”பாதுகாப்பு” வீரர்களால் உடையவிழ்த்து கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர்!(காணொளி)
Page 1 of 1

மேற்கு
வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் நகரத்தில் ஒரு இளைஞரை எல்லைப் பாதுகாப்பு
படையினர் நிர்வாணமாக்கி அடித்து உதைக்கும் காட்சி தொலைக்காட்சியில்
வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சார்ந்த சில வீரர்கள் அந்த இளைஞரின் கைகளையும் கால்களையும் கட்டி உதைத்து
சித்ரவதை செய்வதும், ஆடைகளைக் களைவதும் அந்தக் காட்சியில் தெரிகிறது.
இந்தச் சம்பவம் பங்களாதேஷ் எல்லையில் நடைபெற்றுள்ளது. இந்த இளைஞர்
பசுமாடுகளை கடத்துவதாக சந்தேகப்பட்டு அவரிடம் கையூட்டு கேட்டுள்ளனர். அவர்
தர மறுக்கவே அடித்து சித்ரவதை செய்துள்ளனர் எல்லை பாதுகாப்பு படையினர்.
அவரை அடித்து பின்னர் பங்களாதேஷ் எல்லையில் கொண்டு விட்டுவிட்டதாக
பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப்படை
மையம் இந்த ஒளிநாடாவை ஆய்வு செய்து இதில் சம்பந்தப்பட்டுள்ள எட்டு வீரர்களை
தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர். வீரேந்தர் திவாரி, விக்டர், தனஞ்செய்
குமார், ஆனந்த்சிங், அமர் ஜோதி, சஞ்சீவ் குமார், சுரேஷ் சந்த் மற்றும்
சுனில் குமார் ஆகியோரே இதில் சம்பந்தப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
105 வது படைப்பிரிவைச் சார்ந்த இவர்கள் மீது விசாரணை நடத்தவும்
உத்தரவிடப்பட்டுள்ளது. தாக்கப்பட்டவர் வங்காளதேசத்தைச் சார்ந்தவர் எனக்
கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு படைவீரர் இன்டர்நெட் கபேக்கு சென்று
பாடல்களை தரவிறக்கம் செய்ய தனது அலைபேசியைக் கொடுக்கும்போது அந்தக் கடையில்
இருந்தவர் இந்த ஒளிநாடாவைப் பார்த்து மற்றவருக்கு அனுப்பியதாக ஒரு தகவல்
தெரிவிக்கிறது. இன்னொரு செய்தியின்படி எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களே
இந்த ஒளிநாடாவை பசுக்களை கடத்துபவர்களை பயமுறுத்துவதற்காக அனைவருக்கும்
அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கிறது.
இந்திய வங்காளதேச எல்லையில்
பசுவைக் கடத்திச் செல்வது மிகவும் சாதாரணமான ஒன்று என இங்குள்ளவர்கள்
தெரிவிக்கின்றனர். 135 கிமீ உள்ள இந்த எல்லையில் 110 கிமீ மட்டுமே
வேலியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» என்னுடைய குடும்பம் கொடூரமாக கொல்லப்பட்டது – மோடி தண்டிக்கப்பட வேண்டும்
» பாகிஸ்தானிய அப்பாவி இளைஞர் அமெரிக்காவால் கொல்லப்பட்டார்
» காவலில் இளைஞர் மரணம் - காஷ்மீரில் பதட்டம்!
» சிறையிலிருந்து விடுதலையான ஃபலஸ்தீன் இளைஞர் வீடு மீது இஸ்ரேல் தாக்குதல்
» இஸ்லாத்தை தழுவியதால் தீவிரவாதியாக்க முயற்சி: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் இளைஞர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum