தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம் - உணர்வு!

Go down

ஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம் - உணர்வு!    Empty ஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம் - உணர்வு!

Post by முஸ்லிம் Mon Jan 23, 2012 6:31 pm

கடந்த
சில மாதங்களாக அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களும் போட்டிப் போட்டுக்
கொண்டு நேரடி களத் தொகுப்பு என்ற பெயரில் சில நிகழ்ச்சிகளை ஒளி
பரப்புகின்றன.




புலனாய்வு நிகழ்ச்சிகளின் சாயலில்,
‘நடந்தது என்ன’ என்பதை மக்களுக்குக் காட்டுகிறோம் என்ற பெயரில் இவர்கள்
செய்யும் தவறான செயல்கள், நாகரிக சமுதாயத்தை மீண்டும் மூட நம்பிக்கைப்
படுகுழிக்குள் தள்ளும் செயல்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மூட
நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தின் மூலம் தமிழகத்தில் இருக்கும் மக்கள்
இப்போதைக்கு கொஞ்சமேனும் பேய், பிசாசு என்பனவற்றையெல்லாம் மறந்து அதெல்லாம்
மூடநம்பிக்கை என்ற நிலையை ஓரளவிற்கு அடைந்து விட்டார்கள்.

இந்தத்
தந்திரத்தைக் கையாளும் தொலைக்காட்சி சேனல்கள் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச்
சென்று அங்கிருக்கும் மக்களிடம் பேய் எப்படி வந்தது, பிசாசு எப்படிச்
சென்றது என கதையளந்து இவர்களாகவே காட்சிகளைச் சித்தரித்து மக்களைக்
குழப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பேய் பிசாசெல்லாம்
கிடையாது என்று முடிவெடுத்துத் தெளிந்து விட்டவரின் மனநிலை, இந்த
நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது ஒருவேளை பேய் இருக்குமோ என்ற குழப்பமான
நிலைக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டுவிடும்.

சித்தரிக்கப்படும்
காட்சிகள் திகிலடைய வைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளதால், மக்கள் இதை
விரும்பிப் பார்க்கிறார்கள். அத்தோடு இந்தக் காட்சிகளை உண்மை என நம்பி
இதுபோல நமக்கும் எதுவும் வந்துவிடக் கூடாது என்ற நிலைக்கு மக்கள்
வந்துவிடுகின்றனர்.

அதன் பிறகு அவர்கள் குடும்பத்திலோ அல்லது
தொழிலிலோ ஏதாவது வித்தியாசமாகத் தென் பட்டால் அதற்கான பரிகாரம் வேண்டி
போலிச் சாமியார்களையும், போலி ஜோஸ்யர்கள் மற்றும் வாஸ்து, கல் என
போலித்தனம் செய்பவர்களையும் நாடிச் சென்று, தங்களின் காசு பணங்களை இழந்து
நிற்கின்றனர்.

இதெல்லாம் போதாது என்று சமீபத்தில் ஒரு தனியார்
தொலைக் காட்சி சேனல், முன் ஜென்ம வாழ்க்கையைத் தோண்டி எடுக்கிறேன் என்ற
பெயரில் மீண்டும் மக்களைக் குழப்பும் வேலையை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த
நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு பிரபலத்தை ஆழ்நிலை உறக்க நிலைக்குக் கொண்டு
சென்று அவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். கேள்வி கேட்பவர் தன்னை ஒரு
மருத்துவர் என்றும் சொல்லிக் கொள்கிறார்.

ஆழ்நிலை உறக்கத்திற்குச்
சென்றுவிடும் அந்தப் பிரபலத்திடம் இவர் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கத்
துவங்குகிறார். நீங்க இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர்
சம்பந்தமே இல்லாமல், நான் இப்போது திருப்பதி கோவிலில் இருக்கிறேன் என்று
சொல்கிறார். இன்னும் சில நிமிடத்தில் பழனி முருகன் கோவிலில் இருக்கிறேன்
என்று சொல்கிறார். இப்படியாகத் தொடர்கிறது இந்த நிகழ்ச்சியின்
முட்டாள்தனம்.

இது முடிந்து அவரிடம் இன்னும் கொஞ்சம் முன்னால்
செல்லுங்கள் எனக் கேட்க, அவர் இன்னும் முன்னால் சென்று தன்னுடைய முன்
ஜென்மத்தை அடைகிறாராம். அந்த ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள்
எனக் கேட்கப்படும் போது அந்த ஜென்மத்தில் நான் மானாக இருந்தேன், மயிலாக
இருந்தேன், பட்டாம்பூச்சியாக இருந்தேன் என பெருமையாகச் சொல்லிக்
கொள்கிறார்கள், ஆய்வுக்கு உட்படக் கூடியவர்கள். ஆனால் அதிலே வருபவர்களில்
ஒருவர்கூட நான் முன் ஜென்மத்தில் நாயாக இருந்தேன், கழுதையாக இருந்தேன்,
பன்றியாக இருந்தேன் எனச் சொல்வதில்லை. சொல்வதில்லை என்று சொல்வதைவிட
சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்று சொன்னால் சாலப் பொருந்தும்.

முன்
ஜென்மம் என்ற முட்டாள் தனமான விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கும்
தொலைக்காட்சி நிறுவனத்தினர் அதை வைத்து காசு பார்க்கும் வேலையைச்
செய்கிறார்கள். லாபம் கிடைத்தாலும் அதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற
நிலையாவது அதில் இருக்கிறதா என்றால் இல்லவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகக்
காட்டுமிராண்டி காலத்திலிருந்து நவீன காலத்திற்கு நாகரிகமான மனிதனாக
மாறிவிட்ட மக்களை மீண்டும் பழைய அறியாமைக் காலத்திற்குத் தள்ளிச் செல்லும்
கீழ்த்தர வேலைகளை இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்து வருகின்றது.

தொலைக்காட்சி
வழியாக எதைச் சொன்னாலும் நம்பும் மக்கள் இவைகளையும் கொஞ்சமும் ஆராயாமல்
அப்படியே உண்மை என நம்பி விடுகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளைச் சாதகமாகப்
பயன்படுத்திக் கொண்டு அதற்கு பரிகாரம் செய்கிறேன்என பல போலிகள் கிளம்பி
மக்களின் பொரு ளாதாரங்களுக்கு வேட்டு வைக்கும் வேலைகளில் ஈடுபடுவதற்கும்,
அதன் மூலம் பல பெண்களின் கற்பைச் சூறையாடுவதற்கும் இதுபோன்ற மூடநம்பிக்கையை
உருவாக்கும் செயல்பாடுகளே காரணம் ஆகும்.

உண்மையை மக்களுக்கு
வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய ஊடகங்கள் தங்களின் சுய நலனுக்காக
இதுபோன்ற முட்டாள் தனமான சம்பவங்களை ஒளிபரப்பி, அது குறித்த எவ்வித
விழிப்புணர்வையும் மக்களுக்குத் தெரி விக்காமல் சுயநலத்துடன் நடந்து
கொள்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

நன்றி: கீற்று

ஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம் - உணர்வு!    Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்திற்கு எதிரான மக்கள் உணர்வு:ஃபாரூக் அப்துல்லா
» உயர்வு வரும் ஒரு நாள் !
» முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த ஊடகங்கள்
» நார்வே:ப்ரெவிக்கின் சியோனிஷ தொடர்பை மறைக்க மேற்கத்திய ஊடகங்கள் முயற்சி
» இருட்டடிப்பு செய்யப்பட்ட பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு ஊடகங்கள் கொண்டுவருவதில்லை – சிறுபான்மை கமிஷன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum