் பெரும்பான்மையினரின் அபிப்ராயத்தின்
அடிப்படையில் அல்லாமல், சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவேண்டும்
என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எஸ்.கபாடியா கூறியுள்ளார்.

மும்பையில் நானி பல்கிவாலா நினைவு
அறக்கட்டளையின் ஒன்பதாவது ஆண்டுவிழா சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
உரை நிகழ்த்தினார் அவர்.

அப்பொழுது அவர் கூறியதாவது:’அரசியலில்
இருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்படுவதுடன் நீதிமன்றங்கள்
பெரும்பான்மையினரின் விருப்பங்களில் இருந்தும் சுதந்திரமாக
செயல்படவேண்டும். ஏதேனும் ஒரு பிரிவினருக்கு எதிராக தீர்ப்பு வந்தால்
நீதிபதிகள் மீது அழுத்தம் உருவாகும் சூழல் ஏற்படுகிறது. சட்டம் என்பது
நேர்மையில் இருந்து மாறுபட்டது அல்ல. சட்டத்தில் பழுதுகள் இருப்பதை
அங்கீகரிக்கிறேன். ஆனால், நீதிபதிகளின் குணநலனின் பழுதுகள் ஏற்படுவது
பிரச்சனையை உருவாக்கும்.

ஜுடிஸியல் அக்கவுண்டபிலிட்டி மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறித்து ஏதேனும் நீதிபதிகளுக்கு
அதிருப்தியை ஏற்படுத்தினாலும் நீதிக் கட்டமைப்புடன் உள்ளார்ந்த நேர்மையுடன் நடப்பவர்களுக்கு அச்சமில்லை என கபாடியா கூறினார்.

பாராளுமன்ற தாக்குதலில் அநியாயமாக கைது
செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர் அப்சல்
குரு. இவர் மீதான குற்றத்திற்கு போதிய ஆதாரங்கள் இல்லாத போதும்
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டது. “The incident,
which resulted in heavy casualties, has shaken the entire nation and the
collective conscience of the society will be satisfied if the capital
punishment is awarded to the offender.” அதாவது collective conscience பெரும்பான்மையினரின் மன விருப்பத்தின் அடிப்படையில் உச்சபட்ச தண்டனையை அளிப்பதாக கூறியது.


அதைப்போல பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல்
வழக்கிலும் சட்டத்தையோ, ஆதாரங்கள், ஆவணங்களை ஆராயமல் நம்பிக்கைகள்,
புராணங்களின் அடிப்படையில்தான் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை 3
ஆக பிரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.


தீர்ப்பு கூறுவது பெரும்பான்மையினரின் விருப்பத்தின் அடிப்படையில் அல்ல – நீதிபதி கபாடியா  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum