நடைபாதைகளில் ஏழைகள் உறக்கம்: உச்ச நீதிமன்றம் கவலை
Page 1 of 1

வீடுகள் இல்லாத ஏழை மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தங்குமிட வசதி அமைத்துத் தருவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
வசிப்பிடம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. வட கிழக்கு மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில், தற்போது கடும் பனிப் பொழிவு நிலவுகிறது.
இந்த கடும் குளிரிலும், வீடுகள் இல்லாத ஏழை மக்கள், திறந்தவெளிகளிலும், நடைபாதைகளிலும் படுத்துத் தூங்குவது, கவலை அளிக்கிறது. நாகரிக உலகில், பொதுமக்கள் தூங்குவதற்கு இடமில்லாமல், நடைபாதைகளில் படுத்துத் தூங்குவது என்பது, கவலைக்குரிய விஷயம்
ஏழை மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர், இமாச்சல், உத்தரகண்ட், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உ.பி., பீகார் உள்ளிட்ட மாநில அரசுகள், இதுபோன்ற வீடுகள் இல்லாத மக்களுக்கு, இரவு நேரங்களில் தங்குவதற்கு தற்காலிகமான கூரை வசதிகளுடன் கூடிய வசதியை அமைத்துத் தர வேண்டும். மூன்று வாரங்களுக்குள் இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும்.
.
இந்த விஷயத்தில், மேற்கு வங்க மாநில அரசு, சரியாக செயல்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த விஷயத்தை அம்மாநில முதல்வரிடம் எடுத்துக் கூற வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை, அடுத்த மார்ச் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Similar topics
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» அயோத்தி தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
» அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு எதிரான கண்டனம் சரியே: உச்ச நீதிமன்றம்!
» போலி என்கவுண்டரில் ஈடுபடும் போலீசாரை தூக்கிலிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்!
» ஹேமந்த் கர்கரே குறித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum