உள்துறை அமைச்சர் முன்னிலையில் தீவிரவாத குழுக்கள் சரண்
Page 1 of 1

அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில், பல குழுக்கள் ஆயுதம் ஏந்தி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுப்போன்று செயல்படும் குழுக்களில் ஆதிவாசி மக்கள் படை, அனைத்து
ஆதிவாசி தேசிய விடுதலை ராணுவம், உள்ளிட்ட 9 அமைப்புகள் முக்கியமானவை.
இவர்களால், வட கிழக்கு மாநிலங்களில், ஏராளமான வன்முறை சம்பவங்கள்
நடந்துள்ளன.
மாநில அரசு இவ்வமைப்புகளை ஒடுக்குவதில் முனைப்பு
காட்டியதால், மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் போதிய கவனம் செலுத்த
இயலாததால், மாநில வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில்,
"இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள், ஆயுதங்களை கைவிட்டு, அமைதி வழிக்கு
திரும்ப வேண்டும்' என, மத்திய அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஒன்பது அமைப்புகளை சேர்ந்த, 1,885 தீவிரவாதிகள்
ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, சரணடைய முன் வந்தனர்.
அசாமில் உள்ள
கவுகாத்தியில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,
அசாம் முதல்வர் தருண் கோகோய், ராணுவ அதிகாரிகள் மற்றும் அசாம் டி.ஜி.பி.,
ஜெயந்த் என். சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, உள்துறை
அமைச்சர் சிதம்பரம் முன்னிலையில், 1,885 பேரும், தங்களின் ஆயுதங்களை
ஒப்படைத்து விட்டு சரண் அடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், " பல அமைப்புகளை சேர்ந்தவர்கள், ஆயுதங்களை
ஒப்படைத்து விட்டு, அமைதி வழிக்கு திரும்புவதாக உறுதி அளித்துள்ளனர்.
இந்நாள் நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்.
இன்று சரணடைந்தவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்யும்.
தீவிரவாதத்தை கைவிட்டவர்கள் சமுதாயத்தில் கண்ணியத்தோடும், கவுரவத்தோடும்
மற்றவர்களை போல சம உரிமையுடன் வாழ அரசு உத்தரவாதம் அளிக்கிறது.
அனைவரிடமும்,
அன்பாகவும், சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டும். வன்முறையால் எந்த
பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. கடந்த காலத்தை மறந்து விட்டு,
எதிர்காலத்தை பற்றி சிந்தியுங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்
கொள்ளுங்கள். . இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்

Similar topics
» உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார்!
» டிஜிபியாக லத்திகா சரண் மீண்டும் நியமனம்!
» நில மோசடி வழக்கு: எடியூரப்பா சரண்; பெங்களூர் சிறையில் அடைப்பு!
» ’எனது தந்தை உயிரோடு பிடிக்கப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்’-உஸாமாவின் மகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum